குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

சிந்து முதல் எகித்துவரை பிரமிட் கட்ட கண்ணன் சாத்தன் ஆகிய தமிழர் உதவினர்!

27.11.2018-சிந்து சமவெளி தமிழர் நாகரீகம் என்பதை ஆதாரத்தோடு தெரியப்படுத்திய ஐராவதம் மகாதேவன் அவர்கள் இன்று காலமானார்ஐராவதம் மகாதேவன் அவர்கள் காந்தி மகான் பிறந்த அதே அக்டோபர் 2 ம் தேதி இன்றைய மியான்மரில் பிறந்தார்.சிந்து சமவெளி நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்னும் உண்மையை முதன் முதலில் வெளிக்கொண்டு வந்தவர் இவர் தான். பண்டைய மன்னர் காலத்து நாணயங்கள், பனை முத்திரை போன்ற அக்கால அரசு முத்திரைகள், பல்வேறு கல்வெட்டுக்கள், செப்பேடுகளை இவர் ஆராய்ந்து இருக்கிறார். இவர் பன்முக திறமை கொண்டவர். சுமார் 1961 இல் ஆரம்பித்தது இவரின் கல்வெட்டு ஆய்வு பயணம்.

தமிழர் நாகரீகம், பண்பாடு. கலாச்சாரம் குறித்த பல விஷயங்களை இவர் மீட்டெடுத்து இருக்கிறார்.

இவர் ஒரு வக்கீல் + கலெக்டர். 1953 ஆம் ஆண்டு IAS தேர்வில் வெற்றி பெற்ற இவர் கோவை கலெக்டராக சில ஆண்டுகள் பணியாற்றினார். நேர்மைக்கு பெயர் போன இவர் 1960 முதல் 1980 வரை பல்வேறு அரசு பணிகளில் இருந்தபடியே கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பல கல்வெட்டுக்களை ஆய்வு செய்தார். வெளிநாடுகளில் இருந்து இவருக்கு லகரங்களில், கோடிகளில் சம்பளம் தரும் வேலைகள் வந்தும் அவற்றை எல்லாம் உதறி தள்ளினார். காரணம் வெளிநாடு சென்றால் நினைச்ச பொழுதெல்லாம் கல்வெட்டு ஆராய்ச்சி செய்ய முடியாதே

1980 தில் இவர் அரசு வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் அதன்பின்னர் தினமணியின் ஆசிரியராக சில ஆண்டுகள் இருந்தார்.

இவர் சிந்து சமவெளி நாகரீகத்தை மட்டும் ஆராயவில்லை உலகம் முழுவதும் இருக்கும் பல தமிழ் அடையாளங்களை ஆராய்ந்து வெளிக்கொண்டு வந்தவர் இவர்.

பத்மசிறீ விருது, தொல்காப்பியர் விருது முதலான பல உயரிய விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

1837 இல் லண்டன் ராயல் ஏசியாடிக் சொசைட்டியில் professor ஹீத் என்பவர் முக்கியமான ஒரு ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தார் அதில் அவர் என்ன சொன்னார் என்றால் கிரேக்கர்கள் மற்றும் எகிப்தியர்கள் இந்தியர்களிடம் இருந்து தான் இரும்பை உருக்கி அதன் மூலம் பல பொருட்களை செய்யும் அந்த முறையை கற்று கொண்டார்கள்.

இரும்பை கண்டு பிடித்து அந்த இரும்பை எவ்வாறு? பயன் படுத்துவது என்பதை உலகிற்கே சொன்னவர்கள் தமிழர்கள் தான்.

தாமிரபரணி கரை ஓரம் இருக்கும் ஆதிச்சநல்லூர் நாகாரீகம் 10 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது அங்கே இரும்பால் செய்யப்பட்ட சிறிய பொருட்கள் முதல் பிரும்மாண்ட கப்பல்கள் வரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, மேலும் பல தங்க ஆபரணங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்து பிரமிட் உலக அதிசயங்கள் 7 இல் ஒன்று என்பதும் அது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதும் உங்கள் அனைவருக்குமே தெரியும்.

அன்று கண்ணன். சாக்தன் என்னும் இரண்டு தமிழர்கள் கடல் வழியாக பயணம் செய்து எகிப்தில் ஒரு பெரிய ஸ்டீல் இண்டஸ்ட்ரியவே உருவாக்கி பிரமிட்கள் உருவாக உதவி செய்திருக்கிறார்கள்.

தமிழர்களின் இரும்பு தொழில் நுட்பம் தான் அங்கே பிரமிட்களை உருவாக்கியது. அதை எகிப்து மக்கள் நன்றியோடு கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார்கள்.

தமிழர்களின் உளி தான் எகிப்து பிரமிட்களை செதுக்கியது என்பதை ஆதாரத்தோடு வெளியிட்டு அவற்றை நவம்பர் 21 ம் தேதி The Hindu பத்திரிகையில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் எழுதினார்.

ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக

நாளும் காலை 8.15 க்கு zee தமிழில் ஒளிபரப்பாகும் தெய்வீக திராவிடம் நிகழ்ச்சியில் அகழாய்வு மூலம் கிடைத்த தமிழர்களின் தொன்மைகள் குறித்தும், தமிழர்களின் வீரம், கலாச்சாரம், பண்பாடு குறித்தும் உலகம் முழுவதும் தமிழ் பெயரில் இருக்கும் பல ஊர்கள் குறித்தும் இனி ஒளிபரப்படும்

ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன்.

அவர் பல ஆண்டுகள் வசித்ததோ ஆதம்பாக்கத்தில் அதாவது நான் இருக்கும் நங்கநல்லூருக்கு ரொம்ப பக்கத்தில் ஆனால் ஒருமுறை கூட அவரை நேரில் சந்தித்து அவரின் ஆசியை பெறமுடியாத பாவியாக நான் இருந்து விட்டேன் என்னும் வேதனையோடு