குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 18 ம் திகதி செவ்வாய் கிழமை .

ஒரு கைதியின் கதறல்! எல்லாம் உங்களால் தான் - சசிகலா! - நான் ஒரு தப்பும் பண்ணலையே - நட்ராயன்

20.02.2017-வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பதைப் போல தமிழக த்தின் ஆட்சி அதிகார வட்டாரங்களில் கடந்த 30 ஆண்டுகளாக கோலோச்சிய சசிகலாவும் அவரது சொந்தப ந்தங்களும் பெங்களூரு சிறை வட்டாரத்தில் காய்ந்துபோன கோழிகளைப் போல நின்று கொண்டிருந்தார்கள்.

பரப்பன அக்ரகார சிறைவாசலுக்கு ஒரு கி.மீ. முன்பே அவர்களுக்குச் சோதனை நடந்தது. சிறைக்குப் போகும் சுடைலில் கூட யெ.வை பின்பற்ற வேண்டும் என நினைத்த சசிகலா,

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் நான் சரணடைய வரும்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் என்னைத் தாக்க சதி திட்டம் தீட்டியுள்ளனர்' என ஒரு புகாரை சசி கலாவுக்காக அவர் சிறைக்குச் செல்லும்வரை உடன் இருந்த வழக்கறிஞர் நாமக்கல் செந்தில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அளித்தார்.

அதன் அடிப்படை யில் கர்நாடக உயர்நீதிமன்றம் சசிகலா சரணடைவதற்காக தயாராக இருந்த யுர்ன் மைக்கேல் டி குன்ஹா பதவி வகித்த பெங்களூரு சிட்டி சிவில் செஷன்ஸ் கோர்ட் எண் 48-லிருந்து பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் அமைந்துள்ள கோர்ட்டிற்கு மாற்றினார்கள்.

இந்தக் கோர்ட்டில்தான் யெ. சிறைக்குச் செல்வதற்கு முன்பு ஆயுரானார். அத்துடன் கோர்ட் வளாகத்திலும் சிறை வளாகத்திலும் பத்திரிகையாளர்கள் உட்பட யாரும் நிற்கக்கூடாது என 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

 

சென்னையிலிருந்து 15-ந் தேதி காலை 11:40 மணிக்கு புறப்பட்ட சசிகலா, மாலை 5:30 மணிக்கு பரப்பன அக்ரஹார சிறைக்கு வெளியே ஒரு கி.மீ. தூரத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் நிற்கும் பகுதிக்கு வந்தார்.

 

கர்நாடக எல்லையிலிருந்து அவர் சிறைக்கு வரும் பாதையை கன்னட மீடியாக்கள் பின்தொடர்ந்து லைவ் ஆக ஒளிபரப்பி வந்தன. அதை விரும்பாத யெ.வின் முன்னாள் தனி பாதுகாவல்படை ஆய்வாளர் கோதண்டம், பப்ளிக் டி.வி.18 என்கிற தொலைக்காட்சி நிறுவனத்தின் நேரடி ஒளிபரப்பு வேனை தனது கார் மூலம் இடித்துக்கொண்டே வந்தார்.

 

சசிகலாவின் வாகனங்கள் பத்திரிகை யாளர்கள் நிற்கும் பகுதிக்கு வந்தவுடன் இந்த தகவலை போன்மூலம் பப்ளிக் டி.வி. நிருபர்கள் கன்னட பத்திரிகை யாளர்களிடம் சொல்ல... அவர்கள் கோதண்டம் வந்த காரை மறித்து அவரை வெளியே இழுத்தனர்.

 

அவர் "வெளியே வர முடியாது' என போராட... அவரிடமிருந்த செல்போனை பறித்ததோடு கார் கண்ணாடியையும் உடைத்தனர். சசி எதிர்ப்பு அ.தி.மு.க. தொண்டர் களும் திரண்டிருந்தனர். சசிக்காக வந்தவர் களைப் பார்த்து, உங்களுக்கு வேட்டி ஒரு கேடா'' என உருவி வீசி எறிந்தனர்.

 

கோதண்டம் வந்த காரில்தான் சசிகலாவுக்குத் தேவையான துணிமணிகள், மருந்து, மாத்திரைகள் இருந்தன. தமிழகத்தின் டி.ஜி.பி.யையே போனில் மிரட்டக்கூடியவரான கோதண்டம், கன்னட மீடியாக்களிடம் படாதபாடுபட்ட நிலையில், அவரை காப்பாற்ற கர்நாடக போலீஸ் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தது.

 

ஆனால் கோதண்டத்தின் காரை உள்ளே போக விடாமல், வெளியே நிறுத்தச் சொல்லி விட்டார்கள். அந்தக் காருக்குப் பின்னால் வந்த சசிகலாவின் உறவினரும் யெ.வின் டாக்டருமான டாக்டர் சிவகுமார், இளவரசியின் மருமகன் ராயராயன், கார்டனில் ஜெ.வின் அந்தரங்க உதவியாளராக இருந்த கார்த்திகேயன் ஆகியோரும் இந்தக் கலவரத்தில் சிக்கிக் கொண்டனர்.

 

சசியின் கான்வாய் கோர்ட் வளாகத்திற்குள் போனபிறகு வந்த இவர்களை அனுமதிக்க பெங்களூரு போலீசார் மறுத்து விட்டனர். சிறைக்குச் செல்லும் சாலையில் பரிதாபமாக நின்று பெங்களூரு போலீசாரிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டு, கெஞ்சிக் கூத்தாடிக்கொண்டிருந்தார்.

