குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, தை(சுறவம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

பறக்கும் தட்டில் இருந்து காப்பாற்றப்பட்ட வேற்றுக்கிரகவாசி எங்கே? பூமியில் தேடித்திரியும் வேற்றுக்கிர

12.04.2017-கவாசிகள்!சுமார் 70 ஆண்டுகள் மறைக்கப்பட்டு வந்த மர்மத்தின் உண்மைகளைக் கண்டறியும் பொருட்டு மீண்டும் தீவிர ஆய்வுகள் தொடரப்பட்டுள்ளது.பூமியில் விபத்துக்குள்ளான பறக்கும் தட்டினை வேற்றுக்கிரகவாசிகள் தேடுகின்றார்கள் என்ற மேலைத்தேய ஊடக செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1947ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மறக்க முடியாத சம்பவமாக ரொஸ்வெல் பறக்கும் தட்டுகள் பூமியில் மோதி விபத்து ஒன்று இடம் பெற்றது. ஆனால் அதனை சாதூர்யமாக மறைத்தது அமெரிக்கா.

அந்த ஆண்டு அமெரிக்காவின் மெக்சிகோ பகுதியில் இரண்டு பறக்கும் தட்டுகள் பூமியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து அவற்றினை அரசு உடைமையாக்கியதோடு, வீழ்ந்தது வேவு பார்க்கும் பலூன் மட்டுமே என அமெரிக்கா மூடி மறைத்தது.

ஆனால் விபத்துக்குள்ளானது வேற்றுக் கிரகவாசிகளின் பறக்கும் தட்டு என்றே செய்திகள் புகைப்படங்களுடன் வெளி வந்தன.

அத்தோடு அந்த பறக்கும் தட்டுகளில் இருந்து 7 வேற்றுக்கிரகவாசிகள் மீட்கப்பட்டதாகவும் அவர்களில் 6 பேர் உயிரற்ற நிலையிலும், ஒரு வேற்றுக்கிரகவாசி உயிருடனும் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

மேலும் அதில் இருந்து காப்பாற்றப்பட்ட வேற்றுக்கிரகவாசியினை பயன்படுத்தியே அமெரிக்கா தொழில் நுட்பத்தில் அசைக்க முடியாத பலத்தினை கொண்டதாகவும், காப்பாற்றப்பட்ட வேற்றுக்கிரகவாசியும், அவர்களின் பறக்கும் தட்டுகளும் அமெரிக்காவின் ஏரியா51 பகுதியில் இன்றும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

என்றாலும் எந்த நிலையிலும் அமெரிக்கா இரகசியங்களை கசியவிடவில்லை. ஆனால் அண்மையில் ரொஸ்வெல் பகுதியில் ஓர் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு தொடர்பு இல்லாத அந்த உலோகத்தில் ஓர் மர்ம அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்தவர்கள் அது 1947ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான பறக்கும் தட்டுகளில் இருந்து வீழ்ந்ததாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.

தொடர்ந்தும் தீவிர ஆய்வுகள் நடைபெற்றன அதில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றுமோர் ஆச்சரிய விடயம்.

குறித்த உலோகத்தில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடு ஏதோ ஓர் செய்தியை கொண்டு உள்ளதாக ஆய்வாளர்கள் நம்பினர். காரணம் அந்த குறியீட்டுடன் 100 சதவீதம் பொருத்தமான குறியீடு பூமியில் கண்டுபிடிக்கப்பட்டது.

1996ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பயிர்நிலப்பரப்பில் இரண்டு காற்பந்து மைதானங்களின் அளவை ஒத்த பரப்பில் அதே வகை குறியீடு வரையப்பட்டுள்ளது.

 

வேற்றுக்கிரகவாசிகளால் வரையப்பட்டதாக ஆய்வாளர்கள் நம்பும், ஒரே இரவில் பயிர் நிலப்பரப்பில் வந்த அந்த செய்தி என்ன என்பது குறித்து இன்று வரை மர்மமே.

ரொசுவெல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட உலோகத்தையும், பயிர் வட்டத்தையும் ஆய்வு செய்தவர்கள் அவை வேற்றுக் கிரகவாசிகளின் செய்தி என்றே நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அந்த குறியீடு அவர்களின் பறக்கும் தட்டின் அடையாளமாக இருக்கலாம் எனவும், அதனை தேடும் முயற்சியாகவே அவர்கள் பயிர்பரப்பில் பிரம்மாண்டமாக அதே குறியீடு வரையப்பட்டுள்ளது என்பது ஆய்வாளர்களின் வாதம்.

அதன்படி வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகள் மூலம் பூமியை சுற்றித்திரிந்து கொண்டே இருக்கின்றார்கள் எனவும் இது தொடர்பில் ஆய்வு செய்பவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த காரணங்களினால் அமெரிக்கா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இது வரைக் காலமும் மூடி மறைத்த உண்மைகளை அமெரிக்கா தற்போது வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதன்படி ரொஸ்வெல் பறக்கும் தட்டுகள் எங்கே, மீட்கப்பட்ட வேற்றுக்கிரகவாசி இன்றும் இருக்கின்றாரா? அமெரிக்கா ஏன் மறைத்தது? போன்ற கேள்விகளோடு.,

பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் இன்றும் இருக்கின்றார்களா? என்ற கேள்விகளுக்கும் பதில்கள் கூடிய விரைவில் கிடைக்கும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை.