குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, புரட்டாசி(கன்னி) 19 ம் திகதி சனிக் கிழமை .

முதலில் கோழி வந்ததா அல்லது முட்டை வந்ததா... இந்தாங்க அறிவியல்பூர்வமான பதில்!

23.08.2017-எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் சிரித்து க்கொண்டே ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள். ஏலியன்கள் இருக்கிறார்களா… எப்படி பிரபஞ்சம் உருவானது… காலப் பயணம் சாத்தியமா… இதுபோன்ற விடைத் தெரியாத கேள்விகளில் கொஞ்சம் எளிமையான கேள்வி கோழி -முட்டைதான்.

 

எல்லாருக்கும் இந்தக் கேள்வியில் இருக்கும் குழப்பம் இதுதான். ஒரு கோழி முட்டை ஒரு கோழியிலிருந்து வருகிறது என வைத்துக் கொண்டால், அப்போது அந்த கோழி எப்படி வந்திருக்கும்? அதுவும் ஒரு கோழி முட்டையிலிருந்து தானே வந்து இருக்க வேண்டும்.

கோழி தான் முதல் என்றால்:

கோழி முட்டையின் ஓடு உருவாதற்கு ovocledidin (oc-17) என்ற புரதச்சத்து காரணமாக இருக்கிறது. இது கோழியிலிருந்து மட்டும்தான் கிடைக்கிறது. ஆகவே கோழி இருந்தால் மட்டுமே oc-17 என்ற புரதச்சத்து உருவாகி கோழி முட்டையை உருவாக்குகிறது.

முட்டை தான் முதல்:

பொதுவாக இனப்பெருக்கத்தின்போது இரு உயிரினங்களின் டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி, சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. இதில் இரட்டித்துப் பெருகும்போது சில சமயங்களில் முழுவதும் இரட்டிப்பது இல்லை. அது சிறிய சிறியதாக பல ஆயிரம் ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

எடுத்துக்காட்டாக, ஆண் - பெண் இணைந்து ஒரு குழந்தையை பெற்று எடுக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை 100 சதவிகிதம் பெற்றோரின் DNA குணாதிசயத்தை பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. அது 10 சதவீதம் வேறொரு குணாதிசயத்தைப் பெற்றிருக்கலாம்.

டார்வின் சொன்ன ‘குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்’ என்பதும் இது போல கொஞ்சம் கொஞ்சமாக டி.என்.ஏ இரட்டிப்பு ஆனதுதான். இப்படி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஓர் உயிரினத்தின் டி.என்.ஏ மாறுபட்டு புதிய உயிரினம் உருவாகிறது.

ஆக, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோழி போல் உருவம் கொண்டிருந்த ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ மாற்றமடைந்து, இப்போது நமக்குத் தெரிந்த கோழி இனமே உருவாகி இருக்கிறது.

இன்னும் எளிதான எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்தக் கோழி போன்ற உயிரினத்துக்கு Mr.X என பெயர் வைத்துக்கொள்வோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக Mr. X இடும் முட்டைகள் டி.என்.ஏ மாற்றமடைந்து கடைசியில் இன்று காணும் நமக்கு தெரிந்த கோழி வருகிறது.

இப்படிப் பார்த்தால் கோழி போன்ற உயிரினத்திலிருந்து முழுவதுமான பரிணாம வளர்ச்சி பெற்ற முட்டை வந்திருக்க வேண்டும். அதிலிருந்து நாம் காணும் கோழி வந்துள்ளது.

Mr.x -> Mr.x முட்டை(நன்கு பரிணாம் அடைந்தது ) >> கோழி..

ஆக ,முட்டையிலிருந்து தானே கோழி!

டார்வின் கொள்கைபடி குரங்கிலிருந்து மனிதன் வந்தான். குரங்கு டி.என்.ஏ.வில் இருந்து வேறுபட்டு, கருவிலிருந்து பிறக்கின்ற குழந்தையை, மனிதக் குழந்தை என்றுதானே அழைக்கிறோம். கருவை முட்டையாகவும், குழந்தையை கோழியாகவும் வைத்துக் கொள்வோம்.ஆக, பல டி.என்.ஏ மாற்றங்கள் அடைந்து பிறக்கின்ற கோழியை, முட்டையிலிருந்து வந்தது எனக் கூறுவதுதான் சரியானதாக இருக்கும்.