குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 7 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

ஆட்சியைப் பிடித்தும் யெயலலிதாவிற்கு ஏற்பட்ட அவமானம்....

25.05.2016-திமுகவுக்கு ஒரு தொகுதியிலும் கட்டுப் பணத்தை இழக்கவில்லை அதிமுகஆட்சியைப் பிடித்தும் என்ன புண்ணியம். 2 தொகுதி களில் அது கட்டுப் பணத்தை பறிகொடுத்து அவமானத்தைச் சந்தித்துள்ளது. அதேசமயம், ஆட்சியைப் பிடிக்கத் தவறிய திமுக,

 

ஒரு இடத்தில் கூட டெபாசிட்டைப் பறி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக அணிகளுக்கு போட்டியாக தேமுதிக - தமாகா - மக்கள் நலக் கூட்டணியும், பாமகவும் கடும் போட்டியைக் கொடுத்தன.

அதேபோல நாம் தமிழர் கட்சி, பா.ய.க ஆகியவையும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் நடந்ததோ தலைகீழாக இருந்தது. திமுக, அதிமுகவைத் தவிர மற்ற யாருமே போட்டியிலேயே இல்லாமல் போய் விட்டனர்.

திமுக, அதிமுகவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியவை பாமகவும், மக்கள் நலக் கூட்டணியும்தான். மற்றபடி மற்ற கட்சிகளால் இந்தக் கட்சிகளுக்குப் பெரிய அளவில் எந்தப் பாதிப்பும் இல்லை.

ஆட்சியைப் பிடித்த அதிமுக

தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதில் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்த இடங்கள் 3 ஆகும். ஆனால் அவை இரட்டை இலையில் போட்டியிட்டதால் அவையும் அதிமுக வேட்பாளர்களாகவே கருதப்படும்.

2 தொகுதிகளில் டெபாசிட் காலி

அதிமுக ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும் கூட நிறைய அவப் பெயர்கள் அக்கட்சிக்குக் கிடைத்துள்ளன. பெரும்பாலான தொகுதிகளி்ல மயிரிழையில்தான் இக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதை விடக் கொடுமையாக 2 தொகுதிகளில் டெபாசிட் பறி போய் விட்டது.

விளவங்கோடு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் கிருச்ணகிரி மாவட்டம் தளி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு டெபாசிட் போய் விட்டது. விளவங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரசின் வியயதாரணி வெற்றி பெற்றார். இங்கு அதிமுகவுக்கு 4வது இடமே கிடைத்துள்ளது. 2வது இடத்தை பாயகவும், 3வது இடத்தை சிபிஎம்மும் பெற்றன.

தளி தொகுதியில் 3வது இடம்

கருச்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் 3 வது இடத்தைப் பிடித்தது அதிமுக. அங்கு இந்தத் தொகுதியிலும் அதிமுகவுக்கு டெபாசிட் பறி போயுள்ளது. மற்ற இடங்களில் அதிமுக தப்பிப் பிழைத்துள்ளது.

திமுகவுக்கு இழப்பே இல்லை

இந்தத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்க மட்டும்தான் தவறியதே தவிர பெருமைக்குரிய விஷயங்கள் நிறையவே அதற்கு உள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் மயிரிழையில்தான் அது தோல்வியைத் தவற விட்டுள்ளது. அதை விட முக்கியமாக எங்குமே அது டெபாசிட்டைப் பறி கொடுக்கவில்லை என்பது முக்கியமானது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.