குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 22 ம் திகதி சனிக் கிழமை .

வியாழனின் நிலவான யூரோபாவில் உயிர்கள் வாழலாம் - நாஸா சந்தேகம்

28.09.2016-சூரிய குடும்பத்தில் பூமிக்கு வெளியே   உயிர்கள் வாழும்  சாத்தியம் கொண்ட பகுதியாக வியாழன் கிரகத்தின் நிலவான யூரோபாவை நாசா அடையாளம் கண்டுள்ளது. வியாழனின் பனி நிலவான யூரோபாவில்  பாரிய நிலத்தடி ஏரி இருப்பதற்கான புதிய ஆதாரங்களை வெளியிட்ட நாஸா தற்போது  யூரோபாவில் இருந்து 100 மைல்களுக்கு வெளியே  விண்வெளியில் நீர் பாய்ச்சப்படுவதை அவதானித்துள்ளது

புற ஊதா படங்கள் மூலம் யூரோபாவின் நிலத்தடியில் நீர்படுக்கை கண்டறியப்பட்டதை தொடர்ந்து   பூமிக்கு வெளியே நுண்ணுயிர்களை கண்டுபிடிக்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளதாக நாஸா தெரிவித்துள்ளது.

யூரோபாவில் ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கு 2022ம் ஆண்டில் விண்கலம் ஒன்றை  அனுப்பவும்  நாஸா திட்டமிடுகிறது. வியாழனின் நிலவான யூரோபா சூரியனில் இருந்து 500 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது.