குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 20 ம் திகதி புதன் கிழமை .

தமிழகத்தில் அரசியல் ஆட்டம் ஆரம்பம்.

14.02.2017-இப்படி ஒரு முரண்பாட்டை இதற்கு முன் பார்த்திருக்க முடியாது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் யெயலலிதாவை அவரது மரணத்திற்குப் பிறகு ஒரு பெரும் கூட்டம் கடவுளாகவே பாவித்து வருகிறது. ஆனால் அதே கூட்டம் அதே யெயலலிதா மற்றும் மூன்று பேரை குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  சந்தோசமாக வரவேற்கிறது. இதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராகவோ தமிழகத்தின் முதலமைச்சராகவோ அவர்கள் ஏற்க விரும்பவில்லை. விருப்பத்தைக் காட்டி லும் வெறுப்பு ஒரு வலிமையான உணர்வு என்பதை சசிகலா இப்போது அறிந்திருப்பார்.

யெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பில் அவரும் குற்றவாளி என்று சொன்னது மட்டுமின்றி, ரூ100 கோடி அபராதத்தை அவரது சொத்தில் இருந்து கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் எவ்வளவு பேர் சசிகலாவை எதிர்க்கிறார்கள் என்பதற்கான துல்லியமான புள்ளிவிபரம் இல்லை. ஆனால் பொதுவாக பார்க்கும்போது, சராசரி ஆண்களும் பெண்களும் அவரை வெறுப்பதாகத்தான் தெரிகிறது. சமூக வலைத்தளங்களிலும் அவர் ஒரு தீய அவதாரமாகவே சித்தரிக்கப்படுகிறார். அவருக்கு எதிராக வெளியாகும் நகைச்சுவை துணுக்குகளும், மீம்சுகளும் இதைத்தான் காட்டுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா, அவருடன் இரண்டு முறை சிறைக்கும் சென்றவர். ஆனாலும் அவரும் அவரது குடும்பமும்தான் ஜெயலலிதா அனுபவித்த அத்தனை துன்பத்திற்கும் காரணம் என்ற கருத்தாக்கத்தை அவரால் கடைசிவரை மாற்றவே முடியவில்லை.

தமிழகத்தில் ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. வெகுமக்களின் மனம்கவர்ந்த தலைவராக அறியப்படும் யெயலலிதா உயிருடன் இல்லை. அவரது பரம எதிரியான கருணாநிதியும் உடல்நிலை காரணமாக அரசியல் செயல்பாட்டில் தீவிரமாக இல்லை. இந்தச் சூழ்நிலையில் உண்மையில் தமிழக அரசியலில் பரந்த வெற்றிடம் இருக்கிறது. தேசிய மற்றும் பிராந்திய அளவில் இந்த இருவருக்கும் எதிராக உள்ள கட்சிகள், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அந்த வெற்றிடத்தைக் கைப்பற்ற முடியமா என ஏங்கிக் கொண்டிருக்கின்றன. ஆர்எசுஎசு பின்புலத்தில் இயங்கி வரும் பாயக இந்த சந்தர்ப்பத்தில் தமிழக அரசியலில் கணக்கைத் துவங்கி காலடி எடுத்து வைத்து விடலாமா எனப் பார்க்கிறது. சசிகலாவை வரவிடாமல் தடுப்பதற்கு ஆளுநருக்குப் பின்னால் இருந்து மத்திய அரசு இயக்குகிறது என சந்தேகங்களும் எதிர்ப்புகளும் பல தரப்பில் இருந்தும் எழுந்தன. ஆனால் இந்த விவாதங்களையெல்லாம் பின்னொரு நாளில் வைத்துக் கொள்ளலாம். தமிழகம் சந்திக்கும் இப்போதைய உடனடி பிரச்சனை ஒரு நிலையான அரசு அமையுமா என்பதுதான். அது அடுத்து அதிமுக எப்படி செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் தெரியும்.

சசிகலா, முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே யார் அதிமுகவைக் கைப்பற்றுவது என்பதற்கான தீவிர போராட்டம் ஏற்கனவே துவங்கி விட்டது. மென்மையாகப் பேசுபவர், பவ்யமானவர், வளைந்து கொடுக்கக் கூடியவர் எனப் பெயரெடுத்த ஓபிஎசுதான் முதன்முதலாக சசிகலாவுக்கு எதிரான  போரில் இறங்கினார். சசிகலாவின் பிடியில் இருந்து வெளியே வந்த அவர், யெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு தான்தான் என நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த சசிகலா, நகரத்திற்கு வெளியே உள்ள சொகுசு விடுதி ஒன்றில் எம்எல்ஏக்களை அடைத்து தன்பிடியில் வைத்திருக்க முயற்சித்தார். மறைந்த முதலமைச்சரின் தோழி, உடனிருந்தவர் என்ற அடிப்படையில் தான்தான் அவரின் உண்மையான வாரிசு எனவும் நிலைநிறுத்த விரும்பினார். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு அவரது முகத்தில் அறைந்த பிறகு, தனது இரண்டாவது திட்டத்தை (plan B) ஐ செயல்படுத்தி இருக்கிறார். அதன்படி, தனக்கு அடங்கிய ஒரு முதலமைச்சர், தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கட்சியை வைத்திருப்பதற்கான முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்.

மற்றொரு புறம் ஓபிஎசு தனக்குரிய ஆதரவு எண்ணிக்கையை உயர்த்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார். தற்போதைய நிலையில் அவருக்கு தோராயமாக 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை. இப்போதைக்கு அது அவருக்கு மிகப்பெரிய சவால்தான். அந்த சவாலை அவர் வெற்றி கொள்வது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நிலையான பதவியை விரும்பும் எம்எல்ஏக்களை அவர் எப்படி இணங்க வைக்கிறார் என்பதைப் பொறுத்தது. ஓபிஎஸ், எடப்பாடி என இருவராலுமே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் தமிழகம் குடியரசுத் தலைவர் ஆட்சியை சந்திக்கும். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திமுகவுக்குத்தான் அது சாதகமாக முடியும். அதிமுகவின் இரு அணியினருமே அதை விரும்ப மாட்டார்கள். ஆக சொத்துக் குவிப்பு வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் அரசியல் ஆட்டம் இப்போதுதான் துவங்கி இருக்கிறது.

- எசு.சிறினிவாசன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.