குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, புரட்டாசி(கன்னி) 17 ம் திகதி செவ்வாய் கிழமை .

பூமியை போன்று உயிரினங்கள் வாழ தகுதியுள்ள 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு

06.08.2016-அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டறிய ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியுள்ளது.

 

அதில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் கெமாரா பொருத்தப்பட்டுள்ளது. அவை புதிய கிரகங்களை கண்டுபிடித்து புகைப்படமெடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அதுபோன்று இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதுகுறித்த ஆய்வுகளை நாசா விஞ்ஞானிகள் தற்போது மேற்கொண்டுவருகின்றனர். இந் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவைகளில் உயிரினங்கள் வாழ தகுதியுள்ளதாக 216 கிரகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அவற்றில் 20 கிரகங்கள் பூமியை போன்று உயிரினங்கள் வாழ மிகவும் தகுதியுள்ளவை என கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு பூமியில் இருப்பது போன்ற மனுக்கள் மற்றும் பாதைகள் உள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கிரகங்கள் நட்சத்திரங்களை ஒட்டியுள்ளது. அதன் மூலம் அங்கு சூரிய ஒளி, தண்ணீர் போன்றவை இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.