இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், 'முதல்வர் யெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.
இலாகா இல்லாமல், யெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார்.முதல்வர் யெயலலிதா நலம் பெற்று திரும்பும் வரை இந்த ஏற்பாடு தொடரும் என்று அறிவித்துள்ளார்.
பாகிசுதான் மீது நீண்ட கால போர் ஒன்றுக்கு தயாராகும் இந்தியா! இந்தியா, பாக். அணு ஆயுதப் போர் மூண்டால்! ஒரே செகன்ட்டில் 2 அரை கோடி மக்கள் கொல்லப்படுவார்களாம்.
இந்திய பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த போது அவரது கருப்பொருள் இந்தியா என்பது வலிமை மிக்க நாடுஆனால் காங்கிரஸ் அரசு இந்தியாவை ஒரு கோளை நாடாக மாற்றி விட்டது என்றுதான் மேடைகளில் முழங்கி வந்தார் .
ஆக பாகிசுதான் மீது போர் தொடுக்கும் எண்ணம் கனவு இருந்து கொண்டே வந்தது .மோடி மீது மக்கள் அதிருப்திபிரதமர் மோடி மீது மக்கள் அதிருப்தி அதிகரித்து விட்டது சில மாநிலங்களில் பி.யே.பி யிடம் இருந்து வந்த ஆட்சிகள் காங்கிரஸ் வசம் போய்க் கொண்டிருக்கின்றது .அதனால் மோடி தனது ஆட்சியை தக்க வைக்க தனது இமேயை அதிகரிக்க எடுத்த ஆயுதம்தாம் சர்யிகல் சுடிரைக்.இப்போது இந்த சர்யிகல் சுடிரைக்கால் மோடியின் செல்வாக்கு இந்தியாவில் அதிகரித்துள்ளது. மோடியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது மகிந்த ராயபக்ச போர் தொடுத்த போது சிங்கள மக்கள் கொண்ட மகிழ்ச்சி போன்று இந்திய காவிக்காரர்கள் மோடி மீது ஒரு நம்பிக்கை அடைந்துள்ளார்கள் ...
சர்யிகல் சுடிரைக் என்றால் என்ன?
இந்த சர்யிகல் சுடிரைக்கை திட்டமிட்டவர் நன்கு வடிவமைத்தவர் இந்திய றோவின் முன்னாள் தலைவரும் மோடியின் பாதுகாப்பு ஆலோசகரும் தற்போதைய இந்திய தேசிய பாதுகாப்பு ஆல்லோசருமான அயித் டோவல் .. எல்லைத்தாண்டி, இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ பிரிவு நடத்தும் ஒரு சர்பிரைசு தாக்குதலுக்கு பெயர் தான் சர்யிகல்சுடிரைக். ஒரு பிசுரு கூட இல்லாமல் துல்லியமாக இலக்கு அழிக்கப்படும்..
கடந்த மாதம் 29ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் கமாண்டோ படை பாகிசுதான் எல்லைக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது. சுமார் 2 கிலோ மீட்டர்கள் வரை பாகிஸ்தான் எல்லைக்குள் இந்த படை ஊடுருவிச் சென்று, தீவிரவாதிகளின் 7 தீவிரவாத முகாமை அழித்துள்ளனர். இதில் 2 பாகிசுதான் ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு வேட்டை முடிந்துள்ளது. இது போன்ற அட்டாக்கை (சர்யிகல் சுடிரைக்) என்று இந்திய ராணுவ தரப்பு கூறுகிறது.
கவனிக்கும். எல்லைத் தாண்டிய தாக்குதல் என்பதால், போர் சூழல் எழும் ஆபத்து உள்ளது. இதனால் இந்த உயர்மட்டக் குழு மிக கவனமாக இருக்கும். இரண்டு நாட்களுக்கு முன் தான் தாக்குதல் நடத்துவது பற்றி பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி, பாதுகாப்பு ஆலோசகர் கொண்ட உயர்மட்டக் குழு முடிவு எடுக்கும். உடனடியாக கமாண்டோ குழு அழைக்கப்படும். தாக்க வேண்டிய இலக்கு எங்கிருக்கிறது, அதன் வரைபடம், எத்தனை பேர், எவ்வளவு நேரம் போன்ற தகவல்கள அவர்களுக்கு கொடுக்கப்படும். அதை வைத்து அதிவேகமாக தாக்குதலை செயல்படுத்துவது பற்றி திட்டமிடப்படும். அதிகாலையில் தான் இந்த சுடிரைக் நடக்கும். அதுதான் சர்ப்பிரசு!.
