குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

கோ குடும்ப மணவிழாவுக்கு மலர்கள் இறக்குமதி இவை அவர்களின் மலர்வளையத்திற்குமாகும்.

கொலண்டிலிருந்து   கொள்கலன்களில்  வந்திருக்கும்   மலர்கள்
எடுத்திருக்கும் குடும்பாத்தார்க்கு மலர்வளையமாகும்
மக்களை வருத்திக் கொண்டு மன்மதன்கள் வாழமுடியாது.- இதுவரலாறு.
தமிழராகவிருந்தாலும் எவராகவிந்தாலும் அறத்தின் தீர்ப்பு.
தமிழன் பணத்தில் மலரெடுத்து தமழர்பிணங்கள்     மேல்நின்று மணவிழாவா?
அப்பாவிகளின் ஆவியும் வருந்துவோரின் கொட்டாவியும்
இன்றைய கொ.கோ குடும்பத்தை துன்பத்தில் வீழ்த்தும் இதுநிகழும்.
மங்கல மலர்கள் நெதர்லாந்து மலர்கள் மக்கள்பணத்தில்
அமங்கலத்திற்கு இலங்கைமலர்கள் என்று  பலர்பேசும் காலம்வரும்.
தீமைகள் அழிய தீமைகள் உருவாகும் அகப்படுவோர் அழிவர்.

உலகமனிதாபிமானிகளின் வாழ்த்துக்கள்.மனஅலைகளாக மாறிச் சாதிக்கட்டும்.பலகோணத்தில் தாக்குதல் நிகழல் உருவாகவேண்டும்.


பூநகரித் தேர்தல் காலத்து தேன்குடித்தேன் வெறிகொண்டு சிலவரிகள் தருகின்றேன்.

நாம் பூநகரிச் செடிகளின் பூக்கள் ஒரே மரத்தின் கிளைகள்
கட்சியென்ற  கத்திகளால் வெட்டுண்டு வெவ்வேறு ஆகாது
என்றென்றும் ஒட்டுண்டு குழையல் சோறுண்டு வாழ்வோம்.

வெவ்வேறு கிளைகள் என்று எண்ணினாலும்
அடிமரம் ஒன்று என்று எண்ணுங்கள்
அது வாடியடி ஆலமரம் பலமான பலகாலமரம்.

அதன் கிளைகளும் விழுதுகளும் பல
அதன் ஆணிவேர் ஒன்று
அந்தவேர் பூநகர் என்ற வேர்.

உலகிற்கு சக்கரை(சீனி) அறிவித்த
கரும்புற்கள் (பனைகள்.)
ஈடுசெய்ய வந்தது கரும்பு

கரும்புல்லில் இருந்து வந்ததே
கரும்பு கருபிலிருந்து வந்ததே
இனிப்பென்ற இன்பமான சொல்லு.

நாம்கௌதாரி முனைப் பனைமரங்கள்
அந்த மண்குவியல்கள் வெறும்
மண்களல்ல தமிழினவரலாற்றுக் குவியல்கள்.

இதை அறிய எம்மிடம் அறிவியல் இல்லை
சான்றுகளை ஆதாரப்படுத்த அங்குள்ளோருக்கு
ஆர்வமுமில்லை அதை அறிந்துமில்லை.

பழைய தாளிகள் பழையநணயங்கள்
பழை படையல் மடை முறை
வழிபாட்டு நிகழ்வுகளுடன் பெரும்படை

அத்தெய்வம் ஆணாபெண்ணா அறியமுடியாது
பலரையும் ஈர்த்து அருள்பாலிக்கும்
அம்மனென்பர் கண்ணனென்பர்.

தமிழர் திராவிடர் அம்மன் முறையினர்
ஆரியரான எதிரியானவர் கண்ணன் முறையினர்.
வேறுபாடு புரியாத புலம்பல்ளும் உண்டு.

