குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

விண்வெளியில் வெடிக்கப்போகும் சமர்..! கொடிய ஆயுத உற்பத்தியில் சீனா..! கொந்தளிக்குமா அமெரிக்கா..?ஈவு

இரக்கமின்றி தாக்குதல் நடத்துவோம் : அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை.15.03.2017-எதிர்காலத்தில் செட்லைட் மூலமாக விண்வெளியில்போர் இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான தயார்ப்படுத்தலை சீனா தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் அகில உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அந்த வகையில், எதிரி நாடுகளின் செய்மதிகளை தாக்க அழிக்க கூடிய வகையில் கதிர்வீச்சு- லேசர் மற்றும் மின்காந்த ஆயுதங்களையும், அதி சக்திவாய்ந்த மைக்ரோவேவ் ஆயுதங்களையும் சீனா உற்பத்தி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய இராணுவ விவகாரங்கள் தொடர்பான நிபுணர் ரிச்சர்ட் பிசாரை மேற்கோள்காட்டி முழுஉலக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பாடல், பிரதேசங்களை அடையாளம் காண உதவும் செய்மதிகளின் துல்லியமான தாக்குதலை முறியடிக்கும் நோக்கில் இவ்வாறான ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகின்றது.

சீனாவின் இந்த நடவடிக்கை விண்வெளி ரீதியிலான இராணுவமயமாக்களை துரிதப்படுத்தும் என ரிச்சர்ட் பிசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விண்வெளி வீரர்களின் உயிரை சீனா பணயம் வைக்கின்றது. இந்த ஆயுத முன்னேற்றங்களை கொண்டு அமெரிக்க செய்மதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளகூடும்.

இதேவேளை, கதிர்வீச்சு-லேசர் முறையிலான ஆயுதங்களை அமெரிக்கா ஏற்கனவே அபிவிருத்தி செய்துள்ளது. இந்நிலையில், சீனாவின் கதிர்வீச்சு- லேசர் ஆயுத விருத்தி தொடர்பில் அமெரிக்க விரைந்து செயற்பட வேண்டும் என ரிச்சர்ட் பிஸார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்துவோம் : அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை.

அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டால் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி வடகொரியாவின் எல்லைப் பகுதிக்கு மிகவும் நெருக்கமாக எதிரிநாட்டு போர் விமானங்கள் பறந்துள்ளன.

அத்துடன், வடகொரியா மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துவதற்கும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது எமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான ஒன்றாகவே கருதுகின்றோம்.

எனவே, இந்த பயிற்சி நடவடிக்கை தொடருமாக இருந்தால் தரை, கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக மிகவும் காடுரமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என வடகொரியா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.