குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

மறந்த தமிழர்களாக நாங்கள். போர் முடிந்தபின் எதிலித்தமிழரானாலும்.

மறந்ததமிழரா நாங்கள்...
பிஞ்சுமனங்கள் நொந்தமனங்கள்
 மேல் வேல்பாச்சிய  
மறத்தமிழர் வெடிவெடித்தனர்

வரண்ட வன்னியில் மிஞ்சிய மக்கள் சுருண்டுபோய்
மருண்டு வாழ்கின்றனர்.
வாழும் உரிமையிழந்து தன்வீட்டையே
மாற்றான் அனுமதியுடன் பார்க்கவேண்டிய நிலை
அடுத்தவர் வீட்டில் படுத்து எழும்பும் நிலை
கெடுத்தவர் என்றாலும் வணங்கி பல்லிளித்து
சமாதானம் காட்டி வாழும் கொடுமை. 

 
தேர்தல் முடிந்தால் என்ன?
யார்தான் வென்றால் என்ன?
வன்னியை கருவறுக்க எண்ணிய
கருநாக அரசே ஆழும்.

இதை இப்போதே எண்ணுவதே
உரியதும் நல்லதும் கூட
சுயநலமுடன் அடங்கிப்போகும்
என்பதற்கு  எடுத்துக்காட்டு பட்டாசு
என்றுமில்லாதவாறு பட்டாசு
நஞ்சு வாயு கொடுத்த நஞ்சுநாடுகளின்
பட்டாசுகள் இவை என்பதை
எண்ணாத மறத்தமிழர் நாங்கள்...

வெளிநாட்டுப்பணத்தில் நாம்மட்டும்
நல்லாய் வாழ்கின்றோம் என்று
வெடித்துக்காட்டிய வேடிக்கை.
வெளிநாட்டுப் பணமிருக்கு
வெடிகொழுத்த மனமிருக்கு
அடுத்தவர் மனம்கெடுக்க
எமக்கு மனதில் இடமிருக்கு

 பிஞ்சு மனங்கள் தமக்குள் ஏங்கின
எமக்கு இல்லையா என்று
நொந்த மனங்கள் வெந்தன
எங்கள் பிள்ளைகள் ஏங்குதென்று..
நாங்கள் மறத்தமிழரா? மரத்தமிழரா?
மறக்கும் தமிழரா?

இலங்கையில் இருக்கும்போது
இனம் என்று எண்ணாது
சகோதரிகளுடன்  சேட்டை
நாட்டை விட்டு அய்ரோப்பா
வந்தவுடன் ஆமிகெடுக்கின்றான்
என்று அறிக்கை

பகட்டும் வேண்டாம் பட்டாசும் வேண்டாம்
நடந்ததை மறக்காது இருப்பது நல்லது
முன்பு வாழ்ததை நினைப்பது நல்லது..


பொ.முருகவேள் ஆசிரியர்