குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழர்கள்தாம் தேர் இழுக்க அமெரிக்கா வந்துஇலங்கைக் குற்றவாளிகளைத் தண்டிக்குமென கனவுகாணக்கூடாது.

16.08.2011-த.ஆ.2042-பொ.முருகவேள் ஆசிரியர் சுவிசு-தமிழர்கள்  அதாவது புலம்பெயர்தமிழர்கள்  முன்னேற்ரகரமாக நடக்கவில்லை  என்பதற்கான கருத்துக்களையும் சீர்துாக்கிப் பார்க்கவேண்டும்.

போர்க்காலத்தில் இருந்த தமிழ்அரசியல் ஆர்வம். இலங்கையில் தமிழர்கள் நிர்க்கதியாக நிற்கும்போது  இல்லை இது தவறான நிலை. முன்பு பணம்மட்டுமல்ல பலசெயல்திட்டங்பகளைச் செய்தனர். ஆனால் இப்போது பலர் தலைவர் இல்லை எனவே நாம் ஒன்றுமே செய்யமாட்டோம் என்று இருக்கின்றார்கள்.

 

அவதிப்படும் மக்களை அம்போ என்று விட்டுவிட்டு தாமுண்டு தமது குடும்பமுண்டு தமதுவேலையுண்டு என்று இருக்கின்றார்கள்.இது தவறு என்று  பலர் கருத்துக்கொண்டுள்ளார்கள் என்பதை அவர்கள் உள்வாங்கவில்லை.

இவர்கள் எத்தனை குடும்பங்களின் பணத்தை வாங்கிபோராட்டத்திற்கு கொடுத்தார்கள். மக்கள்நலன்விரும்பிகள் போல் புனர்வாழ்வுக்கழகம் அது இது என்று அந்தநிகழ்வு இந்தநிகழ்வு  என்றிருந்தோர்

இன்று மக்கள் வாழ்வுக்காக தம்மால் முடிந்ததை செய்ய முன்வராது இருப்பது ஏன்?

இன்று ஆயுதம்வேண்டாம் கால் இல்லாதவனுக்கு கையில்லாதவனுக்கு அதேபோன்ற பெண்களுக்கு கணவன்மாரை இழந்த

பெண்களுக்கு தாய்தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவிபுரிய ஏன் மனம் துடிக்கவில்லை.
அப்படியாயின் தனிநபர்விசுவாசம் மட்டும்தான் இவர்களிடம் இருந்தது என்று மற்றவர்கள் குறைப்படுவது சரியா? அல்லது போர்வெறியில் ஊக்கிவித்தார்கள் என்ற குற்றச்சாட்டு சரியா?

அக்குற்ரச்சாட்டுக்கள்  சுமத்தப்படும்போது மக்களுக்காக பாடுபடாதவர்களுக்காக மக்கள் போராடக் கூடாது என்று சும்மா இருந்து விடுவார்கள்.

ஒரு அமைப்புத்தான் முக்கியம்  இனம் மொழி பண்பாடு தமிழத்தேசம் தமிழ்த்தேசியம் என்ற எவையும் அவசியமில்லாதவையா?

இன்று பாருங்கள் இலங்கையில் சிங்கத்தின் வாயின் பற்களுக்குள் கடிபட்டுக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள்  உடமைகளை இழந்பின்னும் உயிர்களை இழந்தபின்னும்  உறுப்புக்களை இழந்தபின்னும் மானமிழந்தபின்னும் உறவுகளை இழந்தபின்னும் தமது இனவுணர்வில் அவர்கள் பின்னிற்கவில்லை.

இருதேர்தல்களிலும் தமிழ் இனவுணர்வோடு நின்று  தான் வாக்களித்துள்ளார்கள்.

வெளிநாட்டிற்கு பின் தாமாக கௌரவமாக வாழுவதாக எண்ணுவோர்கள்  இனம் மொழி பற்றிய ஆழம் இல்லாதவர்கள் அமைச்சர்களுடன் தாம் நண்பர்கள் என்ற தற்பெருமையோடு எத்தகைய அமைச்சருடன் தொடர்பு? அது கூடாநட்பு என்று புரியாதவர்கள்!

