குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 7 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

அமெரிக்காவுக்கு பறந்தார் யெயலலிதா? தமிழக அரசியலில் பரபரப்பு!

25.05.2016-தமிழக முதலமைச்சர் யெயலலிதாவுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதால் உடனடி அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

முதலமைச்சர் யெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம்  ஏற்பட்டு ள்ளதாகவும் இட்லி போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்வதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் முதலமைச்சர் யெயலலிதா உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.முதல்வர் யெயலலிதா அதிகமாக பெதட்டீன் என்ற வலி நிவாரணி எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட பக்கவிளைவு காரணமாக சிறுநீரகம் செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மிக விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள டெக்சாசு மாகாணத்தில் அமைந்துள்ள Methodist Speciality and Transplant மருத்துவமனையில் யெயலலிதா அனுமதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. முதலமைச்சர் யெயலலிதாவுக்கு கல்லீரலும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதால் அதற்கான சிகிச்சையும் அங்கு நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது அதிக ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டுவரும் யெயலலிதா கடந்த 2 மாதங்களாக இதற்கான கூடுதல் சிகிச்சையில் இருந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.தமிழக அரசியலை பொறுத்தவரையில் இது முதன்முறையல்ல முதலமைச்சர் ஒருவர் சிறுநீரக பிரச்னையால் அவதிக்கு உள்ளாவது. கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்னாள் முதலமைச்சர் எம்.யி.ஆர் இதேப்போன்று சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து அமெரிக்காவின் Downstate Medical Center, Brooklyn கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் 1985 பிப்ரவரி 4 ஆம் திகதி சென்னை திரும்பினார்.

அதனையடுத்து தொடர்ந்து 2 ஆண்டுகளும் 10 மாதங்களும் அமெரிக்காவில் குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.