குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சுவிசில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய புதிய கட்டுப்பாடு!!

12.04.2017-சுவிட்சர்லாந்து நாட்டில் மாட்டிறைச்சி மற்றும் பிற விலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்ய விரைவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிசில் சராசரியாக ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 51.4 கிலோ இறைச்சியை உணவாக எடுத்து வருகின்றனர்.

கோழி, வான்கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை அடுத்து ஆட்டுக்கறியை சுவிசு குடிமக்கள் அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதற்கு அடுத்ததாக மாட்டிறைச்சியையும், இறுதியாக மீன் மற்றும் பன்றி இறைச்சியை மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

எனினும், சுவிசில் விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் அனைத்தும் சுவிட்சர்லாந்து நாட்டிலேயே உருவாகிறதா? அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி/கடத்தல் செய்யப்படுகிறதா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் இறைச்சிகள் அடிக்கடி பொலிசாரின் சோதனையில் சிக்குகிறது. இதனால் இறைச்சியின் தரத்தில் சந்தேகம் ஏற்படுகிறது.

எனவே, இதனை உறுதி செய்ய அரசு ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வரவுள்ளது.

அதாவது, நாடும் முழுவதும் உள்ள இறைச்சி கூடங்களுக்கு வரும் விலங்குகளின் டி.என்.ஏவை சேகரித்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு விலங்கின் டி.என்.ஏவை சேகரித்துவிட்டால், அந்த விலங்கு வழியாக பிற விலங்குகளின் பூர்வீகத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

இறைச்சி கூடத்தில் அல்லது இறைச்சி வாங்கிய ஒருவரின் இறைச்சியை டி.என்.ஏ மூலம் பரிசோதனை செய்தால் அது சுவிஸில் உருவான இறைச்சியா? அல்லது வெளிநாட்டில் இருந்து வந்த இறைச்சியா என்பது தெரிந்துவிடும்.

இறைச்சி விற்பனை செய்வதில் அறிமுகமாக உள்ள இந்த புதிய திட்டம் அடுத்தாண்டு முதல் அறிமுகமாக உள்ளது.

மேலும், இத்திட்டம் முதலில் மாட்டிறைச்சியில் பயன்படுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் அடுத்தடுத்து விலங்கு இறைச்சிகளிலும் இம்முறை பயன்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.