குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, ஆனி(இரட்டை) 26 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கத்திரிக்காயை ஏன் உணவில் சேர்க்க வேண்டும்? 8 காரணங்கள்!!

23.08.2017-உங்களுக்கு கத்திரிக்காய் மிகவும் பிடிக்குமா? கத்திரிக்காயின் காம்பை அதனுடைய கிரீடம் என நினைக்கும் எண்ணற்ற மக்களில் நீங்களும் ஒருவரா? மேலே கூறிய கேள்விகளுக்கு உங்களுடைய பதில் ஆம் எனில் வாருங்கள் எங்களுடன் இணைந்து இந்தக் கட்டுரையீன் மூலம் கத்திரிக்காயின் புகழை உரக்கக் கூறுவோம். 00:00 00:00 கத்திரிக்காயின் காதலரான உங்களை பலர் கிண்டலடித்ததுண்டு. அவர்களுக்குத் அறிவியல் ரீதியாக என்ன பதில் கூறுவது. இங்கே அதற்கான பதிலை தந்துள்ளோம். கத்தரிக்காய் உலகம் முழுவதும் எக் பிளாண்ட் என அழைக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் உள்ள ஊட்டச்சது நிபுணர்கள் இதை உணவில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வற்புறுத்துகின்றனர். ஏனெனில் இதில் அதிக அளவிலான ஊட்டச் சத்துக்கள் உள்ளது. இதில் ஏராளமான வைட்டமின்கள், கனிமங்கள், நார் சத்துக்கள், நாசுனின் மற்றும் க்லோரோஜெனிக் அமிலம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளது. கத்தரிக்காயின் சதையில் அதிக அளவிலான அந்தோசியனின்கள் உள்ளது. ஆய்வுகளின் முடிவுகளின் படி, இந்த ஆன்டி ஆக்ஸிடென்ட், புற்றுநோய், முதுமை, வீக்கம் மற்றும் நரம்பியல் நோய்களை தடுக்கும் என கருதப்படுகின்றது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் 1. இரத்தம் உறைவதை தடுக்கிறது: கத்தரிக்காயினால் இரத்த கட்டிகள் உருவாவதை தடுக்க முடியுமா? ஆமாம். இதில் உள்ள வைட்டமின் கே, மற்றும் அதிக அளவிலான ஃபிளாவொனாய்டு ரத்தம் உறைவதை தடுக்கின்றது. 2. கொழுப்பை குறைக்கிறது: ஒழுங்காக சமைத்த கத்தரிக்காய் உடலில் உள்ள கெட்ட (எல்டிஎல்) கொழுப்பை குறைக்க உதவுகின்றது. வறுத்த கத்திரிக்காய் கொழுப்பை கறைக்க உதவாது. எனவே கத்திரிக்காயை எப்பொழுதும் சமைத்து சாப்பிடவும். 3. செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது: கத்தரிக்காயில் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. எனவே இது உடலின் செரிமான மண்டலத்தை பாதுகாக்கின்றது. இது கத்திரிக்காயின் மிக முக்கிய பலன்களில் ஒன்றாகும். 4. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது: கத்தரிக்காயின் மற்றொரு முக்கிய பலன்களில் ஒன்று இது. இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இதை வழக்கமாக எடுத்துக் கொள்ளும் பொழுது இதில் உள்ள ஊட்டச்சத்துகள் நம்முடைய மூளையின் வளர்ச்சிக்கு உதவுகின்றது. 5. இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகின்றது கத்தரிக்காய் இரத்தத்தின் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதில் உதவுகிறது. இதில் உள்ள குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் எளிதில் கரையக்கூடிய நார் சத்துக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. 6. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது: கத்திரிக்காயில் உள்ள அதிக அளவிலான ஃபிளாவொனாய்டு இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது. 7. ஊட்டச்சத்துக்களின் உறைவிடம்: கத்தரிக்காயில் நம் உடலுக்குத் தேவையான இரும்பு, கால்சியம் போன்ற ஆரோக்கியமான தாதுக்கள் அதிக அளவில் உள்ளது. 8. எடை குறைக்க உதவுகிறது: கத்தரிக்காயில் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் அளவு கலோரி உள்ளது. மேழும் இதில் கொழுப்பு அறவே இல்லை. அதைத் தவிர்த்து இதில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. எனவே இது உடல் எடையை குறைக்க உதவுகின்றது.