குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நண்பர்களே கடவுள் என்ற கருத்து குறித்து ஆரியர் உருவாக்கம்.

20.12.2018-கிமு 1000 வாக்கில் மேற்கு கங்கை யமுனா நதிகளின் பகுதிக்கு ஆரியர்கள் குடிபெயர்ந்தனர் இது இன்றைய டில்லியில் இருந்து உபியின் அலகாபாத் வரை உள்ள நிலப்பகுதியாகும் இப்பகுதிகளில் தான் இவர்கள் பலம் பொருந்திய மேய்ச்சல் குடிகளாக மாறினர்.

குரு யனப்பதம் என்று உருவான இது டில்லியை சுற்றி உள்ள பகுதிகளை கொண்டது இவை அசுதினாபுரம் இந்திர பிரசுதம் என அழைக்கப்பட்டது

இன்னொன்று இன்றைய உத்தரகண்ட் பகுதியாகும் இதில் 5 குலங்கள் இணைந்து தங்களை ஒரு யனபதமாக அமைத்துக்கொண்டனர் இவர்கள் வடக்கில் காம்பிலாவையும் தெற்கில் ஆதி சேத்ராவையும் அதாவது இரண்டு தலை நகரங்களை கொண்டு ஆட்சி செய்தனர்

குருக்கள் இந்திய பூர்வகுடியான சூர சேனர்களுடம் திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்க வாய்ப்புள்ளது

இந்தசூரசேணர்களை சேர்ந்தவனே கிருசுணன் இப்பகுதிகளில் அதாவது துவாரகையில்கிமு 600ம் நூற்றாண்டில் இந்திய பூர்வீக குடிகளின் மண்பாண்டங்கள் அதாவது கருப்பு சிவப்பு வண்ண மண்பாண்டங்களும் BLACK and RED WARE ஆரியர்களின் PGW பாணைகளும் கலந்து காணப்படுகிறது

சூர சேனர்களை சேர்ந்த

கிருசுணனே இந்திர வழிபாட்டு முறையையும் கால் நடை பலியிடுதலையும் முதலில் எதிர்த்தவன் என்பதால்தான் இந்திர வழிபாடு அழிந்து கிருசுண வழிபாடு மேலொங்கியது

பிற்காலத்தில் இவன் 2000 மனைவிகளை கொண்ட பெண் பித்தனாக சித்தரிக்கப்பட்டது தனிக்கதை

ஆரியர்கள் மேய்ச்சல் குடிகள் ஆகையால் உணவுக்கு மிக பெருமளவில் கால் நடைகளை கொன்று இருப்பதை அட்ரேஞ்சிக்கராவில் கிடைத்த எலும்புக்குவியல்கள் சான்றாக உள்ளன

மேலும் இந்திரனுக்கும் அக்கினிக்கும் வருணனுக்கும் விதம் விதமாக பசுக்களை தேர்வு செய்து பலியிட்டனர்

விருந்தாளிகள் வந்தாலும் கால் நடைகள் கொல்லப்பட்டன விருந்தாளிகளை வேத இலக்கியங்கள் கால் நடைகளை அழிப்பவர்கள் எனக்கூறுகிறது

இறந்த பிணத்தை தூக்கி செல்லும்போதுகூட நாற்சந்திப்பில் கால் நடைகள் பலியிடப்பட்டன இப்படி கால் நடைகள் அழிக்கப்படுவதை எதிர்த்த இயற்கை வழிபாட்டை ஆதரித்தவனாக கிருசுணன் உருவகப்படுத்தப்பட்டான்

இதே காலத்தில் கிழக்கு கங்கை வெளி மத்திய கங்கை வெளி சமூகங்களான இந்திய பூர்வ குடிகள் மிகச்சிறந்த வேளாண் சமூகமாகவும் ஆரியருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்கலப்பைகளில் இரும்பை பயன் படுத்துவோராகவும் மாறி இருந்தனர்

