குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

கலங்களின் கட்டமைப்பை அறிந்துகொள்வோம்

21.12.2016- அங்கிகளின் உடல் ஒழுங்கமைப்பு மட்டத்தின் கட்டமைப்பு, தொழிற்பாடு ஆகியவற்றின் அடிப்படை அலகு கலமாகும். சகல அங்கிகளும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான கலங்களால் ஆன வை.கலங்கள் அவற்றின் வடிவம், பருமன், தொழிற்பாடு என்பவற்றின் அடிப்படையில் பல்வேறு வகைப்படும். சில விசேட கலங்களைத் தவிர, பொதுவாகக் கலங்கள் வெறுங்கண்ணுக்குப் புலப்படுவதில்லை.

 

அவற்றை ஒளி நுணுக்குக் காட்டி அல்லது இலத்திரனியல் நுணுக்குக்காட்டியின் உதவியுடன் அவதானிக்கலாம்.

இந்த கலம் தொடர்பாக பல உயிரியலாளர்களது தனது ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

அவற்றுள் சிலரின் ஆய்வுகள்..

Anton Van Leeuwn Hoke (1650) - நீர் வாழ் தனிக்கல உயிரிகளை நுணுக்குக் காட்டியின் மூலம் அவதானித்து பதிவு செய்தார். இந்த வகையில் முதன் முதலில் அவரால் அவதானிக்கப்பட்டது Euglena ஆகும்.

Robert Hooke (1663) - தக்கை அடைப்பானின் மெல்லிய வெட்டு முகங்களை கூட்டு நுணுக்குக் காட்டியினூடாக அவதானித்து அதன் அறைகளை அவர் கலங்கள் எனப் பெயரிட்டார்.

therdore Schwan(1831) - விலங்குகள் யாவும் கலங்களால் ஆனவை எனும் கருத்தை முன்வைத்தவர்.

Mathias Schleden(1831) தாவரங்களும் கலங்களாலானவை எனக் குறிப்பிட்டார்.

Rudolf Virchow(1850) - சகல கலங்களும் ஏற்கனவே காணப்படுகின்ற கலங்களிலிருந்து கலப்பிரிவின் மூலம் உண்டாகின்றன எனும் உண்மையை வெளிப்படுத்தினார்.

 

கலங்களின் பருமன்

 

கலங்களின் பருமனானது வேறுபடும். அதாவது பக்டீரியாக் கலங்களே மிகவும் நுண்ணியவை. அவை சராசரியாக 0.2