நாம் சோலை வேரவில்கிராஞ்சித் தென்னை மரங்கள்
முழங்காவிலின் வாழைமரங்கள்
குழாய்க்கிணற்று உழைப்பின் ஊற்றுக்கள்.

பத்தினிப்பாய் பாலைமரங்கள்
வெரவில் வெளித் தேக்குமரங்கள்
பல்லாய் சவுக்குமரங்கள்.

கொக்குடையான் வெளியில்
துள்ளி ஓடும் புள்ளி மான்கள்
தண்ணியில் துள்ளும் விலாங்குகள்.

பொன்னாவெளிப் ஆக்கள்
பல்லவராயன் கட்டு குளத்தின் அணைகள்
நாச்சிக்குடாவின் படகுகள்.

வாடியடிக் கோட்டைக் கற்கள்
அந்தஆலமரத்தின் விழுதுகள்
நல்லுார்க் கட்டுக்கரைக் காவடிகள்.

அத்தாய் நாலாங்கட்டை பள்ளிக்குடா

மட்டுவில்நாடு வில்லடிசெட்டியகுறிச்சி

தம்பிராய் அத்தனையும் அயற்கிராமங்கள்.

வெட்டினாலும் கொத்தினாலும் கொழுத்தினாலும்
மீண்டும் தளைக்கும் மிடுக்குடன் வளரும்
பெரும் காடுகள் படர்பற்றைகள்.

உயரிப்பிட்டி கள்ளிப்பிட்டி தோட்டவெளிகள்
கத்தரிக்காய் மிளகாய் மரக்கறிகள்.
கதிர்காமக் கந்தனமர்ந்த கரிக்கோட்டுக்குளக்காரர்.

பூநகரிக் காட்டு ஆனைகள்
நாம் செத்தாலும் ஆயிரம் பொற்காசு
சங்குப்பிட்டியின் சங்குகள் சுட்டாலும் நாம்வைண்மை.

நாம் சித்தன் குறிச்சியின் சித்தர்கள்
மடம் கட்டி வாழ்ந்த ஞானிகள்
நாம் குமரிநாட்டுக் குடிகள்.

தமிழ் இனத்தின் பூர்வீகங்கள்
நாகதீபம் என்ற வன்னியின்
வடநுனி நிலத்தினர் நாகர்.

நாம் உலகெங்கும் பெயர் போன பூநகரி
மொட்டைக்கறுப்பன் அரிசியின்
சொந்தக்காரர்கள்.

உங்கள் உழவு இயந்திங்கள்
ஓடும் ஒலி கேட்கிறது பள்ளத்தில் விழுந்தேறும்
போது தகரமும்மரப்பலகையும் கலகலக்கும் சத்தம் சங்கீதமாய்க் கேட்கிறது.

பள்ளிகளில் கற்றுக் கொடுத்தவர்கள்
வயல்களில் கடினமாய் உழைத்தவர்கள்
கறுக்காய்த் தீவுமக்கள்.

செல்லையாதீவில் செம்மையாய்

நெல்விளையம் ஆரியம்பொந்தில்

செத்தல்மிளகாய் காயும் ஆலங்கேணியில்

இராமன்களப்பில் உப்பு விளையம்

ஆடிமாதம் இப்போ பனங்காய்விழும்.

பினைந்து காயவைத்தா பனாட்டுவரும்

பனங்களியில் பனம்பிட்டு பலகாரம்

உண்டுமகிழ அங்கு சூழ்நிலைதான்

சரியில்லை.

பொன்னம்பலம்.முருகவேள் ஆசிரியர்-பூநகரி..சுவிசு 19.07.2011

தொடரும்.....


