குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தமிழகத்தலைவர்களுக்கும் தமிழகமக்களுக்கும் உலகத்தமிழர்களுக்கும்அன்பான வேண்டுதல்.குமரிநாடு.நெற்

  13.09.2011.த.ஆ.2042-அய்.நா.சபையின் மனிதஉரிமைகள் ஆணையகத்தின் 18 ஆவது கூட்டத்தொடர் இன்று12.09.2011 இல் சுவிற்சர்லாந்து யெனிவாவில் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டுடிருக்கிறது.( இக்கூட்டம் தொடர்ந்து 12நாட்கள்) நடைபெறவுள்ளது. இக்காலகட்டத்தில் போர்க்குற்ற விசாரணைகளை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை இலங்கைக்கு எதிராக அமெரிக்காவும் அய்ரோப்பியநாடுகளும் முன்னிலைப்படுத்த முயலலாம் என்ற அச்சத்தில் இலங்கை அரசு இலங்கை இசுலாமியச்சகோதர அமைச்சர்களை அரபுநாடுகளுக்கு அனுப்பி தமக்கு ஆதரவுதரும்படி கேட்டிருக்கிறது.

மற்றும்சிங்களச் சகோதர அமைச்சர்களைகளை  ஆபிரிக்க இலத்தீன் நாடுகளுக்கு அனுப்பிவைத்து ஆதரவுகோரியிருக்கிறது. இந்தியப்பிரதமருக்கு இரகசிய துாதரை அனுப்பி ஆதரவுகோரியிருக்கிறது. கொழும்பிலுள்ள வெளிநாட்டு துாதர்களுக்கு இராப்போசன விருந்து கொடுத்து முன்னேற்பாடு செய்திருக்கிறது.

இலங்கை உலகிற்காக செய்த ஏமாற்றுகளை தமிழர்களுக்காக செய்ததாக தம்பட்டம் அடிப்பதுடன் இலங்கைத்தமிழர்கள் பொருளாதாரம் தேடி நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்வதற்காக பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். என்ற மென்கதைகளை அவிட்டுவிடும் திட்டத்தை தயாரித்திருக்கிறது.

சென்ற குழுவிற்கு பயிற்சி பணம் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கிறது.

 எமது தமிழ்த்தேசியக்கூட்டமைப்போ தலைமைத்துவத்திற்கு கனிணிப் பயன்பாடு இன்றி தனியே பேச்சுக்களை மட்டும் நடத்திவருகிறது.

 சிறிலங்கா கட்சியின் விருப்பிற்குரிய சம்பந்தரய்யாவும் அவருக்கு பலமாகவிருக்கும் மகிந்த அவர்களின் நண்பரான சுமந்திரன் அவர்களும் இன்று திரு.பிளேக் தெ.ஆ.பிராந்தியத்திற்கான செயளார் அவர்களுடன் பேச்சுவார்த்தை என்பன எமது தரப்பின் பலவீனத்தையும் மகிந்தவை தனிப்பட்ட முறையில்  காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளாகவும் தோன்றுகின்றன!

ஏன் அரசியல் விஞ்ஞானம் அறிந்த சுரேசு பிரேமச்சந்திரன் தவிர்க்கப்பட்டார் என்ற அய்யம் நியாயமானதாகவே  படுகிறது. 

 தற்போதைய தலைமை அறிவும் ஆற்றலும் கொண்டதாகவிருந்தாலும் எதிரியின் பலம் செயலுக்கு ஏற்பசெயற்படவில்லை என்றும் நோக்க இடமுண்டு.

சம்மந்தரய்யா இலங்கை இந்தியா என்ற வட்டத்திற்குள் நின்று மகிந்தவை நம்பி சிங்களத்தலமைகளை நம்பிக்கொண்டு தீர்க்கலாம் என்று நம்புகின்றாரோ நடிக்கின்றாரோ என்பது புரியவில்லை. நம்புவது தவறு என்பதை மட்டும் குறிப்பிடமுடியும்.

இது இவ்வாறு இருக்க அமெரிக்காவானது இந்தியாவிடம் ஒரு  உத்தரவாதத்தைக் கோரியிருக்கிறது இலங்கை போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொண்டு சரியான நீதியை நிலைநாட்டுமா? என்பதாகும். இதற்கு இந்தியா
 தமிழகத்திற்கு தெரியாமல் தமிழர்களுக்கு தெரியாமல் இலங்கைக்கு ஏற்றமாதிரிச் செயற்படுவதை விரும்பினாலும் சில சிக்கல்கள்  உருவாகாமல் இருக்கும் வகையிலும் நடந்து கொள்ளும் என்பதிலும்  அய்யமில்லை.

 இதற்காகவே தமிழர்களைச் திசைதிருப்பும் முயற்சியில் சிலகாலங்களுக்கு முதலே ஆரம்பித்து விட்டது எனலாம்.  அதுதான்  துாக்குத்தண்டனை விவகாரம்.

 அதை அரங்கேற்றி விட்டு இன்று ஈழத்தமிழர்களுக்காக  தீவிரமாகப் போராடக்கூடிய தலித்தினமக்களையும் திசைதிருப்யிருக்கிறது. இதை உலகத்தமிழர்கள் நாம் புரிந்துகொண்டு  செயற்படவேண்டும்.

 தமிழக இசுலாமியச் சகோதரர்களைக்கொண்டு இசுலாமியநாடுகளை நாடி தமிழர்களுக்கு ஆதரவுதரும்படி கோரவேண்டும்.

தமிழர்கள் வாழும்நாடுகளான சிங்கப்புர் மலேசியா ஆபிரிக்கா மொறிசியசு பீயித்தீவு போன்ற நாடுகளின் தமிழர்களும் பாண்டிச்சேரி தமிழகத்தமிழர்களும். ஏனையநாட்டுத்தமிழர்களும். இந்தவேளையில். தமிழர்களின் பாதிப்பிற்கு நீதிகிடைக்கப் பாடுபடவேண்டும். தமிழரகளுக்குஏற்பநடக்கவேண்டும் அய்.நா.மனிதஉரிமைகள் ஆணையகத்தில் தலைமைவகிப்பவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம்பிள்ளை  என்னும் தமிழ்ப் பெண்மணியாவார்.

அவர்களுக்கும் பாக்கீன் மூன் போன்ற தலைவர்களுக்கும் அமெரிக்க ஆசிய அய்ரோப்பி நாட்டுத் தலைவர்களுக்கும் காணமல்போனவர்களின் ஆதாரங்கள்  சொல்லிக்கொண்டிருக்கும் படியான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களையும் கோரிக்கைகளையும் மடல்கள் மூலம் மின்அஞ்சல் மூலம் இரகசியமாக செலவுஏதும் இல்லாது அனுப்பிவைக்கலாம்.

 இதைவிடுத்து  தமிழ்த்தொலைக்காட்சிகளில் முழங்குவதும்  மேடைகளில் முளங்குவதோடு நின்று விடுவது பயனற்றசெயலாகும்.

குமரிநாடு.நெற்-12.09.2011