குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, வைகாசி(விடை) 28 ம் திகதி வியாழக் கிழமை .

யெயலலிதாவை அப்போலோவுக்கு அனுப்பிய ஆறு விவகாரங்கள்!

24.09.2016-தன் உடல் நலம் பற்றி எந்த செய்திகளும் வரக்கூடாது என நினைப்பவர் தான் யெயலலிதா. உட  ல் நலம் பற்றி பேசியவர்கள் மீதும், எழுதிய பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்தது இதைத்தான் காட்டியது.

கொடநாட்டில் ஓய்வு, சிகிச்சை என செய்திகள் வெளியான போது, அதை மறுத்தவர்கள் எல்லாம், இப்போது சென்னை அப்போலோ மருத்துவமனை வாசலில், உள்ளே சிகிச்சை பெற்று வரும் யெயலலிதாவுக்காக காத்திருக்கிறார்கள்.

யெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்சத்து குறைபாடு, மருத்துவர் கண்காணிப்பில் இருக்கிறார் என அடுத்தடுத்து அறிக்கை வந்து கொண்டே இருக்கிறது.

உண்மையில் யெயலலிதாவுக்கு என்ன தான் பிரச்னை என்பது யாருக்கும் தெரியவில்லை. யாருக்கு தெரியும் என்றும் தெரியவில்லை.

யெயலலிதா மாதக்கணக்கில் வீட்டிலேயே முடங்கி இருந்த போதும், கொடநாட்டில் இருந்து அரசு பணிகளை கவனிப்பதாக சொல்லிய போதும்... யெயலலிதா உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் பரவின.

உடல்நலம் சரியில்லாவிட்டால் ஓய்வெடுத்துக்கொள்ளலாம்' என கருணாநிதியே கவலைப்படும் அளவுக்கு யெயலலிதாவின் உடல்நிலை குறித்து கவலைகள் பரவின.

ஆனால் இது போன்ற தகவல் எழும் போதெல்லாம் " அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்வதெல்லாம் வதந்திதான்.

நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார்!" என ஆவேசமாய் முழங்கினர் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள்.

இப்போது யெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.சர்க்கரை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.இவை எல்லாம் டென்ஷன் அதிகரிப்பால் வரும் பிரச்சினைகள். 'ஜெயலலிதாவை சமீபகால நிகழ்வுகள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றன.

அதனால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்' என சொல்லப்படும் தகவலை சாதாரணமாக கடந்து விட முடியவில்லை.

அந்தளவு யெயலலிதாவை நெருக்கி துன்புறுத்தி வருகின்றன டென்ஷன்கள். அதில் மிக முக்கியமானவை ஆறு.

சொத்துக்குவிப்பு வழக்கு

யெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கடி கொடுப்பது சொத்துக்குவிப்பு வழக்குத் தான். யெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது உச்சநீதிமன்றம்.

இந்த உத்தரவு யெயலலிதாவுக்கு நிச்சயம் நெருக்கடியை கொடுத்திருக்கும். தீர்ப்பு எப்படி வருமோ என்ற மன உளைச்சல் நிச்சயம் அவருக்கு அதிகளவில் இருந்திருக்கும்.

தீர்ப்பு நெகட்டிவ்வாக வந்து விட்டால் அடுத்து என்ன செய்ய முடியும் என்ற யோசனை அவரது டென்ஷனை அதிகரித்திருக்கும்.

காவிரி விவகாரம்

ஆகசுட் மாத இறுதியிலேயே யெயலலிதா கொடநாடு சென்றிருக்க வேண்டும். அது தான் அவரது திட்டம். திட்டமிட்டபடி அவர் கொடநாடு சென்றிருந்தால் சற்று அவருக்கு மன அமைதி கிடைத்திருக்கும்.

ஆனால் அவரை கொடநாடு செல்லவிடாமல் தடுத்தது காவிரி பிரச்சினை. தமிழகத்தில் காவிரி, சிறுவாணி என நதிநீர் பிரச்சினைகள் உண்மைவடிவமெடுத்து, காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் கலவரம் ஏற்பட்டது மிகப்பெரிய நெருக்கடியை யெயலலிதாவுக்கு ஏற்படுத்தியது.

கர்நாடகாவைப்போல் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியது யெயலலிதாவுக்கு கூடுதல் டென்ஷன்.

நிச்சயம் ஓய்வு தேவை என நினைத்த நேரத்தில், காவிரி விவகாரம் அவரை மிகவும் படுத்தி எடுத்தது.

எங்கும் செல்ல முடியவில்லை!

அண்மைக்காலங்களில் யெயலலிதா எங்கும் செல்ல முடியவில்லை. தமிழகத்துக்கு வந்த சனாதிபதியை தமிழக முதல்வர் நேரில் சென்று வரவேற்றிருக்க வேண்டும்.

காவிரி பிரச்னையில் அனைத்துக்கட்சி கூட்டத்தையும், சிறப்பு சட்டமன்றத்தையும் கூட்டியிருக்க வேண்டும்.

மெட்ரோ ரயில் சேவையை நேரில் சென்று தொடக்கி வைத்திருக்க வேண்டும் ஆனால் இதை எதையும் யெயலலிதா செய்யவில்லை. செய்ய இயலவில்லை.

