குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 20 ம் திகதி புதன் கிழமை .

ஓபிஎசு இல்லம் முன்பாக அணி அணியாக திரளும் அதிமுக தொண்டர்கள்! போயசு கார்டன் வெறிச்சோடியது!!

09.02.2017-முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இல்லம் முன்பாக அதிமுக தொண்டர்கள் அணி அணியாக திரண்டு வருகின்றனர். அதே நேரத்தில் சசிகலா இருக்கும் போயசு கார்டன் பங்களா பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் மட்டுமல்ல பொதுமக்களும் ஆதரவு தந்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் இதுநாள் வரை தீபாவை ஆதரித்து வந்த அதிமுக தொண்டர்கள் இப்போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இல்லம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் தீபா இணைந்து செயல்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று காலை முதலே தொடர்ந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கிரீன்வேஸ் சாலை இல்லம் முன்பாக அணி அணியாக அதிமுகவினர் திரண்டு வருகின்றனர். அதேநேரத்தில் சசிகலா இருக்கும் போயஸ் கார்டன் பங்களா பகுதியானது ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.