எழுத்து வடிவ ஆதாரங்கள் இல்லாதகாரணத்தால் பவுத்தர்களின் ஓலை சுவடிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாலும் இலங்கையில் கிடைத்த ஒரு சில பவுத்த ஓலை சுவடிகளை வைத்தே இந்திய பூர்வகுடிகளின் வரலாறை அறிய முடிகிறது

நமக்கு தொல்லியல் ஆதாரங்களே உண்மையான ஆதாரங்களாகும் அப்படிபார்த்தால் ஆரியர் கிமு 800 களில் உருவாக்கிக்கொண்ட குல சமூகங்கள் இந்திய பூர்வகுடிகளால் கிமு 2000 க்கு முன்பே உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்

நான் கூறுவது சிந்து வெளி நாகரிகத்தை தவிர்த்த நாகரீகங்களையே ஏனெனில் உலகில் முதன் முதலாக பயிர்த்தொழில் செய்தவர்கள் மத்திய கங்கை வெளி மக்கள் ஆவர்

மேலும் உலகில் முதன் முதலாக இரும்புக்கலப்பைகளை பயன்படுத்தியவர்களும் இவர்களே ஐரோப்பா கிமு 2000 ல் கற்காலத்தில்தான் இருந்தது

அரிசி அதாவது புரோசோ சொட்டாவா பயிரிடும் ரகம் கிமு 8000 ல் கங்கை வெளியில் பயிரிடப்பட்டது

இது சீனாவில் அரிசி பயிரிட்ட காலத்தை ஒத்ததாகும் ஏனெனில் முதல் முதலாக அரிசி பயிரிட்டவர்கள் சீனர்களே ஆனால் உலகின் முதல் விவசாயிகள் சிரியரோ சீனரோ அல்லர் இந்தியர்

இப்படி வளர்ந்து இருந்த இந்திய சமுதாயங்கள் குல அமைப்புகளில் இருந்து பிரதேச அரசுகளாக மாற ஆரம்பித்தன இதன் காலம் கிமு 800ல் இருந்து கிமு 600 ஆகும் புத்தரின் சம காலமாகும்

குல அரசு என்றால் ரத்த பந்தம் கொண்ட அல்லது ரத்த பந்தத்தை ஏற்படுத்திக்கொண்ட மக்கள் வாழும் குல அரசியல் நிலவியல் அமைப்பாகும்

பிரதேச அரசு என்பது யார் எந்த குலமாக இருந்தாலும் அந்த அரசின் நிலப்பரப்பில் வாழ்ந்தால் அந்த அரசின் குடி மகனே என்ற உரிமையை அளித்தன

இது சாரத்தில் குல அமைப்புகளில் இருந்து மனித சமூகம் முன்னேறுவதையும் பழைய கட்டுக்கோப்புகள்: உடைக்கப்படுவதையும் காட்டுகிறது இது மிக கொடுரமான முறையில் நிறைவேறியது

இக்காலத்தின் தேவையை ஒட்டி உருவான மதங்களே அயீவிகம் புத்தம் சைனம் அனைத்தும் இவற்றுக்கும் ஆரியர்களுக்கும் எந்த உறவும் இல்லை

இவை உண்மையாகவே ஆரிய குல ஆட்சி பகுதிகளில் உருவாக வில்லை இவை மத்திய கங்கை சமவெளிகளில் பிரதேச அரசுகளின் உருவாக்கத்துடன் இணைந்து வளர்ந்தன

இதேகாலத்தில் ஆரியர்கள் பலியிடும் சடங்குகளை மட்டுமே செய்து கொண்டு இருந்தார்கள் அவர்கள் பகுதியில் மதம் என்ற கருத்தே தோன்றவில்லை

ஆரியர்களின் பலியிடும் சடங்கு மேய்ச்சல் தொழிலை அடிப்படையாக கொண்டதாகவும் இந்தியர்களின் மத உருவாக்கம்முன்னேறிய வேளாண் தொழிலும் வர்த்தகமும் மேலோங்கி குல அரசுகள் பிரதேச அரசுகளாக மாறும் சமூக அடிப்படையை கொண்டதாகும்

இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு அடுத்த பதிவுகளில் காணலாம்

தொடரும்