உயர்மட்டக் குழு இதனை உன்னிப்பாக
தீவிரவாதிகளின் இருப்பிடத்தை அடைந்தவுடன், தான் இந்த தாக்குதல் நடக்கும். ஒரு குழு ஆயுத தாக்குதல் நடத்தி முன்னேறும். மற்றொரு குழு முகாமைச் சுற்றி வளைத்து தீவிரவாதிகள் தப்பிக்காத படி அணைக்கட்டும்.சட்டு புட்டு என்று சத்தமே இல்லாமல் காரியத்தை முடித்துவிட்டு, முன்னர் பிளான் செய்யப்பட்ட நேரத்துக்குள் மீண்டும் எல்லை திரும்புவர். காரியம் கச்சிதமாக முடிந்த பின்னர், ‘உங்க எல்லைக்குள்ள புகுந்து சம்பவம் செஞ்சிட்டோம்’, என்று எதிரிநாட்டுக்கு சொல்வது தான் சர்யிகல் சுடிரைக்கின் சுடைல். இது தான் சர்யிகல் சுடிரைக். இந்த தாக்குதலை இந்திய ராணுவம் வீடியோ செய்துள்ளதாம் ..இந்த தாக்குதல்தான் பாகிசுதான் மீது இந்தியா செய்யவிருக்கும் போருக்கான தொடக்கப் புள்ளி .அல்லது ஒத்திகை .
ஆயுத உற்பத்திக்கான உத்தரவு
எல்லையில் பதற்றம் நிலவிவரும் நிலையில், 'கூடுதல் ஆயுதங்களுக்கு அவசர தேவை ஏற்பட்டால், அதை உடனடியாக தயாரித்து தருவதற்கு, தயாராக இருக்க வேண்டும்' என, ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா - பாக்., இடையேயான உறவில், பதற்றம் நிலவி வரும் நிலையில், எந்த சூழ்நிலையை சமாளிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து, பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், ஆய்வு செய்து வருகின்றனர்.
யம்மு - காச்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாக்., ஆக்கிரமிப்பு காச்மீரில் இருந்த, பாக்., பயங்கரவாதிகள் முகாம்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு, பாக்., பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாகவும்,அதற்கு பாக்., ராணுவம் உதவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவசர உத்தரவு
நாட்டின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவும், பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.இதையடுத்து, இராணுவத்திற்கு தேவையான சிறிய ரக ஆயுதங்கள், குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும், இந்திய நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே அளித்துள்ள ஒப்பந்தங்களின்படி, ஆயுதங்களை தயாரிக்கும் இந்த நிறுவனங்கள், அவசர தேவை ஏற்பட்டால், கூடுதலாக அதிகளவில் உற்பத்தி செய்வதற்கு, தயார் நிலையில் உள்ளதா என்று மத்திய அரசு கேட்டுள்ளது. அவசர தேவைக்கு ஏற்ப, கூடுதல் உற்பத்தி செய்யும் அளவுக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில், பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை விமான தளத்தில், பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல்நடத்தினர்; அப்போதும், இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தற்போது எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவதாலும், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து வருவதாலும், இந்த புதிய உத்தரவை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
ஆயுதங்கள் பற்றாக்குறை
இராணுவம் உட்பட, முப்படைகளுக்கு தேவையான சிறிய ரக ஆயுதங்கள், அவ்வப்போது, ஒப்பந்தம் மூலம் வாங்கப்பட்டு வருகின்றன.சீன எல்லையிலும் நடக்கும் ஊடுருவல் போன்ற சம்பவங்களை தொடர்ந்து, சீன எல்லையில், கூடுதல் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இதனால், சிறிய ரக குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
எல்லையில் போர் நிகழ்ந்தால், தொடர்ந்து நான்கு நாட்களுக்கு சமாளிக்கும் அளவுக்கே, தற்போது ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.அதனால், அவசர தேவை ஏற்பட்டால், உடனடியாக ஆயுதங்களை, 'சப்ளை' செய்வதற்கு தயாராக இருக்கும்படி, ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவுக்கு
இந்தியா பாகிஸ்தான் மீது தொறுதொடுக்குமானால் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் நேச நாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு வழங்கும் என்றும் அரிய வருகின்றது.. சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் குறித்து டில்லியில் உள்ள அமெரிக்க தூதுவர் உட்பட 35 நாடுகளின் தூதுவர்களுக்கு இந்திய வெளியுறவு துறை விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அமெரிக்க பாதுகாப்பு செயலர் சூசன் ரைஸ்சுடன் தொலைபேசி தொடர்பு கொண்டு நிலைமையை பேசியுள்ளார் .
