குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 20 ம் திகதி புதன் கிழமை .

அப்பலோவில் சசிகலா இரவு நடத்திய ரகசிய கூட்டம் – அதிர்ச்சியில் உறைந்த அதிமுக எம்எல்ஏக்கள்…!

09.12.2016-தமிழக முதலமைச்சர் யெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நாள் இரவு அவரது தோழி சசிகலா நடராயன் ரகசிய கூட்டம் ஒன்றை கூட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் முதலமைச்சர் யெயலலிதாவுக்கு கடந்த ஞாயிறு மாலை 7.30 மணி அளவில் கார்டியாக் அரசுட் ஏற்பட்டு, அதன் பின்னர் அவர் அதில் இருந்து மீளாமல் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தின் சில மணி நேரங்களுக்கு பின்னர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. யெயலலிதாவின் உடல்நிலை

சின்னதாய் சிக்கலில் உள்ளதாகவும் அதிகாலை 4 மணிக்கு அவரை அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டதாகவும் மீண்டும்

ஒரு முறை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

 

மட்டுமின்றி முதலமைச்சர் யெயலலிதாவை அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் வேறாரும் நுழையாத வண்ணம் கவனித்துக் கொண்டுள்ளனர். மேலும் குறித்த அறையில் சசிகலா

மற்றும் யெயலலிதாவின் சிறப்பு ஆலோசகராக செயல்பட்ட சீலா பாலகிருச்ணன் ஆகிய இருவர் மட்டும் சென்று வந்துள்ளனர்.

 

அடுத்த நாள் காலையில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கூட்டம் ஒன்று இருப்பதாக கூறி தகவல் தெரிவிக்கப்பட்டதம். பின்னர் அப்பல்லோ

மருத்துவமனையின் தரைத்தளத்தில் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

 

கூட்டத்தின்போது சசிகலா கூறியதாக கூறி கட்சியில் பொறுப்பில் இருக்கும் நபர் ஒருவர் ஆளுக்கு தலா 3 காகிதங்களில் பெயர் மற்றும் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

மட்டுமின்றி குறித்த வெத்து காகிதங்களில் என்ன தகவலை சேர்க்க உள்ளனர் என்பதும் எவருக்கும் தெரிவிக்கப்படவில்லையாம்.

 

ஆனால் குறித்த ரகசிய கூட்டம் குறித்து அதிமுக மாநிலங்களவை எம்.பி மைத்திரேயன் மறுத்துள்ளார். மட்டுமின்றி பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவிக்கு வருவதில்

எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

 

அதே நாள் மாலை 6 மணிக்கு மீண்டும் கூட்டம் இருப்பதாக அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் அந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட

முக்கியமான 5 மூத்த அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லையாம்.

 

குறித்த 5 அமைச்சர்களுக்கும் கட்சி பொறுப்பினை சசிகலா பங்கிட்டு வழங்கியிருக்கலாம் என கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசிக்கொண்டார்களாம்.

 

இதனிடையே கட்சியின் தலைமைக்கழக அலுவலகத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கூடியிருந்த நிலையில் இரவு 11 மணிக்கு மாயமான 5 மூத்த அமைச்சர்களும்

இறுகிய முகத்துடன் வந்து சேர்ந்தார்களாம்.

 

இதனையடுத்து கட்சியின் தலைவர் பொறுப்பில் இருக்கும் மதுசூதனன், பன்னீர்செல்வந்தான் அடுத்த முதலமைச்சர் என்ற தகவலை ஒற்றை வரி அறிக்கையாக வாசித்துள்ளாராம்.

 

சசிகலாவுடன் குறித்த மூத்த அமைச்சர்கள் 5 பேரும் என்ன ஆலோசனைகள் நடத்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.