15.11.2017- மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழக அரசு விண்ணப்பத்தை ஏற்று புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் சிற்பங்களுக்கு மத்திய புவிசார் குறியீடு பதிவகம் சிறப்பு அங்கீகாரம் ஆகும்.
உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் பாரம்பரியப் பண்புகள், தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டார்ஜிலிங் தேநீர், மைசூர் பட்டு, தமிழகத்தின் தஞ்சாவூர் ஓவியம், காஞ்சிபுரம் பட்டு ஆகியவைகளுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை பிற பகுதியினர் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டது. பொருட்களுக்கு விண்ணப்பம் உலக வர்த்தக மையத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்லாது, உலக அளவில் பொருட்களுக்கு இங்கு விண்ணப்பித்து புவிசார் குறியீடு பெற்றுக்கொள்ளலாம். பொருட்களின் உரிமை மத்திய அரசின் கீழ் செயல்படும் இதற்கான அலுவலகத்தின் தலைமையகம் சென்னை கிண்டியில் இருக்கிறது. இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பொருளுக்கான உரிமை மற்றும் தொழில் பாதுகாப்பை பெற முடியும். பட்டுக்கு உரிமை காஞ்சிபுரம் பட்டுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளதால், டெல்லியிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ ஒரு பட்டுப் புடவையை நெய்து, அதனை காஞ்சிப் பட்டு என்று விற்க முடியாது. மதுரை மல்லி மதுரை மல்லி, தஞ்சாவூர் ஓவியங்கள், காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, சிறுமலை வாழை, கோவை வெட் கிரைண்டர் உட்பட 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழகம் 2ஆம் இடத்தில் இருக்கிறது. புவிசார் குறியீடு பெற காத்திருப்பு தமிழகத்தில் இருந்து மேலும் 26 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2010, 2011, 2014 ஆகிய 3 ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பொருளுக்குக்கூட புவிசார் குறியீடு வழங்கப்படவில்லை. புவிசார் குறியீடு மையத்தில் 3 ஆண்டுகளைக் கடந்தும் ஈரோடு மஞ்சளுக்கான விண்ணப்பம், பரிசோதனை நிலையிலேயே இருக்கிறது. கோவில்பட்டி கடலை மிட்டாய் இதேபோல திண்டுக்கல் பூட்டு, சேலம் மாம்பழம், திருவில்லிப் புத்தூர் பால்கோவா, ஓசூர் ரோஜா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, நரசிங்கப் பட்டி நாதஸ்வரம், மாமல்லபுரம் சிற்பங்கள் உட்பட மொத்தம் 26 பொருட்கள் கடந்த 4 ஆண்டுகளாக பரிசோதனை நிலையில் இருந்தன. சிறப்பு வாய்ந்த சிற்பங்கள் இந்த நிலையில் மாமல்லபுரம் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிமேல் மாமல்லபுரம் சிற்பங்கள் என யாருமே இனி சிற்பம் வடிக்க முடியாது. பூட்டுக்கு எப்போது கிடைக்கும்? தமிழ்நாட்டில் பூட்டுக்கு திண்டுக்கல் பெயர் பெற்றது.இங்கு தயாராகும் பூட்டுக்கள் கேரளா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பழமையான மற்றும் பெயர் பெற்ற திண்டுக்கல் பூட்டிற்கு புவிசார் குறியீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இம்முறை மாமல்லபுரம் சிற்பங்களுக்கு மட்டுமே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.