அந்தமைச்சர்களுடன் படித்தவர்கள் ஒன்றாய்த்திரிந்தவர்களே இனமானதிற்காக மொழியுணர்வால் அவர்கள்நட்பை விட்டுவிட்டு இருக்கிறார்கள் என்பதை புரியாதவர்கள்.

அமைச்சர்  சுவிசுபோன்ற நாடுகளுக்கு வரும்போது அவரைச்சந்திப்பதன் மூலம் அமைச்சரின் தவறுகளை நாம் உற்சாகப்படுத்துகின்றோம் என்று புரிவதற்கு  அடிப்படை அற்றவர்கள் சுயநலம் மேலோங்கி தாம் தடையின்றி வெளிநாட்டிலிருந்து  அங்குசென்றுவரவும் உடமைகளை உரித்தாக்கவும்  இத்தவறைச் செய்துதான்  உடமைகளை உரித்தாக்கவேண்டுமா?

ஏன் இங்கு பணம்சேர்த்துக் கொடுத்தவர்களே  சென்று வரும்போது நீந்கள் இனத்தை மொழியை  அவலப்படும் மக்களை புறம்தள்ளுகின்றீர்கள்.

இன்றைய சில சுயகௌரவம் அற்ற அமைச்சர்களால் இலங்கை அரசியலே கேவலமான நிலைக்கு சென்றுவிட்டதைப் புரியுங்கள்.

அரசிடமிருந்து சலுகைபெறுவதென்றால்   அற்பத்தனமாக அடிமைத்தனமாக  நடப்பது  சரியென்று எண்ணுகின்றீர்களா?  அப்படியான சலுகை ஏன் எதற்கு? இதனால் நாட்டக்குள் இருக்கம் தமிழர்கள் அல்லவா அடிப்படை உரிமைகளை மிகஇலகுவாக இழக்கவேண்டியிருக்கிறது.

எமது தனிப்பட்ட விடயங்களை சாதிப்பதில் எல்லாத் தமிழர்களிடத்திலும் திறமை இருக்கும் போது  ஒன்றுமே இல்லாது எல்லாரிடமும்செல்வதா?

இதனால் அங்கு இருப்பவர்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள்.

இதற்கு புலிகள் தான் காரணம் என்று சொல்வது தவறு.

அவர்களின் காலத்திற்கு பின்னரான தவறுகளை நாம் உணராதவர்களாக இருந்துகொண்டு அவர்களின் தவறுகளைமட்டும் சுட்டிக்கொண்டிருப்பதும் தவறாகும்.

புலிகளின் காலத்திற்குபின்  அரச சலுகைகளை தவறாகப் பயன்படுத்தும் தமிழ்அரச அதிகாரிகள்.
இனிப் புலியில்லை அரசை வால்பிடித்து விரும்பியஇடத்திற்கு இடமாற்றமெடுக்கலாம்  பதவியுயர்வுகள் பெற்லாம். அதற்காக இனஉணர்வு இல்லாமல் செயல்படுவது தவறு.


பெண்களைத்தவறாகப் பயன்படுத்வோர்களும் இருக்கின்றனர்.

மகாபாரத தேரையும் கண்ணனையும் சங்கையும் பகாபாரத வாசகங்களையும் எதிலும் ஏற்றுவோர்  மகாபாரதத்தின் பிழிவு என்ன என்று யோசிப்போமா!

போக்களத்திலும் குழப்பமான சூழலிலும்  நாம் மிகக்கவனமான முறையில்  போதனைகளைச் சரியாகக் கேட்கவேண்டும்.  அதன்படிநடக்கவேண்டும் என்பதாகும்.

சிலர் தமது சூழலில் தமதுபோலிக்கௌரவங்களைக் காப்பற்றிக்கொள்ளவும் அரசை ஆதரிப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. அரசோடு  அடிபணிந்து சுயமானத்தை இனமானத்தை இழந்து  தனிநபர் உயர்வைப்

பெரிதாக  தலைமுறைதலை முறையாக அரசஆதரவுதன்மையுடன் நடக்கும் சொத்துடமை காரர்களையும் நாம் இனங்காணலாம்.

இதுதவிர தற்போது வெளிநாடுகளில் வாழ்வோர் மதரீதியாக இணைந்து அந்தப்பேரவை இந்தப்பேரவை  என்றும் தமக்கு மொழிப்புலமை இருக்கிறது என்றும் அப்பப்போது மாநாடுகளையும் அறிவித்தல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னுமொரு அணியினர் அதிதீவிரத்தன்மை கொண்டோரை அதற்கேற்றவாறு அவர்களின் சுவைக்கேற்ற தலையங்கத்துடன் இயங்கிவருகிறார்கள்.