இந்தியா, பாக். அணு ஆயுதப் போர் மூண்டால்! ஒரே செகன்ட்டில் 2 அரை கோடி மக்கள் கொல்லப்படுவார்களாம்.
இந்தியாவும், பாகிஸ்தானும் போரில் இறங்கினால், அதுவும் இரு நாடுகளும் மொத்தமாக 100 அணு குண்டுகளைப் பயன்படுத்தினால் ஒரே விநாடியில் 2 அரை கோடி மக்கள் உயிரிழப்பார்கள். அந்த அளவுக்கு அபாயகரமான முறையில் இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்துள்ளனவாம். இந்தியாவும், பாகிசுதானும் வைத்துள்ள ஒவ்வொரு அணுகுண்டும், கிரோசிமாவில் அமெரி்க்கா போட்ட அணுகுண்டுக்குச் சமமானதாகும். மேலும் இந்தியாவும், பாகிசுதானும் அணு போரில் குதித்தால் ஓசோன் மண்டலத்தின் பாதி அழிந்து போய் விடுமாம். பல காலத்திற்கு உலகின் பல பகுதிகள் பூண்டோடு மங்கிப் போய் விடும். பருவ நிலைகள் தாறுமாறாகப் போய் விடும். உலகெங்கும் விவசாயம் அழிந்து விடுமாம்.
இப்போதைய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர் மூண்டால் அது இரு நாடுகளை மட்டும் அழிக்காது, மாறாக உலகமே சுதம்பித்துப் போய் விடும் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள் நியூ கிளீர் டார்க்நெசுஎன்ற அமைப்ப ரட்யர்சு பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வுகளின் அடிப்படையில் இதுதொடர்பாக விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இரு நாடுகளுக்கும் இடையிலான போரால் ஒட்டுமொத்த உலகமும் பெரும் விலையைத் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வாய்ச்சவடால் பேர்வழிகள் சுப்பிரமணியம் சாமி கடந்த செப்டம்பர் 23ம் தேதி பேசுகையில் பாகிசுதான் குண்டு போட்டு 10 கோடி இந்தியர்கள் இறந்தால், இந்தியா திருப்பித் தாக்கினால் மொத்த பாகிசுதானும் நாஸ்தியாகி விடும் என்று பேசியிருந்தார். இதற்கு பாகிசுதான் பாதுகாப்பு அமைச்சர் ஆசிப் பதிலளிக்கையில் இந்தியாவையே நிர்மூலமாக்கி விடுவோம் என்று சொல்லியுள்ளார்.
உண்மையில் இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலகமே கூட இந்த போரால் நிர்மூலமாகும் அபாயமே அதிகம். இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர் மூண்டால் என்ன நடக்கும் என்பதை இந்த ஆய்வைச் சுட்டிக்காட்டி இந்தியா சுபெண்ட் தந்துள்ள கட்டுரை.
உடனடியாக 2.1 கோடி பேர் பலியாவார்கள். இந்த உயிர்ப்பலியானது அடுத்த 9 ஆண்டுகளில் 2221 மடங்கு அதிகரிக்கும். உலகம் முழுவதும் 20 கோடி பேர் பாதிப்பு இந்த அணு ஆயுதப் போரால் ஏற்படும் விளைவுகளால் உலகம் முழுவதும் 20 கோடி பேர் பாதிப்படைவார்கள். தட்பவெப்ப நிலை மாற்றம், பருவ நிலை மாற்றம், ஓசோன் மண்டல சேதம் ஆகியவை காரணமாக உலகின் பல பகுதிகளும் பாதிக்கப்படும்.
