குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

யோ.புரட்சியின் கவிதை :-சி.வி விக்னேசுவரன்.


சில தமிழர் இதயங்களில்ஒரு போராளி.

சில தமிழர் இதயங்களில்

ஒரு வெறும் ஆளி.

சிலர் சொல்வர்

இவர் தமிழ் வழிகாட்டி.


சிலர் சொல்வர்

இவர் யாருக்கோ வழிகாட்டி.


சிலர் சொல்வர்

இவரால் விடுதலை என்று.


சிலர் சொல்வர்

இவரால் போய்விடும்


விடுதலை என்று.


சிலர் சொல்வர்

ஏதாவது இவர்

பெற்றுத் தருவாராம்.


சிலர் சொல்வர்

இருந்ததையும் இவர்

கொடுத்திடுவார் என்று.


சிலவர்க்கம் சொல்லும்

இவர்

தனிநாட்டுப் பிரியரென்று.


சிலவர்க்கம் சொல்லும்

இவர்

தமிழ்த்தேச எதிரியென்று.


சிலர் சொல்வர்

இவரின் வெற்றி

தமிழர் வெற்றி என்று.

சிலர் சொல்வர்

இவரின் வெற்றி

தமிழின் எதிரிகளின்

வெற்றி என்று.


இவரின் காலம்

பொற்காலம் ஆகுமா?

இல்லை

தமிழர்க்கு இதுவே

கற்காலம் ஆகுமா?

இவர்

ஏதேனும் நகர்த்துவாரா?

இல்லை

இவரை யாரேனும்

நகர்த்துவார்களா?


ஆரம்பத்திலேயே

அடி சறுக்குவாரா?

இல்லை

ஆரம்பத்திலேளே

அடி கொடுப்பாரா?


தேர்தல் காலத்தில்

சீறிய சீற்றம்

இப்போதும் தொடருமா?


இல்லை வெறும்

சிரிப்பு மட்டும் நீளுமா


ஏதேனும்

கிடைக்கச் செய்வாரா?


இல்லை

இருந்ததையும்

கொடுத்து விடுவாரா?


ஆயிரமாய் கேள்விகள்

இந்த

அரசியல் தலைமைமீது.


அவருக்கும் சுமைகள்

ஆயிரமாய் தலைமீது.


ஒன்று உண்மை

தமிழர்கள் நீதிபதிகள்.

நிரபராதியை விடுவிக்கவும்

குற்றவாளியை தண்டிக்கவும் தெரிந்தவர்கள்.

காலம் கடந்தாவது………


யோ.புரட்சி

 

உள்ளூராட்சி மன்ற தேர்தல்-இந்த தேர்தல் முறை புரியாதவர்கள் இதனைக் கவனிக்கவும்!

கலப்பு முறை என்றால் என்ன?

அது எப்படி கணக்கு பார்க்கின்றார்கள்?

இந்த பெண்களும் கட்டாயம் போகவேண்டும்! அதனுடைய விளக்கம் என்ன?


இதெல்லாம் நமக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் நண்பர்களே ..இல்லாது போனால் இவர்கள் எங்களின் தலையில தேங்காய் உடைச்சிட்டு போய்டுவார்கள்...(எங்கள் தலையில் மிளகாய் அரைத்திட்டு  போயிடுவார்கள்)


இதுல ஒரு சீன வித்தையும் இல்லை மிக மெதுவாக  விளங்கிக் கொள்ளலாம்!


இப்ப உதாரணத்துக்கு ஒரு ஊரை எடுத்துக்கொண்டால். அதில் ஒரு 12 வட்டாரம் இருக்கும் என்று எடுத்துகொள்ளுங்கள். இப்ப இந்த கலப்பு முறையில எப்படி வரும் என்று பார்க்கலாம்.


முதல்ல வட்டாரம் எல்லாம் கூட்டி 60 சதவீதமாக கணக்கெடுப்பாப்பார்கள்; பின் அத்துடன் சேர்த்து விகிதாசர முறையிலும் 40 சதவீதம் தெரிவு செய்வார்கள்.


