குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் Department of Maritime History And Marine Archaeology துறையின் நோக்கங்

கள்-29.11.2018-

1. தமிழ்நாடு கடற்கரையோரம் பாதியாகவோ, முழுவதுமாகவோ நீரில் மூழ்கிப்போன பழமையான துறைமுக நகரங்களை பற்றிய உண்மைகளை வெளிக்கொணருவது.

2 .கடலின் உடைந்துபோன பழங்கால கப்பல்களின் பாகங்களை மீட்டு, பாதுகாப்பது.

3. தொன்மையான கடல் வழிகாட்டும் நுட்பத்தை ஆராய்வது.

4. படகு கட்டும் பழமையான நுட்பத்தை ஆய்வது.

5. தொல்லியல் சான்றுகளைக்கொண்டு தொன்மையான கடல் எல்லைகளை வரைவது.

6. முத்துக்குளிக்கும், சங்கு எடுக்கும் தொன்மையான பண்பாட்டை, அறிவியலை ஆராய்வது.

ஆகிய மிக முக்கியமான நோக்கங்களுக்காக 1983 ம் ஆண்டு தொடங்கப்பட்டதே இந்தத்துறை.

இத்தனை ஆண்டுகளில் இந்த நோக்கங்களுக்கான செயல்பாடுகள் முழு அளவில் நடைபெற்று இருந்தால் இந்நேரம் கடல் கொண்ட தென்னாடு - குமரிக்கண்டம் பற்றிய அனைத்து சான்றுகளும், பழந்தமிழர், தொன்ம வரலாற்று ஆவணங்களும் கிடைத்திருக்கும்.

மாறாக இத்துறை இத்தனை ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகளாகக் கூறிக்கொள்பவை...

1 .இந்தத்துறை இதுவரை 15 கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், துவக்குனருக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி இருக்கிறது.

2 . துறையின் ஆசிரியர் குழுவினர் இதுவரை ஐந்து Project களை முடித்திருக்கிறார்கள்.

3 . இதுவரை 30 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வளவுதான்.

எத்தனை கடல் சார் ஆய்வாளர்களை இத்துறை இதுவரை உருவாக்கியுள்ளது என்பது பற்றிய விவரங்கள் இல்லை.

ஆக, தமிழ்நாடு, தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்திலேயே தமிழின் தொன்மை பற்றி ஆராய துறை இருந்தும், நிதி கிடைக்கப்பெறும் துரும்பைக்கூட அசைக்காமல் இருக்க ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும்....

அது....

"ஆய்வுகள் முறையாக நடத்தப்பட்டால் தமிழரின் பண்டைய, தொன்ம அறிவியில் சார்ந்த, அறிவார்ந்த வரலாறு வெளிவந்துவிடும்" என்பதாகத்தானே இருக்க முடியும்?

 

பின்குறிப்பு:

இந்தப்பட்டியலில் NIOT உடன் இணைந்து 2005 ம் ஆண்டு பூம்புகாரில் நடத்தப்பட்ட ஆய்வு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது அல்லது வெளிப்படுத்தாமல் விடப்பட்டுள்ளது. இதில் இருந்தே துறை உறங்கிக்கொண்டிருப்பதின் காரணம் வெட்ட வெளிச்சமாக விளங்குகிறது.

-விஷ்வா @ டி.எம்.விஸ்வநாத்