குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

உலகின் முதல் கப்பல் அணுமின் நிலையம் அமைத்து சாதனை!!

15.12.2018-இரசியாவில் உள்ள ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி அமைப்பின் மூலம்., உலகத்தின் முதலாவது மிதக்கும் அணுமின் நிலயமானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணுமின் நிலையத்திற்கு “அகடமிக் லோமோனோசோவ்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டு கப்பல் போன்று தோற்றமளிக்கிறது.

இந்த மிதக்கும் அணுசக்தி நிலையம் குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தபோது., உலகத்தின் முதலாவது கப்பல் போன்ற மிதக்கக்கூடிய அனுசக்தி நிலையத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்.

இதன் மூலம் 10 விழுக்காடு அளவிலுள்ள திறன் அடிப்படையில் அணுஉலை தொடங்கப்பட்டு பின்னர் இரசியாவின் பெவெக் நகருக்கு., இலையுதிர் காலம் தொடங்குவதற்குள் உற்பத்தியை தொடங்கும் என்று தெரிவித்தார். மேலும் இதன் மூலம் தொலைதூரத்தில் இருக்கும் கிராமங்களுக்கும் மின்விநியோகம் எளிதில் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

மேலும்., இந்த அணுமின் நிலையத்தின் மூலம் இரசியாவின் ஆர்டிக் பகுதிகள் மட்டுமல்லாமல்., உலகம் முழுவதும் சிறிய அளவிற்கு தேவைப்படும் மின்சார விநியோகத்திற்கு இதனை உபயோகம் செய்துகொள்ளலாம். அந்த வகையில்., அணுசக்தி தொழில்நுட்பத்தில் இரசியாதான் முதலிடத்தில் இருக்கும் என்று தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.