 

அதற்கு முன்பாக இளவரசியின் மகள்கள், இளவரசியின் மகன் விவேக், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் சசிகலாவின் காரோடு கோர்ட்டுக்கு போனார்கள். நடராசன் கொஞ்சம் லேட்டாக வந்தாலும் "நான் குற்றவாளியின் கணவன்' என்ற பிறகுதான் போலீசார் அனுமதித்தனர்.

 

சசிகலா வருவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே வந்து காத்திருந்த நீதிபதி அஸ்வத நாராயணா, சசி வந்ததும் "சுப்ரீம்கோர்ட் தீர்ப்புப்படி சரணடைய வந்துள்ளீர்களா?' என கேட்டார்.

 

சுதாகரன் வரவில்லையா?' என கேட்டதும், சசியும் இளவரசியும் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அதேநேரம் பெங்க ளூருவுக்கு அருகில் உள்ள ஓட்டலில் சுதா கரன் கும்மாளம் அடித்துக்கொண்டிருப்பதாக ஒரு வக்கீல், சசியின் காதில் சொல்ல... உடனே பெங்களூரு போலீசை அனுப்பி அழைத்துவர ஏற்பாடு செய்தார் சசி.

 

நான் சரணடைகிறேன். சிறைக்கு உடனடியாக செல்ல முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் காலையில் செய்த முறையீட்டை பெங்களூரு நீதிபதியிடமும் சசிகலா முன்வைத்தார். சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் நிராகரித்ததைப் போலவே நீதிபதி அசுவத நாராயணாவும் நிராகரித்தார்.

 

எங்களுக்கு இரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய்கள் உள்ளன. நாங்கள் வருமானவரி கட்டுபவர்கள். எங்களுக்கு முதல்வகுப்பு சிறை ஒதுக்க வேண்டும். எங்களுக்கு வீட்டுச் சாப்பாடு தர வேண்டும். எங்களுக்குத் துணையாக வேலைக்காரி வேண்டும்' என சசிகலா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களையெல்லாம் நிராகரித்தார் நீதிபதி அஸ்வத நாராயணா.

 

முதல்வகுப்பு பற்றி சிறைத்துறை டி.யி.பி. சத்யநாராயணராவ் முடி வெடுப்பார்' என சொன்ன நீதிபதி சிறைக்குச் செல்லும் முன்பு செய்யும் மருத்துவ பரிசோதனைகளைச் செய்ய உத்தரவிட்டார். அது முடிந்ததும் உறவினர்களைச் சந்திக்க அனுமதி கேட்டார் சசி.

 

அதற்கு நீதிபதி அனுமதியளிக்க, கோர்ட்டுக்கு வெளியே நின்றிருந்த நடராசனை அங்கே சென்று சந்தித்தார்கள். அதுவரை அமைதியாக இருந்த சசி, எல்லாம் உங்களால்தான் வந்தது என நடராசனை திட்டியபடி கதறி அழ ஆரம்பித்தார்.

 

நான் ஒன்றும் தப்பு பண்ணலையேம்மா என நடராசனும் பதிலுக்கு அழுதார். கோபம் அப்படியே பாசமாகி, உருக்கமான சூழல் உருவானது. மறுபக்கம் இளவரசி தனது மகன், மகள்களை கட்டிப்பிடித்து அழுதார். அதற்குள் சுதாகரனை தேடிப்பிடித்து கூட்டிவர... மூவரையும் சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டார் நீதிபதி.

 

மூவரும் நடந்தே சிறைக்குச் சென்றார்கள். சிறை சூப்பிரண்ட் டெண்ட் யெயராமன் சசிகலாவுக்கு 9234, இளவரசிக்கு 9235, சுதாகரனுக்கு 9236 என்கிற எண்களைக் கொடுத்தார்.

 

40 நிமிடம் சிறைக்குள்ளே அடைக்கப்படவிருந்த விசாரணைக் கைதிகளுடன் உட்கார்ந்திருந்தார் சசிகலா. அவருக் கான மருந்துகளை விவேக் ஒரு கி.மீ. தூரத்தில் இருந்த கோதண்டத்தின் காரிலிருந்து ஓட்டமும் நடையுமாக எடுத்து வந்து கொடுத்தார்.

 

சசிகலாவையும் இளவரசியையும் ஒரே செல்லிலும், சுதாகரனை விசாரணைக் கைதிகளை அடைக்கும் செல்லிலும் அடைத்திருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சசிகலா சிறைக்குப்போன அடுத்தநாள் சசியை சந்தித்து, எடப்பாடி முதல்வராகும் தகவலை பெங்களூரு சிறை அதிகாரி கள் சொல்ல... "எங்களை தமிழக சிறைக்கு மாற்றச் சொல்லுங்கள்' என சசி கடுப்படித்திருக்கிறார் என்கிறது சிறை வட்டாரம்.

 

இந்நிலையில் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை சு.சுவாமி எழுப்பியுள்ளார்.

 

ஐந்தாண்டு காலம் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய்தத் பத்துமுறை பரோலில் வந்ததுபோல, பெங்களூரு சிறையில் இதுவரை முதல்வகுப்பு சிறை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் சசிகலாவை தமிழகத்துக்கு கொண்டுவரும் முயற்சிகள் வேகம் பெற்றுள்ளன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.