குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மார்கழி(சிலை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தினகரன் 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடை? தேர்தல் ஆணையத்தின் அடுத்த அதிரடி! தமிழகத்தில் ஆட்சி

கலைப்பு? 16 அமைச்சர்கள் கைது?: கா.து குவிப்பு!12.04.2017-வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக(அம்மா) கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் அடுத்த 6 ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போ ட்டியிடாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து ள்ளன.

அதிமுகவையும் ஆட்சியையும் சசிகலா கோஷ்டி கைப்பற்றிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தொடக்கம் முதலே உறுதியாக இருந்து வருகிறது.

முதல்வர் நாற்காலியில் அமர நினைத்த சசிகலாவை உச்சநீதிமன்றம் சிறைக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து தினகரன் தலையெடுக்கத் தொடங்கினார். ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதுதான் தினகரனின் திட்டம்.

இதற்காக ஆர்கே நகர் தொகுதியில் எத்தனை நூதன வழிகள் இருக்கிறதோ அத்தனையையும் கடைப்பிடித்து வாக்காளர்களுக்கு லஞ்சம் தந்தார் தினகரன்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் தினகரனின் தளபதியாக செயல்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதையடுத்து ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலையே தேர்தல் ஆணையம் ரத்து செய்வதாக அறிவித்தது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட 29 பக்க அறிக்கையில், எப்படியெல்லாம் பணப் பட்டுவாடா நடைபெற்றது என விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதிமுக(அம்மா) அணி வேட்பாளர் தினகரன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி ஆர்கே நகர் தொகுதியில் மட்டுமின்றி எந்த ஒரு தேர்தலிலும் டிடிவி தினகரன் 6 ஆண்டுகாலத்துக்குப் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் டிடிவி தினகரனின் சித்தி சசிகலா 10 ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

தற்போது தினகரனும் 6 ஆண்டுகாலம் போட்டியிட முடியாத நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஆட்சி கலைப்பு? 16 அமைச்சர்கள் கைது?: கா.து குவிப்பு!

கடந்த 7ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வியுயபாசுகரின் வீடு உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

இதனையடுத்து இதில் கிடைக்கப்பெற்ற தகவல்களை வைத்து தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த தேர்தல் ரத்து.

வியயபாசுகர் வீடு, சரத்குமார் வீடு என ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர்களின் வீடு அலுவலகங்கள் என வருமான வரித்துறையினர் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்களுக்கு எதிரான ஆவணங்களும் இதில் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் வியயபாசுகரை தங்கள் அலுவலகத்துக்கு வர வழைத்து 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

நடிகர் சரத்குமாரிடம் நள்ளிரவு வரை விசாரணை தொடர்ந்தது. இந்த விசாரணையின் போது அமைச்சர் வியுயபாசுகர் வருமான வரித்துறையினரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகவும், இதனால் முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் இதில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அமைச்சர் வியயபாசுகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் தான் நிலவுகிறது. இதனையடுத்து நேற்று இரவு முழுவதும் தமிழகத்தில் ஒரு பதற்றமான சூழல் நிலவியது.

தமிழகத்தில் ஆட்சி கலைய போகிறது என்கிற தகவல் காட்டுத்தீ போல சமூக வலைதளங்களில் பரவியது. அதில், இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை,

டெல்லியில் இருந்து தலைமை ஒற்றன் நேரடி தகவல். இன்று இரவு 12 மணிக்கு தமிழகத்தில் ஆட்சி கலைப்பு. பொறுப்பு கவர்னர் வருகை. ஆளும் கட்சியில் 10 முதல் 16 அமைச்சர்கள் கைது. ஆட்சியை கலைக்கும் படி மத்தியானமே அரசாணை தயார். என பரவலாக இந்த செய்தி பரவி வந்தது.

இதனால் இரவு முழுவதும் பதற்றமான சூழலே நிலவி வந்தது.

இன்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் வியபாசுகரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இதனை அடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரப்பி வருகின்றனர்.

வியுயபாசுகரின் வாக்குமூலத்தை வைத்து தமிழக அரசை கவிழ்க்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.