குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

'ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இவ்வளவு ஆதரவா!?' - அதிர்ச்சியில் சசிகலா, தினகரன்.

09.03.2017-ஓ.பி.எசு. அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிறையிலிருந்த சசிகலா, கட்சியினரை கண்டித்ததோடு சில கட்டளைகளையும் பிறப்பித்துள்ளார். 

சசிகலா ஓபிஎசு

யெயலலிதா மறைவுக்குப்பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்விளைவு அ.தி.மு.க.வில் இரு அணிகள் உருவாகின. சசிகலா சிறைக்குச் சென்றுவிட்டதால் அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராகி விட்டார். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து செயல்படவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அறிவித்தனர். ஆனால், தீபா, பேரவை தொடக்கம், கொடி அறிமுகம், நிர்வாகிகள் பட்டியல் என பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் யெயலலிதா சமாதியில் பன்னீர்செல்வமும், தீபாவும் சந்தித்தனர். ஆனால் அதன்பிறகு இருவரும் இணைந்து மக்களை சந்திக்கச் செல்லவில்லை. பன்னீர்செல்வம் அணியினர் மட்டும் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சசிகலா

யெயலலிதா மரணம்

யெயலலிதாவின் பிறந்தநாள் தினமான பிப்ரவரி 24-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம், யெயலலிதாவின் மர்ம மரணம் குறித்துப் பேசத் தொடங்கினார்.  ஜெயலலிதாவின் மரணம் குறித்து பன்னீர்செல்வம் பேசத் தொடங்கியதும் அவருக்கு மக்களிடையேயும், கட்சியினரிடையும் ஆதரவு பெருகின. ஜெயலலிதா மரணம் குறித்த தகவல்களைக் கேட்க மக்களும் ஆர்வமாக இருக்கின்றனர். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க வலியுறுத்தி மகளிர் தினமான இன்று (மார்ச் 8) உண்ணாவிரதப் போராட்டத்தில் பன்னீர்செல்வம் அணியினர் ஈடுபட்டுள்ளனர். அப்போலோ மருத்துவமனையில் யெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் உள்ள சந்தேகங்களை பன்னீர்செல்வம் அணி கேள்விகளாக மக்கள் மேடையில் கேட்டு வருகிறது. ஆனால் இதற்குப் பதில் அளிக்க வேண்டிய அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும், சசிகலா தரப்பும் அமைதியாக இருந்து வருகிறது.

ஆதரவால் அதிர்ச்சி

தமிழகம், புதுச்சேரியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டங்களில் பங்கேற்க அதிகளவில் கட்சியினரும், மக்களும் வந்தனர். இந்த கூட்டத்தைப் பார்த்த பன்னீர்செல்வம் அணியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்திய போராட்டத்துக்கு சென்றவர்களின் பட்டியலை சசிகலா தரப்பு தயாரித்து கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் சில முக்கிய நிர்வாகிகளின் பெயர்களும் உள்ளன.  உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்காத கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் சிலர் மறைமுகமாக பன்னீர்செல்வம் அணியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அவர்கள் குறித்த தகவலும் கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். அவர்களிடம் விரைவில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது அ.தி.மு.க.வில் பெரும்பாலானவர்களின் ஆதரவு பன்னீர்செல்வம் வசம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மாநகர உளவுப்பிரிவும், மாநில உளவுப்பிரிவும் அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம். பெண்கள் கூட்டம் கணிசமாக உள்ளதாக ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய உளவுப்பிரிவும் இதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது. பன்னீர்செல்வத்துக்கு பெருகிய ஆதரவை அதிர்ச்சியுடன் சசிகலா அணியினர் பார்த்து வருகின்றனர்.

ஓ.பி.எசு

கேள்விக்கு மேல் கேள்விகள்

பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், "தமிழக மக்கள் மனதில் யெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா நலமாக இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்ததை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டிய கடமை அப்போலோ மருத்துவமனைக்கு உள்ளது. அங்கு புதைந்திருக்கும் மக்களின் சந்தேகங்களை அவர்கள் தெளிவுப்படுத்தவில்லை. 75 நாள்களாக சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, நலமாக இருப்பதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் எதற்காக அவரது சிகிச்சையின்போது புகைப்படத்தை வெளியிடவில்லை. புகைப்படத்தை வெளியிடத் தடுத்த சக்தி யார், அந்த சமயத்தில் நடந்த இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா, ஏன் கையெழுத்துப் போடாமல் கைரேகை வைத்தார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை விலக்கியதற்கு என்ன காரணம் போன்ற கேள்விகளுக்கு சசிகலா நிச்சயம் பதில் அளிக்க வேண்டும். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பு அவசர, அவசரமாக முதல்வராக சசிகலா ஏன் ஆசைப்பட்டார். அந்த ஆசை நிறைவேறாததால் மன்னார்குடி குடும்பத்துக்கு விசுவாசமான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்ததற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் காரணம் ஆகியவற்றை கட்சித் தலைமை வெளிப்படையாக தொண்டர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற தொண்டர்கள், மக்களின் கோரிக்கைகளுக்காகவே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி உள்ளோம். இதற்கும் பதில் கிடைக்கவில்லை என்றால் எங்களது போராட்டம் அடுத்தக்கட்டத்துக்குச் செல்லும். மக்கள், கட்சியினரின் ஆதரவு எங்களுக்கு இருப்பது சசிகலா அணியினருக்குத் நன்றாக தெரியும். அவர்களது அணியில் இருக்கும் எம்எல்ஏக்கள் இரட்டை இலை சின்னத்துக்காக அங்கு உள்ளனர். விரைவில் இரட்டை இலை சின்னம் எங்களிடம் வரும்போது அவர்களது ஆதரவு எங்களுக்கு கிடைக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் வழிநடத்தப்பட்ட அ.தி.மு.க.வை அழிக்க விடமாட்டோம். அதற்காக எங்களது உயிரைத் தியாகம் செய்யக்கூட தயாராக இருக்கிறோம்" என்றனர்.

ஓபிஎசு அணிக்கு 'செக்'

"பன்னீர்செல்வம் அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் குறித்து சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவைக் கேட்ட சசிகலா, கோபமாகி உள்ளார். உடனடியாக டி.டி.வி. தினகரனுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். 'நம்முடைய ஆட்சியில் பன்னீர்செல்வம் அணியினர் துணிச்சலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி உள்ளனர். அங்கு சென்ற கட்சியினரை உங்களால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.  இதே நிலை நீடித்தால் என்னவாகும் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இனி இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பன்னீர்செல்வம் அணிக்குச் செல்லும் கட்சியினரைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் செயல்படாமல் இருக்க முட்டுக்கட்டைகளை போடுங்கள்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

சசிகலா,தினகரன்

இதையடுத்து டி.டி.வி.தினகரன் தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில் பன்னீர்செல்வம் அணியினருக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் அணியைப் பிரிக்க வியூகமும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் தொடர்பாக கொடுத்த நோட்டீசுக்குப் பதில் அளிப்பது தொடர்பான ஆலோசனையில் டி.டி.வி. தினகரன் இருந்ததால் பன்னீர்செல்வம் அணியின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை. சசிகலாவிடமிருந்து வந்த உத்தரவுக்குப் பிறகே பன்னீர்செல்வம் அணியையும் கவனிக்கத் தனி குழு அமைத்துள்ளோம்" என்றனர் சசிகலா அணியினர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.