சிவத்தம்பியெனும் தமிழ்விழி மூடியது தமிழ்ஒளி அணைந்தது.குமரிநாடு இணையத்தின் இறுதி அஞ்சலிகள்.10.07.2011
சிவத்தம்பியெனும் தமிழ்விழி மூடியது தமிழ்ஒளி அணைந்தது.
தமிழ் முத்தமிழாய் இருந்தது இவர் மும்மொழியாய் திகழ்தார்.
எத்திசையும் சென்றுவந்தார் மொழிகளை கலைகளை  ஆய்வுகள்செய்தார்.
அன்னியதேசத்து தமிழ்ப்பிள்ளைகள் கற்றிட நுால்கள் ஆகிட
ஆர்வம்கொண்டோர்க்கு ஆதரவாய் உறுதுணையாய் உயர்ந்திருந்தார்.
இலக்கியத்தை இடித்துப்பிழிந்து தமிழ்மூலிகை ஆக்கினார்.
கலைகளை  உயர்த்திட உழைத்தார்    கலங்கரை  விளக்கானார்..
ஒளிவடிவான இறைவனோடு  இன்றுஒளியிடையாகின்றார்.

பூநகரி..பொ.முருகவேள்.ஆசிரியர் சுவிசு

சினிமாவிலும் இந்துமாயையிலும் மூழ்கிக்கிடக்கும்வரை காலையில்லை என்றும் மாலையே!
13.08.2011-பூநகரி.பொ.முருகவேள்.ஆசிரியர்.சுவிசு

மலையக மக்களை மாய்த்த மனிதர் வெள்ளையர்-தமிழர்-சிங்களர்.
இன்னும்  இ( ல)யங்களில் தேயிலைச் செடி விலங்குகளாய் மாய்கின்றனர்.
இவர்களை இப்படியே வைத்திருப்பதில் இ.தோ.காவிற்கு பங்குண்டு.
பயனுள்ள சில செய்து பெரியகட்சியாய் பயனற்றுக் கிடக்கிறது.


அது போல்  த. தே.கூ.அமைப்பு வளருமோ! தமிழருக்கு என்னாகுமோ?
மலையகத்தில் இ(ல)யங்கள் அறையாகக் இருக்கிறது
வன்னியில் பத்து தகரம் கூரையாய் வாட்டி வதைக்கிறது.
கிறிசு பேய்வேறு  வந்திருக்கு அது தமிழரை மட்டுமே கடிக்கிறது.

மலையகத்திலும் கடிக்குது கிழக்கிலும் கடிக்குது
கிறிசு பேய் பெண்களையே கடிக்குது கலைக்குது.
பாதுகாப்பு அமைச்சு செயல் ஏன் பதுங்குது?
அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கோ! என்று கேள்வி எழுந்திருக்கிறது?

கிறிசுபேய் என்று  பெயர் வைத்ததே பெரிய இடமோ எனத்தோன்றுகிறது.!
பிடிபடாது நழுவும் வழுக்கும் ஆனால் எப்டியும் உங்களைத்தாக்கும்.
இலங்கையில் தமிழன் பட்டிணியுடன் பயத்துடன் வாழ்ந்து
முன்னேற்றம் இல்லாது மடங்கட்டும் என்ற திட்டங்களே அரங்கேறும்.

தமிழர் வாழ்வில் அவலங்கள் கலந்திருக்கும் அதற்கான
அடித்தளங்கள் உறுதியாய் ஆக்கப்பட்டிருக்கு!
காசுமீரில் சுவிசுபோன்று அழகிருக்கு சீமைஇலந்தை(அப்பிள்)
விளைய வளமிருக்கு மக்கள் மகிழ்ந்து வாழமட்டுமே முடியாதிருக்கு!

இது கடவுள் வகுத்த விதி என்பது மடமை மந்திரக்காரரின் சூழ்ச்சி!
கடவுளுக்கு ஓதுவது மடடும் தொழிலல்ல தாம்மட்டும் உயர்ந்திரக்கத்தந்திரம்.
காசுமீராய் தமிழரிடம் மாறிக்கிடக்கிறது தமிழகம் முழுமையாய்
ஆடாது டில்லி ஆடாது. தமிழகமும் உலகத்தமிழினமும் சினிமாவிலும் இந்து
மாயையில் மூழ்கிக்கிடக்கும் வரை காலையில்லை என்றும் மாலையே!