குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலட்சங்கள் வந்தன இலட்சியங்கள் போயின எச்சங்கள் மிஞ்சின!

இலட்சங்கள் வந்தன இலட்சியங்கள் போயின

எச்சங்கள் மிஞ்சின தமிழன் கெஞ்சிவாழல்

அண்டிவாழல் வால்பிடித்துவாழல் நல்வாழ்வென்றானது.

தமிழுக்கு முள்ளிவாய்கால்போர் மூன்றாம்
உலகப்போர் யப்பான்போல் மீளவேண்டும்.

பணம்சேர்ந்தது பிணங்கள் குவிந்தது

மனங்கள் மாறின தமிழனின் இழப்பு வீட்டில்

இறம்செற் இசையானது  பறை எங்கே போனது.

பறை-பேரிகை இல்லாது போனது போல்

தமிழனிடம் எதுவுமே இல்லாது போனதுவே மிச்சம்.

வெளிநாட்டுப்பணத்தில் வந்தமிச்சம் இவைதான்,

தன்னடைகள்போய் பொய்நடைகள்

தமிழேஇவர்களைச்சபி.

உண்டும்   உறங்கியும் பசியாறியும்களித்தும்

பணத்திற்காய் உழண்டும் எல்லாம் இழந்தான் தமிழன்.

 

கற்றான் விற்றான் எல்லாவற்றையும்.பணத்திற்காய்  எல்லாவற்றையும்

உற்பத்தியில் அக்கறையில்லை இயற்கையில் அக்கறையில்லை

மருத்துவம்   கற்றதும் பறக்கவேண்டும்  வெளிநாடுகளிற்கு

அல்லது தனியார்மருந்தகம் தொடங்கவேண்டும்.

பறந்துவரும்  பணங்களால் மறந்து விட்ட

சிறந்தவை எத்தனைகள் மனம்திறந்துபார்!

திரும்பிப்பார்! தமிழினம் சீர்கெட்டழிவதை.

 

கறந்தபால் முலைக்கேறாது வந்துபுகுந்த கெட்டபுதியவை

எம்மிமை விட்டுப்போகாது விழுங்கி அழிக்கும்.

அதற்கும் சிங்களம் பொறுப்பல்ல கொண்டாட்டங்களில்

கொழும்பின் அடுது்தவன்   பண்பாடுகள்.

அதையே உயர்வென்றும் வெளிநாட்டு முறையென்றும்

முறைதவறும் பாமர உறவுகளே பரிதவிக்கப் போகின்றீர்.

சிதறி விட்ட சிந்தனைகளால் தறிகெட்டுவிட்ட

தலைமுறையாய் தொடர்நாடக மோகங்களானோம்.

 

இரண்டாம் உலகப்போர் உலகைப் பிரட்டிப்போட்டது

ஆனாலும் அந்தந்த இனங்கள் தனியினம் கண்டு

தமக்கென்று நாடுகண்டு கொண்டது

தம்மைவளர்த்துக்கொண்டது மகிழந்து வளர்ந்தது.

தமிழுக்கு முள்ளிவாய்கால்போர் மூன்றாம்   உலகப்போர்

யப்பான்போல் மீளவேண்டும். வியட்நாமாக மாறிப்போகக்கூடாது.

 

அடுத்தவனைச்சாடுவதும் சாய்வதும் தமிழுக்கடுக்காது

மெல்ல நடக்கவேண்டும் சொந்தக்காலில்.

போர்கள்கண்டு அழிந்த சேர்மனைப்பார்

கிட்லர்அடித்த அத்தனை நாடுகளையும்பார்

எழுந்து சிறந்து நிற்கின்றனவே!

சிறப்பாகி யீ எட்டு நாடுகளுடன் இணைந்து

முன்னோடிகளாய் நிற்பதைக்காண் தமிழே!

பூநகரி.பொ.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து.27.05.கி.ஆ2012தமிழாண்டு2043.