குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் இடம்பெற்ற தேர்தலின்; வாக்குகளை எண்ணும் பணி

22.11.2016-அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சை ஆகிய தமிழ்நாடு சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியின் நெல்லிக்குப்பம் சட்டசபை தொகுதி ஆகியவற்றுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. காலை 10 மணியளவில் வெளியான முடிவுகளின்படி தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரங்கசாமி சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போ சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதேபோல், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலா சுமார் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

வாக்கு எண்ணும் அறைகளுக்குள் வேட்பாளர்களின் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை கண்காணித்து வருகின்றனர் இன்று பிற்பகலுக்குள் வெற்றி-தோல்வி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. இதேபோல், புதுவையில் நெல்லிக்குப்பம் சட்டசபை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கண்ட 4 தொகுதிகளிலும் கடந்த 19ம் திகதி வாக்குப்பதிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.