இந்தியாவின் ஆயுத வல்லமை
13.2 லட்சம் படையினர். 2086 விமானங்கள் , 646 குலிகெப்டர் , 6464 டாங்குகள் , 2 விமானம் தாங்கி கப்பல்கள், 14 நீர்மூழ்கி கப்பல்கள் ,ஏவுகணை தாக்குதல் தூரம் 5800 கி.மீ ,அக்கினி 5, அணு ஆயுதம் 120. இவைகள்தான் இந்திய ராணுவ பலம்
பாகிசுதான் ஆயுத பலம்
6.2 லட்சம் படையினர். 923 விமானங்கள் , 306 கெலிகெப்டர் , 2924 டாங்குகள் , விமானம் தாங்கி கப்பல்கள் இல்லை,5 நீர்மூழ்கி கப்பல்கள் ,ஏவுகணை தாக்குதல் தூரம் 2750 கி.மீ ,சுகீன் , அணு ஆயுதம் 130. இவைகள்தான் பாகிசுதானிய இராணுவ பலம்.
ஏவுகணைகளே அதிகம் பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்களில் 66 சதவீதம் ஏவுகணைகளில் பொருத்தக் கூடியவையாகும். பாகிசுதான் தன்னிடம் உள்ள 86 ஏவுகணைகளில் அணு ஆயுதங்களைப் பொருத்திய நிலையில் வைத்துள்ளது. பாகிஸ்தானிடம் உள்ள கதிப் ஏவுகணைதான் மிகவும் அபாயகரமானது. இந்தியாவுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தக் கூடியது இது. டெல்லி டூ சென்னை காலி கதிப் ரக ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் நான்கு பெருநகரங்களான டெல்லி மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களை முற்றிலுமாக தாக்கி அழிக்க பாகிசுதானால் முடியும்.
அதேபோல பெங்களூர் நகரையும் இந்த ஏவுகணையால் அழிக்க முடியும்.இந்தியா முழுவதையும் தாக்க முடியும் மேலும் காவ்ரி ரக ஏவுகணையால் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களை அதாவது டெல்லி, யெய்ப்பூர், அகமதாபாத், மும்பை, புனே, நாக்பூர், போபால், லக்னோ ஆகிய நகரங்களைத் தாக்க முடியும்.
பாகிசுதானின் சாகீன்
அதேபோல சாகீன் ரக ஏவுகணையால் 2500 கிலோமீட்டர் தூரம் வரையிலான இலக்குகளைத் தாக்க முடியும். கிழக்கில் உள்ள கொல்கத்தாவை இந்த ஏவுகணை மிக எளிதாக தாக்க முடியுமாம். காசுனவி பாகிசுதானிடம் உள்ள காசுனவி ஏவுகணையானது லூதியானா, அகமதாபாத், டெல்லி வரை வந்து தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்த முடியுமாம். கயினி முகம்மதுவின் பெயர்தான் இந்த ஏவுகணைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பால்கன் அதேபோல பால்கன் ரக ஏவுகணை மூலம் டெல்லி, லூதியானா, யெய்ப்பூர்,அகமதாபாத் வரை தாக்க முடியுமாம். இந்த ரக ஏவுகணைகளால் 750 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்க முடியும். இந்தியாவின் பலம் இந்தியா பிருத்வி, அக்னி ரக ஏவுகணைகளை நம்பியுள்ளது. இதில் இந்தியாவின் 53 சதவீத அணு ஆயுதங்களைப் பொருத்தி தாக்க முடியும். இதுதவிர சாகரிகா நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவப்படக் கூடிய ஏவுகணைகளையும் இந்தியா வைத்துள்ளது. இவற்றை ஐஎன்எசு அரிஹாந்த் கப்பலிலிருந்து இந்தியாவால் ஏவ முடியும். இன்னும் இது நடைமுறைக்கு வரவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய எதிரி பாகிசுதான்தான். இலக்கு சிறிது, தூரமும் சிறிது. எனவே இந்தியாவிடம் உள்ள ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானை முழுமைாக கவர் செய்ய முடியும். குறிப்பாக பாகிசுதானின் முக்கிய நகரங்களான இஸ்லாமாபாத், ராவல் பிண்டி, லாகூர், கராச்சி, ராணுவ தலைமையகம் உள்ள நவ்சாரா ஆகியவற்றை எளிதாக தாக்க முடியும். ஆனால் சிக்கல் இருக்கு இருப்பினும் நாம் லாகூர், கராச்சியில் அணுகுண்டு போட்டால் அது அவர்களோடு முடியாது. மாறாக இந்தியா, ஆப்கானிசுதானுக்கும் பலத்த சேதம் ஏற்பட வாய்ப்புண்டு என்பது இந்தியாவுக்குள்ள சிக்கலாகும்.
