குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

ஆரியம் நடைமுறைகளை வென்றது எப்படி ?

21.12.2018-மேற்கு கங்கை வெளியில் உருவான பலியிடுதல் சடங்கு ஆரியர்களுக்கு உரியதும் மேய்ச்சல் குடி சமூகத்துக்கு உரிய பண்பாடு எனவும்இவர்கள் கால்நடைகளை திருடுதல் அதற்காக சண்டையிடல் மேய்ச்சல் நிலத்துக்காக சண்டையிடல் போன்ற செயல்களில் ஈடுபட்டு கொள்ளை பொருள்களை தமக்குள் பங்கிட்டுக்கொண்டனர்

இந்த கொள்ளைகள் சில கணங்களை செல்வம் படைத்ததாக பலம் கொண்டதாக மாற்றின கணங்களுக்குள் ஏற்ற தாழ்வு உருவானது புரோகிதம் செய்ய பிராமணர்களும் போர்களில் ஈடுபடவும் கொள்ளையிடவும் சத்ரியர் என்ற பிரிவும் உருவாணது

பெருவாரியான மக்கள் பழைய குல சமூக பெயர்களிலேயே விசு என்று அழைக்கப்பட்டார்கள் அதுவே பின்னர் வைசுயா என மாறியது

இது போன்ற போக்குகள் உலகம் முழுவதும் பொதுவாக இப்படித்தான் ஏற்படுகிறது இந்த வருணம் என்ற கருத்து இந்தியரிடம் இருந்து ஆரியர் எடுத்துக்கொண்டார்களா? அல்லது ஆரியரிடம் இருந்து இந்தியர் எடுத்துக்கொண்டனரா, இல்லை சுயேச்சையாக உருவாக்கிக்கொண்டனரா< என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியு வில்லை

சுயேச்சையாக மாறிகொள்ளவே அதிக வாய்ப்புகள் உள்ளதையே சமூக அறிவியல் சுட்டிக்காட்டுகிறது

குல சமூகங்களில் பூசாரியே குல தலைவனாக இருப்பான் குலம் வளர்ச்சி பெற ஆரம்பித்ததும் பூசாரிகள் சடங்கு செய்வதற்கு மட்டும் ஒதுக்கப்படுகிறார்கள் குலத்தின் தலைவனாக சிறந்த போராளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்

குல சமுகத்தின் வளர்ச்சிப்போக்கில் பூசாரிகள் சடங்கு செய்வதற்கு ஒதுக்கப்பட்டாலும் அவன் மூட நம்பிக்கைகளின் வழியாக குலங்களின் மீது செல்வாக்கு செலுத்துபபனாக குலத்தலைவனுக்கு வழி காட்டியாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறான்

அதேவேளை மக்களிடம் நம்பிக்கை பெற்ற சில போர்களில் சாதனை செய்த குல தலைவர்கள் இந்த புரோகிதருக்கு மேலானவனாக தம்மை மாற்றிக்கொள்ள முடியும் என்பதை சுதாசன் வசிட்டனை தலைமை குருக்களின் பதவியில் இருந்து நீக்கி விட்டு விசுவாமித்திரனை தலைமை குருவாக நியமித்துக்கொண்ட செயல் உறுதிபடுத்துகிறது

மேற்கண்ட போக்கை யூதர்களிடம் நாம் தெளிவாக பார்க்கலாம்

மோசசு ஆரம்பத்தில் தலைவனாகவும் பூசாரியாகவும் இருக்கிறான் வளர்ச்சிப்போக்கில் தனி பூசாரியையும் போருக்கு தலைமை தாங்க யோசுவாவையும் நியமித்தான

காலபோக்கில் ராணுவ வலிமை கொண்ட குல தலைவன் படிப்படியாக முழு அதிகாரத்தையும் எடுத்துக்கொள்வதும் இவனே அரசனாக மாறுவதும் நடக்கும் பொது நிகழ்வாகும்

முதலில் புரோகிதம் செய்பனே தலைவனாகவும் அடுத்த சமூக வளர்ச்சிப்போக்கில் புரோகிதமும் போரும் இரண்டு வெவ்வோரு நபர்கள் அல்லது குழுக்கள், தமக்கான வேலை பிரிவினையாக கொள்கிறார்கள்

இதில் படிப்படியாக ராணுவ தலைமையை கைபர்றிக்கொள்ளும் குழுக்கள் தம்மை சமூகத்துக்கு மேலான வர்களாக அரசன் என்ற அதி உயர் அதிகாரமாக மாறுவதையும் அந்த அரசனை கடவுளின் பிரதிநிதியாக மக்களை நம்ப வைக்கும் வேலையை புரோகிதர்களும் செய்பவர்களாக மாறி விடுகிறார்கள்

இதை யூதர்களின் வரலாற்றை ஆய்வு செய்வதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்

