குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேரக்கூடாதா?: அரசு அதிரடி உத்தரவு

30.05.2017-ஒவ்வொரு நாளும் 1,000 இந்தியர்களுக்கு விசா வழங்கும் சுவிற்சர்லாந்து அரசு-சுவிட்சர்லாந்து நாட்டில் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேரக்கூடாது என்ற கோரிக்கை கொண்ட மசோதாவை அந்நாட்டு அரசு நிராகரித்துள்ளது.சுவிசில் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான சுவிசு மக்கள் கட்சியை சேர்ந்த Jean-Luc Addor என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த புதன்கிழமை அன்று புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சுவிற்சர்லாந்தில் யுன்-யுலை -ஓகட்சு   தான் கோடைகாலம்.

அதில், சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் ராணுவத்தில் சேர்க்க அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், இக்கோரிக்கையை நிராகரித்த அரசு ‘ராணுவத்தில் சேருவதற்கு அனைத்து சுவிசு குடிமகன்களுக்கும் தகுதி உள்ளது. ஒருவரின் கருத்து, உணவுப்பழக்கம்,

மதத்ததை அடிப்படையாக

கொண்டு அவரை ராணுவத்தில் இருந்து விலக்குவது ஏற்புடையது அல்ல’ எனக் கூறி அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு 19 வயதான வாலிபர் ஒருவருக்கு சைவ உணவுப்பழக்கம் மட்டுமே இருந்த காரணத்தினால் அவரை ராணுவ அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.

ஆனால், இம்முடிவு தவறானது எனக் கூறி அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த வாலிபர் மீண்டும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு ஆண்மகனும் ராணுவம் அல்லது அரசு தொடர்பான பணிகளில் கட்டாயம் ஈடுப்பட வேண்டும் என்பது சட்டமாகும்.

இச்சட்டத்தை பின்பற்றாத அல்லது ராணுவப்பணிக்கு தகுதி இல்லாதவர்கள் 30 வயது வரை அரசுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாளும் 1,000 இந்தியர்களுக்கு விசா வழங்கும் சுவிற்சர்லாந்து அரசு

சுவிட்சர்லாந்து நாட்டில் கோடை விடுமுறையை கழிக்க ஒவ்வொரு நாளும் 1,000 இந்தியர்களுக்கு சுவிசு அரசு விசா வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய தலைநகரமான டில்லியில் உள்ள சுவிசு தூதரகம் தான் இந்த விசா அனுமதியை அளித்து வருகிறது.

இந்தியாவில் ஏப்ரல் முதல் யூன் வரை கோடை காலம் என்பதால் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்தியர்கள் பெருதும் விரும்புகின்றனர்.

குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அதிகளவில் இந்தியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சுவிசு தூதரகத்தில் விசா கோரிய இந்தியர்களின் விண்ணப்பம் அதிகரித்ததால் கூடுதலாக 36 ஊழியர்களை நியமனம் செய்து விசா வழங்கும் பணியை வேகப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் ஒவ்வொரு நாளும் 1,000 இந்தியர்களுக்கு சுவிசு விசா வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரே நாளில் 1780 இந்தியர்களுக்கும் விசா வழங்கப்பட்டது.

சுவிசு விசா பெற்றவர்களில் 80 சதவிகிதத்தினர் அந்நாட்டில் விடுமுறையை கழிக்க மட்டுமே விரும்பியுள்ளனர்.

மேலும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எந்த நாட்டிற்கும் இல்லாத வகையில் இந்தியாவுக்கு மட்டும் சுவிசு தூதரகம் அதிகளவில் விசா வழங்கியுள்ளது.

மேலும், கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 1,07,000 இந்தியர்களுக்கு சுவிசு அரசு விசா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.