குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கனடாவின் முக்கிய சட்டங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

12.10.2016-கனடாவில் ஒருவரின் காணிக்குள் உள்ள மரத்தின் கிளை படர்ந்து அயலவரின் காணிக்குள்ளும் அது படர்ந்திருந்தால் அந்த மரம் அயலவனுக்கும் பங்குதாரருக்குமுரிய மரமாக சட்ட ரீதியாக கருத்தில் கொள்ளப்படும். அயலவரின் சம்மதமில்லாது தமது காணிக்குள் உள்ள அதே மரத்தினை வெட்டி அகற்றினால் கூ20இ000 டொலர் வரை பணத் தண்டணையும் மூன்று மாத சிறைத் தண்டனையும் கிடைக்கலாம். (Provincial Forest act 10 (21) )

எவரும் தங்கள் காணிக்குள் உள்ள பாரிய மரங்கள் தங்கள் சொந்த உடமை என்ற நினைப்பில் வெட்டவோ அல்லது அகற்றவோ முடியாது. 1432 Military trail, Scarborough, Ontario என்னும் விலாசத்தில் உள்ள வீட்டு உரிமையாளர் நகரசபையின் அனுமதியின்றி தமது காணிக்குள் இருந்த மரங்களை வெட்டி அகற்றிவிட்டார். 56,000 டொலர் பணத் தண்டனையினை கனடாவில் உள்ள ரொரன்ரோ நகரசபை நீதி மன்றம் விதித்திருந்தது. (ஆதாரம்: Scarborough Mirror ஏப்ரல் 11. 2013)

முதியவர்களை வீடுகளில் வைத்து உடல், உள ரீதியாக அல்லது நிதியியல் ரீதியாக கொடுமைப்படுத்தி அவர்களைக் கவனிக்க வேண்டிய இடங்களில் கவனிக்காது உதாசீனம் பண்ணி துன்பங்கள் பாதிப்புக்களை ஏற்படுத்தினால் அது கனடாவில் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு சிறை தண்டனைக்கும் உள்ளாக வேண்டி வரும் ((Elderly Abuse Law of the Canadian Criminal code).

64 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் கனடாவில் குடியிருக்கும் மனை என்ற சொத்தின் உரிமையாளராக இருந்து அவரின் குடும்ப தேறிய வருமானம் என்பதும் மிகக் பெரிய அளவில் இல்லையேல் நகர சபைக்குச் செலுத்தும் வீட்டு வரியில் கூ500 டொலர் வரை சிறு சலுகையினை மாகாண அரசிலிருந்து பெறலாம். (Ontario Senior home owner’s Property tax Grant)

கனடாவில் வங்கிகள், காப்புறுதி கம்பனிகளுடன் வாடிக்கையாளர் ஒருவருக்கு தீர்க்க முடியாத முரண்பாடுகள், பிரச்சனைகள், அதிருப்திகள் என ஏற்பட்டால் அவற்றினை முறைப்பாடு செய்ய ஷகுறைகேள் அதிகாரி| என்பவரின் அலுவலகம் பல சட்ட உதவியாளர்களின் குழுவோடு இயங்கிக்கொண்டேயுள்ளது. எந்தவொரு முறைப்பாடுகளையும் இரு பக்கமும் விசாரித்து நியாயமாக தீர்த்துவைப்பார்கள். இதே நியாயமன்றம் நகரசபை அரசு, மாகாண அரசு, மத்தியஅரசு, நிறுவனங்களிலும் உள்ளது. (Ombudsman Group)

கனடாவில் ஆயுள் காப்புறுதி செய்த ஒருவர் தாம் ஒப்பந்தம் செய்து கொண்ட கம்பனி வங்குரோத்து நிலைமைக்கு (Bank Ruptcy) செல்லுமா? என்ற அச்சம் என்றுமே தேவையில்லை. மத்திய, மாகாண அரசின் நிதி அமைச்சு கம்பனிகளை கண்காணிக்கும். தேவை ஏற்படின் வாடிக்கையாளர்கள் பாதிக்காமல் இருக்க ஒப்பந்தம் இன்னொரு கம்பனிக்கு மாற்றி விடும். அது தவிர ஒரு குறிப்பிட்ட தொகை வரை அரச நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர் ஒவ்வொருவரினதும் ஆயுள் காப்புறுதி ஒப்பந்தத்திற்கு உத்தரவாதம் வழங்குகின்றது. (Assures Inc.)