காவிரி விவகாரம் உச்சத்தில் இருந்த போது தமிழகம் வந்தார் சனாதிபதி. வரவேற்கும் சாக்கில் தமிழக உரிமை குறித்து யெயலலிதா தெரிவித்திருக்கலாம்.மெட்ரோ ரயிலை தொடக்க டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வந்து விட்டார். சென்னையில் உள்ள யெயலலிதா வராதது ஏன்?காவிரி பிரச்னையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதில் யெயலலிதாவுக்கு என்ன சிக்கல்? இப்படி யெயலலிதாவை சுற்றி, வளைய வந்த கேள்விகளுக்கு யெயலலிதாவிடம் பதில் இல்லை.

இவை எல்லாம் அவரை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கும்.

அன்புநாதனும், அமலாக்கத்துறை விசாரணையும்

தமிழகத்தில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் கோடி கோடியாக முதலீடு செய்திருப்பதாக கரூர் அன்புநாதன் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய... இதில் இந்நாள், முந்நாள் அமைச்சர்கள் என எல்லோர் பெயரும் அடிபட தொடங்கியது.

தாய்லாந்தில் தனித்தீவு, வெளிநாட்டில் பல கோடி முதலீடு, துபாயில் ஆயிரக்கணக்கான கோடியில் அடுக்குமாடி வர்த்தக வளாகம் என அன்புநாதனின் முதலீடு அதிர்ச்சி அளிக்க...இதன் பின்னனியில் அதிமுக அமைச்சர்களும், தலைமைக்கு நெருங்கியவர்களும் சிக்க வாய்ப்புகள் அதிகம் என வெளியான தகவல் யெயலலிதாவுக்கு நிச்சயம் பெரிய பதட்டம் தான்.

நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்

சட்டமன்ற தேர்தலின் போது திமுக உடன் கூட்டணி சேர கூட ஆளில்லை... எதிர்க்கட்சிகள் ஒன்று சேரவில்லை என நிறைய ப்ளஸ்கள் யெயலலிதாவுக்கு இருந்தது.

ஆனால் அப்போதே யெயலலிதாவை தேர்தல் டென்ஷன் பாடாய் படுத்தியது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் தான் என்ற போதும் இப்போது யெயலலிதாவுக்கு அதைவிடவே பதட்டம் அதிகம்.

கடந்த தேர்தலில் மாநகராட்சிகளில் மேயர் பதவிகளுக்கு போட்டியிட்டவர்களை மட்டும் ஆதரித்து யெயலலிதா பிரச்சாரம் செய்தார். இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை.

வானில் பயணிப்பதோ அல்லது தமிழகம் முழுக்க ஹெலிகாப்டரில் சுற்றித்திரிந்து அலைவதோ யெயலலிதாவால் முடியாது.

தமிழக சட்டமன்றத்தில் 89 இடங்களில் வென்று திமுக நெருக்கடி கொடுக்கும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் பதட்டம்.  யெயலலிதாவுக்கு நிச்சயம் கூடுதலாகத்தான் இருக்கும்.

சசிகலா புசுபாவும், வைகுண்டராயனும்

யெயலலிதா முன்னால் நிமிர்ந்து நின்றாலே பதவி காலியாகி விடும். எதிர்த்து பேசினால் என்னாகும்?. யெயலலிதாவை எதிர்த்து பேசியதோடு, அவர் என்னை அடித்தார் என நாடாளுமன்றத்தில் பேசி பரபரப்பை கிளப்பியவர் சசிகலா புஷ்பா.

இவரை பின்னால் இருந்து இயக்கப்படுவதாக சொல்லப்படுபவர் வைகுண்டராயன். அதிமுக மேலிடத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தததோடு, யெயா டிவி தொடங்குவதில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் தொழிலதிபர் வைகுண்டராயன்.

ஒருகட்டத்தில் விரிசல் ஏற்பட வைகுண்டராயனின் தாது மணல் ஏற்றுமதிக்கு தடை விதித்தது தமிழ அரசு. அதற்கு பழி வாங்க களமிறங்கியிருக்கிறார், அதற்கு சசிகலா புசுபாவை பயன்படுத்துகிறார் வைகுண்டராயன் என சொல்லப்படுகிறது.

யெயா தொலைக்காட்சி  உட்பட சொத்துக் குவிப்பு வழக்கில் கூறப்பட்ட பல நிறுவனங்களில் முக்கிய பங்கு வகித்தவர் வைகுண்டராயன் என்பதால் நடவடிக்கை எடுக்க தயங்க... அதுவே யெயலலிதாவுக்கு பெரும் தலைவலியானது.

இப்படி நிறைய பிரச்னைகள் யெயலலிதாவுக்கு டென்ஷன் அளித்து, அவரை படுத்தியெடுக்கின்றன. இத்தனை பிரச்சினைகளுக்கும் நடுவே தான் யெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இவை எல்லாம் சேர்ந்து அவரை கடுமையாக பாதித்திருக்கலாம். அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவருக்கு அமைதியான ஓய்வும், உடலுக்கு சிகிச்சையும் தேவையாக இருக்கிறது.

யெயலலிதா மனதளவில் சோர்வும், டென்ஷனும் ஏற்படும் போதெல்லாம் கொடநாடு செல்வது வழக்கம். இந்த முறை கொடநாடு சென்று, தன்னை அமைதிப்படுத்திக்கொண்டு திரும்புவதற்கான நேரம் அவருக்கு கிடைக்கவில்லை. அதற்கு போட திட்டமும் செயல்படுத்த முடியவில்லை.

இப்போதுயெயலலிதா சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.'யெயலலிதா உடல் நலம் பெற்று, பணியை தொடர வேண்டும்' என கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்திருக்கின்றனர்.

யெயலலிதா உடல் நலம் பெற்று திரும்ப நாமும் வாழ்த்துகிறோம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.