குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மார்கழி(சிலை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

என்னோட "சிந்து" இப்ப இங்க இல்லையே..... நான் என்ன செய்வேன்? கலங்கிய அத்வானி

12.04.2017-இலங்கையில் பல தமிழர் பிறந்த இடங்கள் வாழ்ந்த இடங்கள் சிங்கள பௌத்த இடமாகவுள்ளது  அத்வானியை  ஒத்த வருத்தம் பல தமிழர்களிடம் உண்டு அத்வானிக்காதல் ஆறுதல் உண்டு இந்தியா என்ற அதிகாரம் மிக்க தமது உரிமைக்குரிய மண்ணில் உள்ளார். தமிழர்கள் மாற்றார் மண்ணில் சுய உரிமைகள் இன்றி  அடிமைகளாக வாழ்கின்றனர் பல ருக்கு அதுபற்றி கவலையே இல்லை.

 

நான் பிறந்து வளர்ந்த சிந்து மாகாணம் இந்தியாவில் இல்லை என்பது எனக்கு காலம் காலமாக இருக்கும் பெரும் சோகம் என்று பாயக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார். சுதந்திரமடைவதற்கு முன்பு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து சிந்து மாகாணம். தற்போது அது பாகிசுதானின் ஒரு மாகாணமாக இருக்கிறது. இந்த மாகாணத்தில்தான் பிறந்தார் அத்வானி. டெல்லி வந்திருந்த வங்கதேச பிரதமர் சேக் கசீனாவுடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்வானி அப்போது சிந்து மாகாணம் குறித்து பேசினார். உணர்வு உங்களில் எத்தனை பேருக்கு இந்த உணர்வு இருக்கும் என்று தெரியவில்லை. இந்தியா பிரிக்கப்படாதபோது, இந்தியா ஒன்றாக இருந்தபோது, ஆங்கிலேயர ஆட்சியில் இருந்தபோது, அந்த இந்தியாவின் ஒரு பகுதியில்தான் நான் பிறந்தேன். பிரிந்து போன சிந்து இந்தியா சுதந்திரமடைந்தபோது, தனி நாடாக மாறியபோது, பிரிக்கப்பட்டபோது, அந்த சிந்துவும் நம்மை விட்டுப் பிரிந்தது. சிந்து இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்தபோது நான் பிறந்தேன். இப்போது அது இந்தியாவில் இல்லை. சோகம் தரும் உணர்வு இப்போதும் கூட அந்த உணர்வு எனக்கும், எனது சகாக்களுக்கும் எப்போதும் சோகம் தரும். அந்த உணர்வை விட்டு எங்களால் பிரிய முடியவில்லை. வங்கதேச பிரதமர் இங்கு வந்துள்ளார். அவர் முன்பு எனது உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினேன். சுதந்திரமாக இருந்தேன் சிந்துவும், கராச்சியும் இந்தியாவுடன் இருக்காது என்று எங்களுக்குத் தெரிய வந்தபோது நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். சிந்துவில் நான் வளர்ந்தபோது, இளம் பிராயத்தில் ஆர்.எசு.எசு. அமைப்பில் தீவிரமாக செயல்பட்டேன். சுதந்திரமாக இருந்தோம். சிந்து இல்லாமல் இந்தியா முழுமை பெறாது என்பது எனது எண்ணம் என்றார் அத்வானி. இலங்கையில் பல தமிழர் பிறந்த இடங்கள் வாழ்ந்த இடங்கள் சிங்கள பௌத்த இடமாகவுள்ளது  அத்வானியை  ஒத்த வருத்தம் பல தமிழர்களிடம் உண்டு அத்வானிக்காதல் ஆறுதல் உண்டு இந்தியா என்ற அதிகாரம் மிக்க தமது உரிமைக்குரிய மண்ணில் உள்ளார். தமிழர்கள் மாற்றார் மண்ணில் சுய உரிமைகள் இன்றி  அடிமைகளாக வாழ்கின்றனர் பல ருக்கு அதுபற்றி கவலையே இல்லை.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.