பிருத்வி போதும்
இந்தியாவிடம் உள்ள பிருத்வியை வைத்து இசுலாமாபாத், ராவல் பிண்டி, சியால்கோட், லாகூர் ஆகிய நகரங்களைக் காலி செய்ய முட[ியும். அதேபோல அக்னி மூலமாக முல்தான், பெஷாவர், குவெட்டா, குவாடர் வரை தாக்கி காலி செய்யலாம். அழிக்க அக்னி போதும் அக்னி 3, 4 மற்றும் 5 மூலமாக ஒட்டுமொத்த பாகிசுதானையும் நிர்மூலமாக்க முடியும் என்கிறது இந்த ஆய்வு. ஆனால் அதன் விளைவு பாகிசதானோடு மட்டும் நிற்காதாது, மாறக சீனாவையும் பாதிக்கும், இந்தியாவையும் பாதிக்கும். விமானப்படை அதேபோல இந்தியாவின் விமானப்படை மூலமாக 45 சதவீத அணு ஆயுதங்களைப் பயன் படுத்த முடியும். யாகுவார் போர் விமானங்கள், மிராய் 2000 உள்ளிட்டவை இந்தியாவின் தாக்குதலுக்கு கூடுதல் பலம் சேர்ப்பவை. யாருக்குமே புண்ணியம் இல்லை எல்லாம் சரிதான்.
ஆனால் இந்தப் போரால் யாருக்குமே பலன் இருக்காது.. யாருமே இருக்க மாட்டோம் என்பதே கசப்பான உண்மையாகும். பாகிசுதானை அழிப்பதை விட திருத்துவதுதான் இந்தியாவுக்கு பலன் தரும் என்பதும் இன்னொரு கசப்பான உண்மையாகும்.
இந்தியாவைப் பொறுத்த மட்டில் பாகிசுதானை விட இரட்டை பலத்தில் உள்ளது.பாகிஸ்தானிடம் 130 அணு ஆயுதம் என்று சொல்லப்பட்டாலும் கணக்கில் காட்டாத சொல்லப்படாத அணு ஆயுதங்கள் பாகிசுதானிடம் மறைந்து இருக்கலாம். பாகிசுதானைப் பொறுத்த மட்டில் பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரேயொரு பலமும் நம்பிக்கையும் அணு ஆயுதம் மட்டுமே ..ஆனால் அமெரிக்காவின் சீ ஐ ஏ மற்றும் இந்திய ராவின் உளவு மூலம் பாகிசுதானின் அணு குண்டு மறைவிடங்களை கண்டு பிடித்து வைத்திருப்பார்கள். அதனால் பாகிஸ்தானின் அணு குண்டு மறைவிடங்களைத்தான் இந்தியா குறி வைத்து ஏவுகணை தாக்குதல் மூலம் அளிக்க முயலும்.
இந்தியாவை பாகிசுதானால் வெல்ல முடியாது.அதனால் இந்தியாவின் நகரங்களை குறி வைத்து பாகிசுதான் அணுகுண்டை வீசி அளிக்க முயலும்.
அதனால் இந்தியா நாலா பக்கமும் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுக்கின்ற போது பாகிசுதானுக்கு இருக்கும் ஒரே வழி அணு குண்டு தாக்குதல்தான். ஆக மொத்தத்தில் இந்தியாவின் தாக்குதல்களுக்கு பாகிசுதான் தாக்குப்பிடிக்க முடியாது என்கின்ற போது பாகிஸ்தான் தனது அணுகுண்டுகளை இந்தியா மீது வீசும்..
இந்திய றோவின் உளவு அறிக்கையின் படி பாகிசுதான் அணுகுண்டுகளை இந்தியா மீது வீசும் என்றுதான் சொல்லப்பட்டுள்ளதாம்.பெருத்த மனித அழிவுகளையும் உடமைகள் அழிவுகளையும் ஏற்படுத்தக்கூடிய இந்திய பாகிசுதான் போர் தவிர்க்க முடியாத ஒன்று. மோடி விரும்புகின்ற ஒன்று.எப்படியும் நடந்து விடும். ஈரான் ஈராக் போன்று நீண்ட காலம் இழுக்காது அணுகுண்டுகள் மூலமாக யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதால் இந்தியா இந்தப் போரில் வெற்றி பெறலாம் .ஆனால் அந்த வெற்றியைப் பார்க்க மக்கள் இருப்பார்களா?
ஆனால் இந்தியா பாகிசுதான் போர் மூன்றாம் உலக போருக்கு வழி வகுத்து விடுமோ என்ற அச்சம் எமக்கு உள்ளது.