அதாவது எங்கள் மொழியில் சொல்ல போனால், 12 வட்டாரத்துக்கும் 12 பேர், அத்துடன் சேர்த்து மேலதிக எட்டு  8 உறுப்பினர்கள்! அப்படியென்றால் மொத்தம் 20 உறுப்பினர்கள் சபைக்கு தெரிவாகின்றார்கள்!!


சரியா அது தான் கணக்கு! இப்ப தேர்தல் நடக்குது.


ஒவ்வொரு வட்டாரத்துலையும் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை போடும். நம்ம விரும்புற கட்சிக்கு வாக்கு போடுவோம். இப்ப அதுல எந்த கட்சி அதிகமாக வாக்கு எடுக்கின்றதோ அந்த கட்சி அந்த வட்டாரத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.


அப்ப அந்த 12 பேரையும் தெரிவுசெய்து ஆயிற்று!


சரி இப்ப மற்ற 8 உறுப்பினர்கள் எப்டி தெரிவு செய்யப்பயடுவார்கள்?


அதுக்கு என்ன செய்வார்கள் என்றால் நண்பர்களே,


எல்லா வட்டாரத்துலையும் எல்லா கட்சிகளும் எடுத்த மொத்த வாக்குகளை கூட்டுவாங்க. அதாவது ஊர்ல அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளை கூட்டுவாங்க.


உதாரணத்துக்கு அப்டி கூட்டி ஒரு 15,000 வோட்டுகள் வருது என்று எடுத்துக்கொள்வோம்!


இப்ப அந்த 15,000 வாக்கையும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையான 20 ஆல் பிரித்தால் 750 வரும்.


இப்ப அந்த 750 வாக்கு தான் ஒரு உறுப்பினர் தெரிவாகின்றமைக்கான ஆகக்குறைஞ்ச அடிப்படைவாக்கு! சரியா?


இப்பொழுது என்ன செய்வார்கள் என்றால்,


ஒவ்வொரு கட்சியும் எல்லா வட்டாரங்களையும் சேத்து மொத்தமா எத்துன எத்துன வோட்டு எடுத்திருக்கு என்று பார்ப்பாங்க.


உதாரணத்துக்கு  ஓர் கிராமசபையை  எடுப்பம். அந்த கட்சி எல்லா வட்டாரங்களையும் சேர்த்து ஒரு 6000 வாக்குகளை பெற்றிருக்கு என்று வச்சிக்கொள்வோம்.


இப்ப இந்த 6000 வாக்குகளிற்க்கும் எத்தனை உறுப்பினர்கள் கிடைக்கும் என்று கணக்கு பார்ப்பார்கள். அப்படி என்றால், இந்த 6000 ஐயும் 750 ஆல் பிரிப்பார்கள். அப்படிப்பிரிச்சா 8 வரும். அதனுடைய அர்த்தம் என்ன என்றால் கிராமசபைக்கு மொத்தம் 8 உறுப்பினர்கள் தெரிவாகவேண்டும்என்பதாகும்.




இப்ப எத்தன வட்டாரத்துல வெற்றி பெற்றிருக்கு என்டு பார்ப்பாங்க. உதாரணத்துக்கு அவங்க 5 வட்டாரத்துல வெற்றி பெற்றிருந்தால், அந்த ஐந்தையும் கழித்துவிட்டு அவங்களுக்கு போய் சேர வேண்டிய மிச்சம் 3 இடம் அந்த மேலதிக  பட்டியலில் இருந்து வழங்கப்படும்.


அதோட கேம் ஒவர்!


இன்னம் ஒரு உதாரணமும் சொல்ல வேணும்.


இப்ப ஒரு சுயேட்சை குழு எலக்சன்ல நிக்கிது என்று வச்சிகோங்க. இப்ப அவங்க ஒரு வட்டாரத்துலயும் வெற்றி பெறல்ல என்று எடுப்பம்.


