குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, கார்த்திகை(நளி) 27 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வல்லாரையில் உள்ள நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியாதா?

22.09.2018-இலகுவாக வீடுகளிலேயே கிடைத்தும் வல்லாரை கீரையில் பல நன்மைகள் கொட்டிக்கிடப்பதாக மருத்துவபூர்வமான நிரூபிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வல்லாரையில்

இரும்புச்சத்து,

சுன்ணாம்புச்சத்து,

வைட்டமின் ஏ,

வைட்டமின் சி

தாது உப்புகள்

ஆகியவைகள் நிறைந்து காணப்படுகின்றது.

இந்த சத்துக்கள் இது இரத்தத்திற்க்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

வல்லாரையின் பயன்கள்?

தோல் வியாதிக்கு மிக சிறந்த மருந்து.

வாரம் ஒருமுறை சாப்பிட்டு வர தோல் சம்பந்தமான வியாதி குறையும்

பச்சையாக சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்படையும்.

மாலைக்கண் நோய் குணமாகும்

வல்லாரை கீரை மற்றும் பசும்பால் சேர்த்து உண்டு வர வேண்டும்.

ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.

இதனை சாப்பிடுவதால் ஞாபகசக்தி பெருகும்.

புத்தி கூர்மையாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

மலச் சிக்கலைப் போக்கும்.

வயிற்றுப் புண் மற்றும்  குடல்புண்ணை ஆற்றுகிறது

நரம்புகள் பலமடையும்.

சாம்பார் செய்யும் முறையில் செய்து, வாரம் இரண்டு முறைகள் சாப்பிட வேண்டும்.

வீக்கம், கட்டிகள் மறையயும்.

இதன் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி,

வீக்கம், கட்டி மீது கட்டிவர வேண்டும்.