குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

பழமொழி என்பது என்ன?சதுர அகராதி என்பதே தமிழில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி.ஓர் இத்தாலியர் தமிழரான

வரலாறு . 25.05.2017-பழமொழி என்பது என்ன? ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர். தமிழ் பழமொழிகள் பேசாத பொருளே இல்லை. ஆகையால் தமிழ் பழமொழிகளை இந்த சமூகத்தின் கலைக்களஞ்சியம் என்று கூறலாம்.!!

ஆயிரக் கணக்கான ஆண்டு அனுபவத்தை , மிகபெரிய உண்மையின் பட்வெடறிவை வெளிப்படுத்துவதற்கு நீண்ட கட்டுரைகளை தவிர்த்து மக்கள் உடனே உணரும் வண்ணம் , சிந்திக்கும் வண்ணம் அமைத்தனவே தமிழ் பழமொழிகள் ..!

ஒருவன் நீண்ட கட்டுரைகளையும் நூல்களையும் படித்து உணர்ந்து சிந்திக்கும் நேரத்தை குறைப்பதற்கே பழமொழிகளை தமிழ் முன்னோர்கள் இயற்றினார்கள் .!

தமிழ் மொழி மிகவும் வளமான மொழி. உலகிலேயே அதிகமான பழமொழிகள் இதில் தான் இருக்கின்றன. தமிழ் மொழிதான் பழமொழித் தொகுப்பில் உலகில் முன்னிலையில் நிற்கிறது…

தனிப்பாடல்கள், சங்க இலக்கியப் பாடல்கள் அல்லது திருக்குறள் போன்ற நீதிநெறி இலக்கியப் பாடல்கள் கற்றோருக்கு மட்டுமே தெரியும். ஆனால் பழமொழிகளோ எனில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் தெரியும். கிராமப் புறப் பெண்களின் வாயில் பழமொழிகள் புகுந்து விளையாடும். சண்டை சச்சரவானாலும் சரி, பொழுதுபோக்கு அரட்டைக் கச்சேரியானாலும் சரி, கிண்டல், வேடிக்கையானாலும் சரி எல்லா இடங்களிலும் சரளமாகப் புழங்கும்.!

ஆயிரக கணக்கான ஆண்டு அனுபவம், பழமொழிகளில், எதுகை மோனையுடன் வரும் நாலைந்து சொற்களில் அடங்கிவிடும்.. பலவற்றை நாம் அழித்தாலும் இதுவரை நம்மிடம் இருபதாயிரம் பழமொழிகள் இருக்கின்றன என்பது ஆறுதலான விடயம் .!

யானை பற்றி மட்டுமே நூற்றுக்கும் மேலான பழமொழிகள் கிடைத்திருக்கின்றன. பறவைகளில் காகமும், பிராணிகளில் யானையும் தமிழர்களை மிகவும் கவர்ந்துவிட்டதன. ஆனை வரும் பின்னே, மணி ஓசைவரும் முன்னே, ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன், யானை உண்ட விளாங்கனி போல, யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும், யானைக்கும் கூட அடி சறுக்கும் — இப்படி நூற்றுக்கும் மேலாகப் படிக்கலாம்..

சமயம், பெண்கள், பண்புகள், உணவு, மருத்துவம், பழக்க வழக்கம் !

***********************

சமயம், பெண்கள், பண்புகள், உணவு, மருத்துவம், பழக்க வழக்கங்கள், மிருகங்கள், தாவரங்கள், ஜாதிகள், அரசு, தொழில்கள், சோதிடம், அறிவியல், வானசாத்திரம், பருவநிலை, விவசாயம்—இப்படி ஏராளமான விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 20,000 பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஆராய்ந்து தனித் தனி கட்டுரை எழுதலாம். சில பழமொழிகளுக்கு நேரிடையான பொருளும் எதிர்ப்பத பொருளும் கிடைக்கும்.

