குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மார்கழி(சிலை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உங்கள் உடலை உடனே சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது

22.02.2017-உங்கள் உடலை உடனே சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்! உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகமாக உள்ளது, அதை உடனே வெளியேற்ற வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. By: Maha Lakshmi S Published: Thursday, October 20, 2016, 11:58 [IST] Subscribe to Boldsky தற்போது நாம் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள், டாக்ஸின்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை உணவுப் பொருட்கள், மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலில் வாழ்ந்து வருகிறோம். இதனால் நம் உடல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாமல் இருக்கவும், அவ்வப்போது உடலை சுத்தம் செய்து, டாக்ஸின்களை வெளியேற்றிவிட வேண்டும். உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகமாக உள்ளது, அதை உடனே வெளியேற்ற வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் தலைவலி சில நாட்களால் அடிக்கடி தலைவலி வந்து கொண்டிருக்கிறதா? அப்படியெனில் உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகமாகிவிட்டது என்று அர்த்தம். எப்படியெனில் உடலில் டாக்ஸின்கள் அதிகரிக்கும் போது, மத்திய நரம்பு மண்டலத்தை எரிச்சலூட்டி, தலைவலியை உண்டாக்கும். மஞ்சள் அல்லது வெள்ளை நிற நாக்கு நாக்கின் நிறமும் உடலில் அழுக்குகள் அதிகம் உள்ளதா என்பதை வெளிப்படுத்தும். நச்சுக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது, செரிமானம் சீராக நடைபெறாமல், உடலில் சளி தேங்கி, நாக்கில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் படலத்தை உருவாக்கும். வியர்வை உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும் ஓர் இயற்கையான செயல்முறை தான் வியர்வை. உடலில் அழுக்குகள் அதிகம் தேங்கியிருந்தால், வியர்வை அளவுக்கு அதிகமாக வெளியேறி, உடல் அசுத்தமாக இருப்பதை வெளிக்காட்டும். தூக்கமின்மை உடலில் அளவுக்கு அதிகமாக நச்சுக்கள் தேங்கியிருந்தால், தூக்கமின்மையால் அவஸ்தைப்படக்கூடும். அதற்கு நச்சுக்களை வெளியேற்றும் கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் தூக்கமின்மை கல்லீரலில் பிரச்சனை இருந்தாலும் வரும். எனவே ப்ராக்கோலி மற்றும் காலிஃப்ளவர் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சரும பிரச்சனைகள் நம் சருமமும் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடும். அதுவும் உடலில் டாக்ஸின்களை வெளியேற்றும் உறுப்புக்கள் சரியாக செயல்படாவிட்டால், சருமம் அழுக்குகளை வெளியேற்றும் முயற்சியில் இறங்கும். அப்படி இறங்கும் போது சருமத்தில் அரிப்புக்கள் அல்லது இதர சரும பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும். தொப்பை தொப்பையும் உடலில் டாக்ஸின்கள் அதிகம் உள்ளதைத் தான் குறிக்கிறது. எப்படியெனில் உடலில் உள்ள டாக்ஸின்கள் செரிக்கப்படாமல் அப்படியே வயிற்றுப் பகுதியில் தங்கி தொப்பையை உருவாக்குகின்றன. அதற்கு உடலை சுத்தம் செய்யும் பானங்களைப் பருகி வர வேண்டும். களைப்பு தற்போது நாம் சாப்பிடும் நிறைய உணவுகள் இரத்த சர்க்கரை அளவை உடனே அதிகரித்து, பின் உடனே குறையும் போது கடுமையான களைப்பை உணர நேரிகிறது. உடலில் டாக்ஸின்கள் அதிகரிக்கும் போது, ஆற்றல் குறைந்து, உடலின் முறையான செயல்பாடும் பாதிக்கப்படும்.