குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சூரியன் உதிக்கிறதா பொருளாளருக்கு ? செயல் தலைவராகும் சுடாலின் !

12.12.2016-தி.மு.க-வின் செயல்தலைவராக சுடாலினை அறிவிக்கப் போவதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பேச துவங்கியுள்ளனர்.இதனால் சுடாலின் ஆதரவாளர்கள் செம குசியில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.ஸ்டாலின் செயல்தலைவராக அறிவிக்கப்பட்டால் "நமக்கு நல்ல விஷயம் நடக்கும் "என்று அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள்  வெளிப்படையாக பேசி வருவதாக கூறுகிறார்கள். முக்கிய பொறுப்புகளை சுடாலின் வசம் ஒப்படைப்பதில் தி.மு.க தலைவர் அமைதி காத்து வந்த நிலையில் அதற்கான பனித்திரை தற்போது விலகியுள்ளது என்று கூறுகிறார் நமக்கு தெரிந்து தி.மு.க நிர்வாகி.

தாமதமான இந்த முடிவுக்கு அந்த கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் ஒருசிலர் தடையாக இருந்ததாகவும்.மேலும் கட்சி வளராமல்  போனது அவர்களாலும் என்று தி.மு.க நிர்வாகிகள் சொல்கிறார்கள்.தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு முதுமை காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்படுவதாலும் அக்கட்சி பொதுச்செயலர் அன்பழகனும் முதுமை காரணமாக வேகமாக செயல்படாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தொண்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

செயல்தலைவராக சுடாலின் ?

வரும் 20 -ம் தேதி தி.மு.க பொதுக்குழுகூட்டம் தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடவுள்ளது.இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் சுடாலினை செயல் தலைவராக அறிவிக்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது.மேலும் துரைமுருகன்,எ.வ.வேலு,திண்டுக்கல் ஐ.பெரியசாமி ஆகியோருக்கான பொறுப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.செயல்தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டால் தி.மு.க-வில் இளம் ரத்தங்களின் புத்துணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பேசி வருகிறார்கள்

தாங்க வேண்டிய தடந்தோல் தளபதி - துரைமுருகன்

சுடாலின் செயல்தலைவராக அறிவிக்கப்படலாம் என்று தற்போது பேசபட்டு வரும் நிலையில் கடந்த மாதம் அறிவாலயத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி நுற்றாண்டுவிழாவின் நிறைவு விழா மேடையில் அதனை உறுதிபடுத்தும் விதமாக பேசினார் தி.மு.க-வின் முதன்மை செயலாளர் துரைமுருகன் "இந்த இயக்கம் தொடங்கி 100 ஆண்டு காலம் ஆகிறது. அதில் 50 ஆண்டுகளுக்கு மேல் இயக்கத்தை நடத்தியவர் கலைஞர் அவர்கள்.ஆனால் இன்னும் 50 ஆண்டு காலம் அல்ல.போகிற போக்கை பார்த்தால் அதாவது மெத்தனத்தை பார்த்தால் 100 ஆண்டு காலத்திற்கு இந்த இயக்கம் தேவைப்படுகிறது.இந்த நூறு ஆண்டு காலத்தில் சுமார் 70 ஆண்டு காலமாவது தாங்க வேண்டிய தடந்தோல் தளபதி அவர்களே..எனவே உன்னை விட்டால் எங்களுக்கு வேறு ஆள் இல்லையப்பா "என்றார் துரைமுருகன் .

இது தொடர்பாக துரைமுருகனை தொடர்பு கொண்டு பேசினோம்.பொதுக்குழுவில் விவாதிப்பது குறித்தெல்லாம் பேச முடியாது.அதே நேரத்தில் யூகத்திற்கு எல்லாம் என்னால் பதில் சொல்லமுடியாது என்று கூறினார்.

அரசியல் வாழ்வில் கால்நுற்றாண்டை கடந்த விட்ட சுடாலின் இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்று தி.மு.க தொண்டர்கள் பேசிவந்த நிலையில் தற்போது அதற்கு அங்கீகாரம்அளிக்கும் வகையில் மூத்த தலைவர்களும் பேசி வருவது "ஸ்டாலின்  செயல்தலைவர் "என்ற உறுதியை காட்டுவதாகவே தோன்றுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.