இந்த இருசாராரையும் வெளிநாடுகளும் ஏற்று நடப்பது போல் நடிக்கின்றன காரணம் இவர்களின் தீவிரங்களைத்தணிப்பதற்கும். கண்காணித்துக்கொள்வதற்கும்.

எனவே இவற்றை விடவும் தமிழ்மக்களின் வாழ்வு மீண்டும் சிறக்க அரசியல் பலம் ஏற்பட புலம்பெயர் தமிழர்கள் திறமையுடன் செயற்படவேண்டும்.

பிரதேச சபைகள் உருவாகி இருக்கின்றன இவர்கள் உங்களுக்கு எதோவொருவிதத்தில் தொடர்பானவர்களா கவும்  தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நிர்வாக முறையில்  செயற்படவேண்டிய திறனை வளர்க்கவேண்டும்.

வெளிநாடுகளில் இருக்கம் council-gemeinde- இவைதானே  அங்கு இருக்கும் உள்ஊர்ஆட்சிசபை(பிரதேச சபை) இங்கும் நீங்கள் இந்தநிர்வாகங்களுடன் நல்ல உறவில் இருந்தால்

எமதுசபைகளைதொடர்பு படுத்தி எத்தகை அபிவிருத்திகளைச் செய்யலாம். இவ்விதமான நிர்வாகங்களை அவர்களுக்க அறிமுகம்செய்யலாம் இவைகளை செய்வதற்கு பின்நிற்காதீர்கள்.

நேரடிஅரசியலை விடுங்கள் மக்கள்நலச்செவைமூலமான அரசியலில் ஈடுபடுங்கள். ஆபத்தில்லாதது அழிவில்லாதது நிர்வாகமுறமையானது என்பதை உணர்வீர்கள்.

எதிர்வரும் 20.08.2011-2042 இல் தமிழர்பகுதிகளுக்கான பிரதேசசபைத்தலைவர்கள் (chairman)- memerbers-(உறுப்பினர்கள்) தெரிவிக்கப்பட்டு பதவியேற்புவைபவம் நடைபெறஇருக்கிறது.

இவர்கள் உயிர் ஆபத்து மிக்கநிலையிலே இத்தேர்தலைச் சந்தித்து பெரும் அரசசவால்களையும் எதிர்கொண்டு இனவுணர்வுமிக்கமக்களால் தெரிவுசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இன்றைய உலகம் எம்மைப்பார்திருக்க அபிவிருத்தி ஏமாற்றுக்கு எடுபடாது. எமக்கு தேவை அரசியல் தீர்வு

அதன்பின்வரும் அபிவிருத்தியே உண்மையானது. பாதுகாப்பானது என்று வாக்களித்திருக்கிறார்கள்.

அவர்களை வெளிநாடுகளில் இருக்கும் உங்களுக்குதொடர்பான நிர்வாகங்களுடன் தொடர்புகளைஏற்படுத்திவையுங்கள்.

அது அவர்களுக்கு முதலில் பாதுகாப்பையும் வெளியுலகத்தொடர்புகளையும் ஏற்படுத்தித்தரும்.

இது தமிழினத்திற்கும்    உலகத்திற்கும் ஒரு பாலம் அமைக்கும். எமது இனம்வெளியுலகுடன் தொடர்புகளை நெருக்கமாக்கும்.

எமது ஊர்களெல்லாம் உலகத்துடன் தொடர்பாகி  உயர்வுபெறும்போது இயல்பாகவே பலதடைகள் அகன்றுவிடும்.

இதைவிடுத்து  நாம் கோவில்களை மட்டும் கட்டிக்கொண்டிருப்போம் அவற்றிற்கு தேர்கள் செய்து இழுத்த்துத்திரிவோம்.

ஊரிலே அறியாத திதிகளுக்கெல்லாம்  இங்கு கொவில்களில் விழா எடுத்துக்கொண்டாடி தமிழுக்கு விரோதமானவர்களுக்கு  பலம் சேர்த்து என்பயன்?தமிழப்பண்பாட்டிற்கு விரோதமான பண்பாட்டிற்கு பாடுபட்டு என்ன பயன்?