கனடாவின் வாகனக் காப்புறுதியின் விலைகளை தீர்மானிக்கும் போது வேறு பல தகவல்களோடு காப்புறுதி கம்பனி இரு முக்கியமான பத்திரங்கள் பெறப்பட்டு அதனை ஆழமாக பரிசீலனை செய்து காப்புறுதி விலையினைத் தீர்மானிக்கின்றன. அவையாவன தெரியவில்லையானால் தெரிந்து கொள்ளுங்கள்.

(a.) C.G..I என்னும் நிறுவனம் சேகரித்து பதிவு செய்து கொள்ளும் ஓர் அறிக்கை. (“Auto Plus History Report”) ஏற்கனவே வைத்திருந்த வாகனக் காப்புறுதியின் வரலாறு, வாகன விபரங்கள், எதிர்கொண்ட விபத்துக்களும் முடிவுகளும், வழங்கிய நட்டஈடுகள் என ஒரு விபரமான பதிவாக இவ் நிறுவனத்திடம் இருக்கும்.

(டி.) மாகாண போக்குவரத்து அமைச்சு வழங்கும் அறிக்கை. (“Driving Abstract Report” ) வீதி ஒழுங்கு சட்டங்களை மீறி தண்டனை ரிக்கற்றுக்கள் வாங்கிய பதிவுகள் யாவும் விபரமாக இங்கு பதிவில் இருக்கும்.

வருமானம் குறைந்தவர்கள் கனடாவில் குடியிருப்பதற்கு இடமில்லையேல் அரச மானியங்களுடன் வழங்கும் குடியிருப்புக்களுக்கு விண்ணப்பித்து காத்திருந்து குடிமனையினைப் பெற்றுக்கொள்ளலாம். அவரின் மொத்த வருமானத்தில் 30மூ மட்டுமே வாடகைக் கட்டணமாக செலுத்த வேண்டும். (Socialhousing program for low income people )

உடல் நோயின் பாதிப்பு என்பது கனடாவில் ஒருவரின் வாகனமோட்டும் ஆற்றலை மந்தப்படுத்துமாக இருந்தால் அது வீதியில் ஏனையோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அவரை பரிசீலனை செய்யும் மருத்துவர் ஒவ்வொருவரும் போக்குவரத்து அமைச்சுக்கு அதனைக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்பது சகல கனடிய மருத்துவர்களுக்கும் உரிய நிர்ப்பந்தம் ஆகும். இத்தகைய நிலைமை மருத்துவ அத்தாட்சிகளுடன் நிரூபிக்கப்படும்போது அவர்களுக்கு வாகனம் செலுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். (License Suspension for Medical reason)

அயல் வீட்டுக் காரர்களின் சத்தங்கள், கும்மாளங்கள் என்பது கனடாவில் ஒரு வரையறைக்குள் உட்பட்டது. கொண்டாட்டங்களில் இருந்து வரும் சத்தங்கள் கூட ஏனையோருக்கு தொல்லையாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தினுள் நிறுத்தப்பட வேண்டும். மீறினால் முதலில் எச்சரிக்கை. தொடர்ந்தால் அந்தந்த நகர சபைச் சட்டங்களினால் தண்டிக்கப்படுவார்கள். (City Bylaw – Regarding neighbors noise)

மதுபோதையில் வாகனம் செலுத்திப் பிடிக்கப்பட்டால் ஒரு மாதத்திற்கு சாரதி அனுமதிப் பத்திரத்தினை அந்த இடத்தில் வைத்து இரத்து செய்யும் உரிமை பொலிசாருக்கு உண்டு. ஒரு மாதத்தின் பின்பு அதற்கு கட்டணம் செலுத்தி அதனை மீள் பெற வேண்டும். தொடர்ந்து நீதி மன்றத்தில் கீரிமினல் குற்றச் சாட்டில் வழக்கு தொடரப்படும். அங்கும் தண்டனைகள் கிடைக்கும் (Impaired Driving law of the Canadian Criminal Code).