முதல் முதலில் ரெவரண்டு பெர்சிவல் என்பவர் 1842 ஆம் ஆண்டு 2000-க்கும் குறைவான பழமொழிகளுடன் ஒரு புத்தகம் வெளியிட்டார். பின்னர் அவரே 1877 ல் மூன்றாம் பதிப்பை வெளியிட்ட போது அதில் 6156 தமிழ் பழமொழிகள் இருந்தன. அவர் தொகுப்பில் விட்டுப் போன பழமொழிகளாக எடுதுத் தொகுத்து 9415 பழமொழிகளுடன் ஜான் லசாரஸ் என்பவர் 1894ல் வெளியிட்டார். பின்னர் ரெவரண்ட் ஹெர்மன் ஜென்சன் என்பவர் 1897ம் ஆண்டில் 3644 பழமொழிகளுடன் இன்னும் ஒரு நூலை வெளியிட்டார். இவற்றைத் தொகுத்தவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்களுக்கு இதன் பொருளை விளக்கியதில் நம்மவரின் பங்கே அதிகம் அதுமட்டுமல, நம்மவர்களும் பழமொழிகளைத் திரட்டித் தந்தனர்.

பழமொழியின் வீழ்ச்சி நிலை கரணங்கள் :

************************

அனால் இன்று தமிழகத்தில் தமிழர்களிடையே உள்ள பேச்சின் பொது எவெரேனும் உபயோகம் செய்யும் பொழுது இன்னொரு தமிழன் ” டேய் இவன் பழமொழி பேசுகிறான் என்று நகைப்பான் ” இந்த நகைப்பின் மூல காரணத்தை நாம் சிந்திக்க வேண்டும் காரணம் இந்த திராவிடமயம் ..

ஐம்புலன்களை அடக்கி ஆளும் சிறப்பு தமிழ் மொழி என்றான் புலவன் ,,இல்லை ஐம்புலன்களை கொண்டு மாற்றான் நம்மை , மொழியை அழித்தான்..

ஆங்கிலேயன் எதிரிதான் அனால் அவன் நம் மொழியை அளிக்க வில்லை ..பல தமிழ் மொழி விடயங்களை அவன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து கொண்டான் சிறப்பு அறிந்து .. இன்றோ திராவிடம் என்று நம்மை ஒன்று சேர்த்தான் அரசியல் காரணங்களுக்காக இன்று மண்ணோடு மண்ணாக அழியும் நிலையில் இருக்கிறோம்

சதுர அகராதி என்பதே தமிழில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி.

ஒரு சொல்லின் பொருள், உச்சரிப்பு போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக பயன்படுவது அகராதி. நம் தமிழ்மொழிக்கும் தற்காலத்தில் பல தமிழ் அகராதிகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அந்த வகையில் தமிழில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி எது என்பது பற்றி அறிந்து கொள்ளலாம் இன்றைய தகவல் துளிகளில்.

சதுர அகராதி என்பதே தமிழில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி. இதனை உருவாக்கியவர் இத்தாலியைச் சேர்ந்த வீரமா முனிவர். அவர் காலத்திற்கு முன்பாக நிகண்டுகள் எனப்படும் செய்யுள் வகை நூல்களே பொருள் கூறும் நூல்களாக இருந்தன. சதுரகராதி போல், தேவைப்படும் சொற்களுக்கு உடனே பொருள் அறியும் வசதி இல்லாதவையாக அவை இருந்தன. வீரமா முனிவருக்கு முன்பாக ஐரோப்பியர்கள் சிலர் தமிழ் போர்த்துகீசியம், தமிழ் இலத்தீன் போன்ற இரு மொழிகளில் அமைந்த அகராதிகளை உருவாக்கியிருந்தனர்.

சதுரகராதி, பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என்று நான்கு பிரிவுகளை கொண்டுள்ளது. பெயர் அகராதியில் சொற்பொருளும், பொருள் அகராதியில் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்களும், தொகை அகராதியில் இணைந்து வரும் இலக்கியக் கலைச்சொற்களும், தொடை அகராதியில் எதுகையும் வருகின்றன. சதுரகராதியில் பெயர் சொற்களாக ஏறக்குறைய 12 ஆயிரம் சொற்கள் உண்டு. பிற்காலத்தில் தோன்றிய தமிழ் அகராதிகளுக்கு முன்னோடியாக அமைந்த சதுரகராதி, வெளியானதிலிருந்து தற்போது வரை பலமுறை பதிக்கப்பட்டுள்ளது. 1710 ஆம் ஆண்டு தமிழகம் வந்த வீரமா முனிவர் சதுரகராதி நிறைவுற்ற 1732 ஆம் ஆண்டு நவம்பர் 21 என்று அந்நூலின் இறுதியில் தெளிவாக தெரியுமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஓர் இத்தாலியர் தமிழரான வரலாறு:

இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.

மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார்.

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.

இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.

அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.

தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.

உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.

இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.

தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர்,