இது இந்தியப்பண்பாட்டை உலகெல்லாம் பரப்ப. இறுதியாய் இந்தியா தமிழர்களுடைய எல்லாவற்றையும் தமது என்று தமிழர்களை

வெளியில் விடும் அல்லது தமிழர்களை இந்தியர் என்று பிரச்சாரப்படுத்தி சட்டரீதியான  வெற்றிகளைச்சாதிக்கம் இது எதிர்காலத்தில்நடக்கம்.

இந்தியாவில்  உருவான பெத்தத்தை இலங்கையில் வளர்த்தது தமிழர்கள்தான் என்பதை மறந்தவிடாதீர்கள்.
இன்று எதனுடன் பகைபாராட்டுகின்றீர்கள் என்பது பற்றி யோசனை செய்யுங்கள்.

ஆசியா முழுக்க பெத்தம் பரப்பியவர்கள் தமிழர்கள் சீனாவில் கூட இதற்கான ஆதாரம் உண்டு.

இது போன்று  தமிழர்களின்  சைவக்கலாச்சாரத்திற்கு மாறான  இந்தியக்கலாச்சாரத்தை
உலகமெல்லாம் வளர்ப்பவர்களாக தமிழர்கள் செயற்பட்டு இந்தியாவிற்கு பொரும் தொண்டாற்றுகின்றீர்கள்.

உங்கள் உழைப்பில் இலங்கை இந்தியாவின் எந்த தாக்கமும் இன்றிவாழ்கின்றீர்கள்
தமிழுக்கான தனித்துவத்தை வெளிநாட்டுத் தமிழர்கள் உருவாக்கி தமிழ்தெசியத்தை உலகில் அடையாழப்படுத்தி


தமிழ்மொழி  தமிப்பண்பாடு தமிழ்ச்சமயம் உலகில் அடையாளம் காணப்படவேண்டும் என்பதை உணருங்கள் அதற்கு ஏற்பவே எதையும் செய்யுங்கள் அதுவே தமிழின்வெற்றி.

அமெரிக்கா இந்தியா அய்ரோப்பா எல்லாம் தமது  நன்மைக்காக தமிழர்களைப் பயன்படத்தி அழித்துக் கொண்டே இருக்கும் என்பதை உணருங்கள்.

பில்லாடனை அழித்தது போல் இரவோடு இரவாக எமக்காக எவரும் ஒன்றும் செய்யப்போதில்லை. அல்லது ஈராக்மீது

செய்தது போல் எமக்காக ஏதும்நடக்கும் என்று எந்தத்தமிழர்களும் கனவுகாணக்கூடாது. கடாபிக்குநடப்பது போன்ற  எங்கள் நாட்டுக்கடாபிகளுக்கு நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

தமிழில் முன்னோர் சொல்லிவைத்ததை மட்டும் நம்புங்கள். அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும்.
வலியிருக்கும் நோவிருக்கும் சிரமமிருக்கும் அதற்காக மற்ரவர்கள் இரக்கப்படுவார்களே தவிர மருந்துகொடுப்பார்களே தவிர

பிள்ளையை எப்படியோ பெற்றெடுப்பவள் அந்த மகப்பேற்று வலியுடைய பெண்ணே!

எனவே தமிழர்களே! தமிழர்களே!!  தற்போது அந்தவலியை அந்தப்பெண் அனுபவிக்கின்றாள். தாங்கமுடியாது அனுபவிக்கின்றாள்.

அந்தப்பெண் யார்? அந்தப்பெண் தமிழர்கள்தான்.  குழந்தை எது? அந்தக்குழந்தை தீர்வுதான். மகப்பேற்றுக்காலம்  தாய்நலமாகவேண்டும். குழந்தை சுகமாகப்பிறக்கவேண்டும். இது இரண்டும் எதிர்மறையாய் நடப்பதுமுண்டு. அந்தநிலைவராது காப்பது மருத்துவர் நோயாளியைப் பொறுத்தவிடயம் எனவே நாம்தான் நிறையவே பலவிதமான மாற்றங்களுடன் நீண்டபயணம் செல்லவேண்எயிருக்கிறது.

பொ.முருகவேள் ஆசிரியர் சுவிசு-