கனடாவிலிருந்து உலகின் எந்த பகுதிக்குச் சென்றாலும் அங்கு நாங்கள் தங்கியிருக்கும் நாடுகளில் எதாவது பொருட்களைத் தொலைத்தால் அதனை ஒரு வரையறையின் கீழ் கனடாவில் உள்ள அவரின் வீட்டுக் காப்புறுதியிலிருந்து இழப்பீட்டு நிவாரணமாகப் பெறலாம். (Claim from home Insurance Contants Coverage)

கனடாவில் வளர்ப்பு நாய் வீடுகளில் வைத்திருப்பவர்கள் அதற்கு காப்புறுதி செய்து வைத்திருக்க வேண்டும். (Pet Insurance) இல்லாத நிலையில் அவரது நாய் இன்னொருவரை கடித்து காயப்படுத்தி விட்டால் நாய் உரிமையாளருக்கு வீடு இருந்து அங்கு அந்த வீட்டுக்கு காப்புறுதி செய்து வைத்திருந்தால் அதிலிருந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் கிடைக்கும். வளர்ப்பு நாய்க்கு காப்புறுதி அல்லது வீட்டு காப்புறுதியும் இல்லாதவர் அவர் நட்டத்தினை சட்ட ரீதியாக பொறுப்பு ஏற்பதை தவிர வேறு வழியில்லை. இரு தடவைகளுக்கு மேல் எவரையாவது வளர்ப்பு நாய் கடித்து காயப்படுத்தினால் நகரின் மிருகக் கட்டுப்பாட்டு சபை (Animal Control Department) நாயினை வந்து பறித்துக் கொண்டு போய்விடுவார்கள்.

“வீதி ஒளி சைகைகள்|” (Animal Control Department) என்பது பொதுவாக குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஒருமுறை மாறி மாறி சைகைகளை வீதியில் வாகனம் செலுத்துபவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற மாதிரி தொழில் நுட்பவியலாளர்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கனடாவில் சில சந்திகளில் மின் காந்த தூண்டல் இணைப்பு நிலத்தின் கீழ் கண்ணுக்குத் தெரியாத மாதிரி பதிக்கப்பட்டிருக்கும். வாகனம் அந்த இடத்தில் வந்து நின்று சில நொடிகளில் சைகை சிவப்பிலிருந்து பச்சைக்கு மாற்றிக் கொடுக்கும். வாகனம் எதுவும் வரவில்லையானால் அந்தப் பக்க சைகை ஒளி மாறாமல் தொடர்ந்து இருக்கும். (Metel loop will be embedded in the pavement without visible)

வாகனமோட்டும் தவறுகளுக்கு பொதுவாக பணத் தண்டனை (Fine)மற்றும் லைசென்ஸ் பறிமுதல் (License Suspension) என்பதே பொதுவாக சாரதிகளுக்கு வழங்கும் தண்டனைகளாகும். ஆனால் கனடாவில் ”ஆபத்ததான வாகன ஓட்டம்” Dangerous Driving) கவனமில்லாத வாகன ஒட்டம் (Careless Driving) மது போதையில் வாகனம் செலுத்துதல் (Impaired Driving) ஆகியனவற்றுக்கு சிறை தண்டனையும் கிடைக்கலாம்.

25,000 டொலர் வரை வசூலிக்கமுடியாத கடன்கள், பாதிப்புக்கள் ஆகியவற்றினை அறவிட சம்பந்தப்பட்டவர்களை தாங்களாகவே துரத்த மாகாண அரசின் சட்டமா அதிபதியின் திணைக்களம் சிறுசிறு நீதிமன்றங்களை கனடாவின் ஒவ்வொரு நகரிலும் உருவாக்கியுள்ளது. (Small Claim court). அந்த நீதிமன்றத்தின் உதவியுடன் ஆதாரங்களிருந்தால் அறவிடமுடியாத கடனை அறவிடலாம்.

வாடகைக்கு குடியிருக்க இடம் வழங்கியோர், மற்றும் குடியிருப்போர் பிரச்சனைகள், முரண்பாடுகள் சிக்கல்களை, நியாயமான முறையில் தீர்த்து வைக்க தேவைப்பட்டால் வாடகைக்கு குடியிருப்பவரை காலி செய்ய என ஒரு நியாயமன்றம் கனடாவின் சகல நகரங்களிலும் இயங்கிக் கொண்டேயுள்ளது. (Landlord Tenant Board)

தொழில் செய்யும் இடங்களில் தொழில் நேரம் உடல் காயங்களுக்கு உட்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க ஒரு மாகாண அரசின் நிறுவனம் இயங்கிக் கொண்டேயுள்ளது. Workplace Safty Insurance Board)

வாகன விபத்துக்களில் ஒருவர் அந்த இடத்திலேயே தப்பி தலைமறைவானால் அது கனடாவில் ஒரு பாரதூரமான குற்றமாகும். ஒரு பாதுகாப்புக்காக அந்த இடத்தில் நிற்காது போயிருந்தாலும் காலதாமதமின்றி முறைப்பாடு செய்யவேண்டிய இடத்தில் செய்யத் தவறினால் பணத் தண்டனை, புள்ளி மதிப்பீட்டு இழப்பு மற்றும் லைசென்ஸ் இழப்பு என்பவற்றுடன் சிறைத்தண்டனை வரை எதிர்கொள்ளவேண்டி வரலாம்.

