குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, ஆனி(இரட்டை) 26 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

3 நாட்களில் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டுமா? இத சாப்பிடுங்க!

07.12.2017-உங்கள் உடலும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு செரிமானமும், செரிமான மண்டல உறுப்புகளும் சுத்தமாக இருக்க வேண்டும். முக்கியமாக பெருங்குடலும், அதன் இயக்கமும் சிறப்பாக இருந்தால்,  உடல்நலம் இயல்பாகச் சிறப்பாக அமையும்.

தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

மூன்று நாட்களில் பெருங்குடலை முழுமையாக சுத்தம் செய்ய உதவும் சாலட் பற்றி இங்கு காணலாம்…

குறிப்பு!

இந்த சாலடை நீங்கள் தொடர்ந்து மூன்று நாள் உட்கொண்டு வந்தால் இது உடலின் பி.எச் அளவை சமநிலைப்படுத்தி பெருங்குடல் சுத்தமாகவும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும் வழிவகுக்கும்.

தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

வைட்டமின் சாலட்!

பெருங்குடல் சுத்தம் செய்ய பயனளிக்கும் இந்த வைட்டமின் சாலட் தயாரிக்க தேவையான பொருட்கள்…

முட்டைக்கோஸ்

பீட்ரூட்

கேரட்

எலுமிச்சை சாறு

ஆலிவ் எண்ணெய்

செய்முறை!

தேவையான பொருட்களை எந்தளவு நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவு..

முட்டைகோஸ் மூன்று பங்கு

பீட்ரூட் ஒரு பங்கு

கேரட் ஒரு பங்கு

தேவையான அளவு உப்பு

கொஞ்சம் நீர்

இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கவும். கலக்கிய பிறகு சிறிதளவு ஆலிவ் எண்ணெய்யை அதன் மேல் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

சத்துக்கள்!

இந்த சாலட் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, மினரல் சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றன.

குளம்பி அண்ணாச்சி!

இந்த சாலட் மூலம் உங்களுக்கு கிடைக்கும் சத்துக்கள் செரிமான மண்டலத்தின் செயற்திறன் சிறக்க உதவுகிறது. இதன் மூலமாக உண்டல் பெருங்குடல் இயக்கம் சீராகி, உடலில் உள்ள நச்சுக்கள் வேகமாக வெளியேற்றப்படும்.