முதலில் பூசாரியே தலைவன்

அடுத்து பூசாரியின் கட்டளைப்படி நடக்கும் தலைவன்

அடுத்து பூசாரியின் ஆலோசனையை கேட்டு நடக்கும் தலைவன்

தாவீது பூசாரியின் கட்டளைப்படி நடக்கும் தலைவன்

ஆனால் சாலமன் பூசாரிகளுக்கு கட்டளையிடும் ஒருபிரதேச அரசனாக தன்னை மாற்றிக்கொள்ள முயற்சி செய்தான்

ஆகவே யூத புரோகிதர்களின் கட்டளையை மதிக்காமல் வேறு இன பெண்களை திருமணம் செய்தான் அவர்கள் கோவில்கள் கட்டிக்கொள்ளவும் இவனே வழிபாடுகள் செய்தும் மாற்று இனங்களின் கடவுள் வழிபாட்டை அங்கிகரித்தான்

இப்படி செய்வதன் வாயிலாக தன்னை குல தலைவன் என்ற நிலையில் இருந்து பிரதேச அரசனாக மாற்றிக்கொள்ளும் நிகழ்வை தொடங்கி வைத்தான்

அவனின் விருப்பத்தை அவன் சந்ததிகள் நிறைவேற்றாமல் எகிப்துக்கு அடிமையானதும் பாபிலோனின் நெபுகாத்த நேச்சருக்கும்

அவனுக்கு பின்னால் டேரியசு மன்னனுக்கும் அடிமையானதும் அந்த இனமே சிதறடிக்கப்பட்டதும் வேறு கதை

குல அரசில் இருந்து பிரதேச அரசுகள் உருவாகும் போக்குக்கு சாலமன் ஒரு நல்ல உதாரணம் என்பதை பார்த்தோம்

ஆரியர்கள் குல அரசுகளாகவே நீடித்தார்கள் பிராமிணன் சத்ரியன் என்று சமூகத்தில் மேட்டுக்குடி வர்க்கங்கள் உருவான போதும் அது ஒரு குலமாகவே நீடித்தது யுத்தம் என்றால் இப்போதும் குலம் முழுவதுமே கலந்து கொண்டது

காவல் பணிகள் கொள்ளைகளில் சத்ரிய ராணுவம் ஈடுபட்டது கொல்ளை முடிந்ததும் இந்திரனுக்கு பசுக்கள் பலியிடப்பட்டன கொள்ளை பொருட்கள் சத்ரிய பிராமண குழுக்களுக்கு இடையில் பங்கிடப்பட்டன

நல்ல உடல் திறமையுள்ள வீரர்கள் வைசுய குலத்தில் இருந்து சத்ரிய குலத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள் எனவே ஆரிய தந்தை வழி குடும்பங்கள் கொள்ளையில் நல்ல பங்குகளை பெற ஆண் குழைந்தகள் வேண்டி யாகங்கள் செய்ததை ரிக் வேதத்தில் நாம் காண முடியும்

காலப்போக்கில் வசதி படைத்த ஆரியக்குழுக்கள் நிலையான மேய்ச்சல் நிலத்தையும் தமது குல உறுப்பினர்களை கொண்டு விவசாயத்தில் ஈடுபட்டதும் நடந்துள்ளது

ஆரியர்கள் குசாணர் காலம் வரை பெரிய அளவிலான விவசாய பொருளாதாரத்தை கட்டி அமைக்கவில்லை இதன் காரணமாகவே அவர்களால் குல அமைப்பு சாராத ஒரு பிரதேச அரசை கட்டி அமைக்கவும் அதற்கான தனி ராணுவத்தை உருவாக்குவதிலும் தோல்வி அடைந்தார்கள்

பொதுவாக மேய்ச்சல் குடிகள் நிலையான அரசமைப்பை தோற்றுவிப்பது சற்று கடினமானதாகவே தோன்றுகிறது

மேய்ச்சல் தொழில் சார்ந்த யூதர்களும் ஆரியர்களும் தமது குல அரசுகளில் இருந்து வெளியேறாமலே மற்றவருக்கு அடிமையாகி போன வரலாறு மேய்ச்சல் தொழில் என்பது வரலாறு வழியில் மிக அதிகமான நேரங்களில் ஒரு தடையாக மாறி விடுவதை போல் தெரிகிறது

இதற்கு சில சமூகங்கள் மாற்றாகவும் இருக்கலாம்

இந்த ஆரியரின் கால்நடைகளை குதிரைகளை பலியிடும் சடங்குகள் மத்திய கங்கை வெளிக்கு எப்படி சென்றது என்பதையும் அதை எதிர்த்து பவுத்தமும் சைனமும் போராடிய கதைகளை அடுத்து பார்க்கலாம். ..... தொடரும்