கனடிய பிரஜை ஒருவர் ஏனைய நாடுகளில் நிரபராதியாக நிற்கும் போது எதாவது வன்முறைகளில் தாக்கப்பட்டு உடல் காயமடைந்தால் அதனை அந்த நாட்டின் பொலிஸ் அறிக்கை மருத்துவ அறிக்கை போன்ற ஆதாரங்களை காட்டி கனடாவிற்கு வந்த பின்பு கனடா மத்திய அமைச்சின் நீதி அமைச்சுக்கு விண்ணப்பித்து சிறு நிவாரணம் பெறலாம். எந்த நாட்டிலிருந்து வன்முறையின் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டதோ அந்த நாட்டில் உள்ள கனடிய தூதரகத்தில் முதலில் முறைப்பாடு செய்ய வேண்டும். அவர்களும் நிவாரணம் பெறும் வழிகளைக் காட்டுவார்கள் (Victims fund program Federal justice Department).

வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் விபத்துக்களில் சரி, பிழையினை தீர்மானிக்கும் சட்டம் கனடாவின் மாகாண அரசுகளினால் வரைபடங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. (Accident fault determination rules & regulation act) ஆனால் ஒரே நேரத்தில் மூன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி நடைபெறும் விபத்துக்களில் (Pile up Collision) எல்லோரும் 50மூ வீதத்திற்குரிய தப்புக்குரியவர் ஆகின்றனர். இந்தத் தப்பு விகிதங்களின் அடிப்படையில் தத்தமது காப்புறுதி கம்பனிகளின் சட்ட ஒழுங்கு விதிகளின் முறைகளில் நட்டஈடு கோரலை முன் எடுக்கலாம்.

சொந்தமாக வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு மின்சார கட்டணம் எனபது ஒரு செலவாகும். ஆனால் கனடாவின் சில மாகாணங்கள் அவர்களின் வருமாணத்தின் அடிப்படையில் சில சலுகைகளை இதில் வழங்குகின்றது. (Ontario Electricity Support Program)

வீதியில் ஓடிக்கொண்டிருக்கும் பல சட்ட விரோத வாகனங்களை ஒரே நேரத்தில் மிக விரைவாக துப்பு துலக்கும் புதிய தொழில் நுட்பக் கமராக்களை கனடிய பொலிசார் தற்போது கையாள்கின்றனர். திருடப்பட்ட வாகனம், பதிவுகள் புதிப்பிக்கப்படாத வாகனம், தடை செய்யப்பட்ட வாகனம், பழுதான இலக்கத் தகடுகளை பொருத்திய வாகனம், போன்றவை யாவும் படம் பிடித்து கமராக்கள் உடனுக்குடன் பொலிஸ் மையத்திற்கு அனுப்பிவைக்கும். குற்றவாளிகள் இலகுவாகப் பிடிபடுவார்கள்.

“உடல் உறுப்புக்கள் தானம்” (Organ Donation) என்பது கனடாவில் தற்போது பலரும் பதிந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் அவர்களின் மரணத்தின் பின்பு அவர்களின் குடும்பத்தவர்கள் மரணமானவரின் உடல் உறுப்புக்களை வெட்டி எடுக்க ஆட்சேபனை கடுமையாகத் தெரிவித்தால் அவர்களை மீறி எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு மனிதாபிமான அடிப்படையில் மீறி உடல் உறுப்பினை கனடிய வைத்தியசாலைகளில் வெட்டி எடுக்கமாட்டார்கள்.

கனடாவில் தங்களின் வீடுகளுக்கு முன்னால் வீதியோரமாக பாரிய நிழல் தரும் மரங்கள் ஏதாவது நாட்ட விரும்பினால் அந்தந்த நகரசபையின் வன வளத்துறை பிரிவுக்கு அழைத்தால் அந்தந்த மண்வளம் சூழல் சுற்றாடல்களை பரிசீலனை செய்து உகந்த மரங்களை இலவசமாகவே நாட்டி விடுவார்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.