குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 18 ம் திகதி செவ்வாய் கிழமை .

சின்ன ஆசை ... இல் கவிஞர் செந்தமிழ்தாசன்.

சின்ன ஆசை ...

காற்றுள்ள இடமெல்லாம் - என்

கால்கள் ஓடித்திரியனும்

வேற்றுக்கிரக வாசிபோல - பூமியை

 

வேடிக்கைபார்த்து அலையனும்

பூமிபந்து முழுவதிலும் - என்

பூப்பாதம் பதியனும்

சாமிவந்த மனிதன்போல் - நான்

சந்தோசத்தில் குலையனும்

என்வியர்வைத் துளிபட்டு - உலகம்

இலவம்பஞ்சாய் நனையனும்

விண்ணிலிருந்து பூமிகண்டால் - பூமி

என்பாதமாய் தெரியனும்

ஒட்டுமொத்த கடலிலும் - என்

உள்ளங்கால்கள் நனையனும்

கட்டுக்கட்டாய் சம்பாதித்தது - பூமியை

வட்டமிட்டே அழியனும்

இயற்கையோடு வாழ்ந்தேயென் - அழகு

இப்பிறப்பை முடியனும்

இயந்திரமாய் வாழ்வோரெல்லாம் - என்னை

ஆச்சரியமாவே அறியனும்

என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️

கவிஞர் செந்தமிழ்தாசன்

இடம் : தொல்காப்பிய பூங்கா

ராய அண்ணாமலைபுரம்

சென்னை