குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 18 ம் திகதி செவ்வாய் கிழமை .

இணையதளத்தில் கிந்து தர்மத்தை பரப்ப வேண்டும் என அய்யா ராமகோபாலன் கேட்டு கொண்டதற்கு இணங்க, பதினான்கு

31.01.2017-மனு தர்மத்தை இங்கே குறிப்பிட்டு உள்ளேன், நாளொன்றுக்கு ஒன்று என, இவற்றை பதி னான்கு நான்கு நாட்கள் மனப்பாடம் செய்யுங்கள், கடைபிடியுங்கள்,கிந்து தர்மத்தை போற்றுங்கள் 1.சூத்திரனுக்கு கடவுள் கூறும் கடமை அவன் மற்ற மூன்று வருணங்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்பதே

2.சூத்திரன் தன்னால் பொருள் திரட்ட முடிந்தாலும், செல்வம் சேர்க்க கூடாது, ஏனினில் செல்வந்தன் ஆனால் பிராமணர்களுக்கு துன்பம் தருகிறான்

3.வேதம் கற்றலும், கற்றுத்தருதலும் கடவுளால் பிரமணர்களுக்காக ஒதுக்க பட்டவையாகும்

4.சத்ரியர்கள் வேதம் படிக்கலாம், வைஸ்யர்களும் வேதம் படிக்கலாம், சூத்திரர்கள் முன்னிலையில் இருபிறப்பாளர்களும் வேதத்தை படித்து காட்ட கூடாது

5.வேத பாடத்துக்கும், பெண்களுக்கும் தொடர்பேதும் இல்லை

6.சூத்திரன், வேதத்தை மனப்பாடம் செய்தாலோ, படிப்பதை கேட்டாலோ, அல்லது வேதம் ஓதினால், ஓதும் அவன் நாக்கு துண்டிக்கப்பட்ட வேண்டும்

7.பெண்களும், சூத்திரர்களும் முறைகேடாக வேதம் பயின்றால், பயிற்றுவித்தவன் மாபெரும் பாவம் செய்தவனாகிறான்

8.பிராமணரை பேணிப் பணி செய்தாலே சூத்திரருக்கு வேறு எத்தொழிலைக் காட்டிலும் மேலானது

9.பிறவியின் மேன்மையினால் படைப்புலகில் காணப்படும் பொருள்கள் அனைத்தையும் தனக்குரிய செல்வமாக பெறுவதற்கு பிராமணன் உரிமை பெற்றிருக்கிறான்

10.அரசன், வேதங்களையும், அற நூல்களையும் கற்ற பிராமணரை வணங்கி வழிபாட்டு, அவர் அறிவுரையை பின்பற்றி நடக்க வேண்டும்

11.பிராமணனே இந்த உலகைப் படைத்தவனென இதன் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. தண்டிப்பவனாகவும், ஆசிரியனாகவும் இருந்து எல்லா உயிர்களுக்கும் புரவலனாக விளங்குவதால் அவனை எடுத்தெறிந்து பேசுதல் ஆகாது

12.பிராமணன், எத்தகைய ஒழுக்கம் கெட்டவனாக, பிறர்மனை நயப்பவனாக இருந்தாலும், அவனை கொல்லக்கூடாது

13.பிரமணனைக் கொல்வதைவிட உலகத்தில் வேறு பெரியதொரு பாவம் இல்லையாதலால், பிராமணனை கொல்வதற்கு அரசன் மனதளவில் கூட நினைக்க கூடாது

14.இழிகுலத்தான் ஒருவன் பிறன்மனை புணர்ந்தால், அவனுக்கு மரணதண்டனை விதித்தல் வேண்டும்