குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மாசி(கும்பம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு பின்...உலகை அச்சுறுத்த வரும் புதிய ஆபத்து!

08.06.2016-உலகம் வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிக்கட்டி கள் முழுவதுமாக உருகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்டிக் பெருங்கடலின் மையப்பகுதியில் சுமார் 12.7 மில்லியன் சதுர கிலோ மீற்றர்கள் பரபரப்பளவில் பனிக்கட்டிகள் நிறைந்து காணப்பட்டுள்ளன.

 

ஆனால், இந்த அளவானது இம்மாதம் யூன் 1ம் திகதி நிலவரப்படி 11.7 மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பளவாக குறைந்துள்ளது. அதாவது, பிரித்தானியா நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பு அளவுள்ள பரப்பளவு குறைந்துள்ளது என அமெரிக்க தேசிய வெண்பனி மற்றும் பனிக்கட்டிகள் தகவல் மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த மோசமான மாற்றமானது இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பளவிற்கும் குறைவாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றமானது கடந்த ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாகவும், இப்போது இது மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியரான பீற்றர் வாதம்ஸ் பேசியபோது, இப்பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகிய பின்னர் பூமி வெப்பமாவது அதிகரிக்கும்.

அதாவது, தற்போது உலகளவில் உள்ள சராசரி வெப்பத்தில் 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

அதேபோல், இந்த பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி வருவதால் இங்கு வசித்து வரும் போலார் கரடிகளின் உடல் எடைகளும் குறைந்து வருகிறது.

ஏனெனில், பனிக்கட்டிகள் குறைவதனால், கரடிகளால் சீல்களை வேட்டயாட முடியாது எனவும் பீற்றர் வாதம்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், துருவப்பகுதிகளில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி கடலில் கலப்பதால், கடல் மட்டமும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இது தொடர்ந்து நிகழ்ந்தால், பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பெரும் ஆபத்தாக முடியும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.