14.12.2017-நீரில் இலகுவாகப் பயணம் செய்யக் கூடிய மிதியுந்து வண்டி தென்மராட்சி இளைஞரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மறவன்புலவு பகுதியை சேர்ந்த பிரபாகரன் இளைஞரே குறைந்தளவிலான வளங்களை பயன்படுத்திமிதக்கும் மிதியுந்தை உருவாக்கியுள்ளார்.
சக்கரங்களுக்கு பதிலாக நெகிளி(பிளாஸ்ரிக்கினாலான ) கொள்கலன்களை இணைத்து குறித்த மிதியுந்து உருவாக்கப்பட்டுள்ளது.ஒருவார கால உழைப்பில் உருவாக்கப்பட்ட மிதக்கும் சைக்கிள் பிரபாகரனின் பிறந்தநாளான இன்று நாவற்குழி பாலத்துக்கு அருகில் உள்ள நீர்ப்பரப்பின் மேல் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.பிரதேச மக்கள் பலரும் குறித்த கண்டு பிடிப்பினை ஆச்சரியத்துடன் பார்வையிட்டதுடன்பிரபாகரனுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.மிதக்கும் மிதியுந்து உருவாக்க உதவிசெய்த கைதடி கயமுகன் வெல்டிங் நிறுவனத்தினரும்பிரதேச இளைஞர்களுக்கும் பிரபாகரன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இதைவைத்துமேற்குலகம் அழகான மிதக்கும் மிதியுந்தை தயாரித்து உலகிற்கு விற்கும் இதை கண்டு பிடித்த பிரபாகரனுக்கே விற்பனை செய்யும். மாகாணசபை இலங்கை இதைக்கருத்தில் கொண்டுஇந்த எண்ண உருமத்தின் மூலும் இந்த இளைஞனுக்கான வருமானத்தை பெற்றுக் கொடுக்க சட்ட ஏற்பாடுகளைச் செய்யவேணும். பாராட்டுகளை அரச அளவில் கொடுத்து உலகதரக்கணடுபிடிப்பாளனாக மாற்றவேணும். இப்படித்தான் தமிழனின் கண்டுபிடிப்புகள் வெள்ளையன் கண்டு பிடிப்புகளானதுஎன்பதை குமரிநாடு.கொம் இணையம் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.