ஆனால், எல்லா வட்டாரங்கலைளையும் சேத்து அவங்களுக்கு ஒரு 800 வாக்கு கிடைச்சிருக்கு என்று எடுத்தால், அவங்களுக்கும் மேலதிக பட்டியலில் இருந்து ஒரு இடம் வழங்கப்படும். ஏன் என்டால் அவங்க ஒரு ஆசனத்துக்கான ஆகக்குறைஞ்ச வோட்டு எண்ணிக்கையான 750 எடுத்திருக்காங்க!!


ஆகவே இதுல எல்லா கட்சிகளுக்கும் எல்லா வகையிலையும் வெற்றி பெறலாம்.


ஒரு கட்சிக்கு ஒரு வட்டாரத்துல மட்டும்தான் வாக்கு இருந்தாலும் ஆசனம் கிடைக்கும் வாய்ப்பிருக்கு. அப்டி இல்லாம ஊருக்குள்ள பரவலாக வாக்குகள் இருந்தாலும் ஆசனம் கிடைக்கும் வாய்ப்பிருக்கு.


இதுல பட்டியலில் தயாரித்ததில் இன்னொரு கருவும் இருக்கு. அது என்ன என்றால்,


இப்ப ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் ஒவ்வொரு ஆள் நியமக்கப்பட்டு ஒரு பட்டியல் போடுவாங்க தானே?


ஆமாம்!


அதுக்கு மேலதிகமாக இன்னுமொரு மேலதிக பட்டியலில் நிரப்பி கொடுக்கப்படும். அதாவது எங்களுக்கு பட்டியலில் இடத்திற்கு கிடைக்கும் பட்சத்தில் நாங்க இதுல இருந்து ஆக்கள் நியமிப்போம் என்று கொடுப்பாங்க.


ஆனா அதுல உண்மை என்ன என்றால், கட்டாயம் அந்த பட்டியலில் இருந்து தான் மேலதிக இடத்திற்கு  ஆக்கள் போடனும் என்று கட்டாயம் இல்ல. வட்டாரத்துல தோல்வியடைந்த ஆக்களையும் போடலாம்.


சரியோ அவ்வளவுதான் பொருள்.


சரி இப்ப, அந்த பெண்கள் ஆசனங்கள் தொடர்பான விளக்கம் என்ன?


கட்டாயம் 25 சதவீதம் சபைக்கு பெண்கள் நியமிக்கப்படவேணும் என்று சொல்றாங்களே அப்படி பார்த்தால் அந்த 20 ஆசனங்களில் 5 ஆசனங்கள் பெண்களா இருக்கனுமா? அப்டின்னு நீங்க யோசிக்கிறது நியாயம்.


ஆனால், இதை பற்தி எல்லா கட்சிகளும் பயப்பட தேவையில்லை மக்களே!.


ஏன் என்றால்! 3 ஆசனங்களுக்கு மேலதிகமாகவும் மொத்த வாக்குகளில் 20% ஆன வாக்குகளுக்கு மேலதிகமாகவும் பெறுகின்ற கட்சிகள் மட்டும்தான் அந்த கணக்குக்குள் உள்வாங்கப்படுவார்கள்.


ஆகவே அந்த பட்டியலில் வாற கட்சிகளில் பெண்கள் வெற்றி பெறாத பட்சத்தில், அவர்களின் மேலதிக பட்டியலில் கட்டாயம் பெண்கள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.


சில நேரங்களில் பெண்கள் எண்ணிக்கை 25%ஐ விட குறையவும் வாய்ப்பிருக்கு.


கட்சிகள் எடுக்கன்ற ஆசனங்களின் நிலைப்பாட்டை பொறுத்து தேர்தல் ஆணையம் அதனை அனுமதிக்கும்.


இதுதான் அந்த விளளக்கம்.