குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

உயிர் இழப்புக்களும் அன்றைய உணர்வுகளும் உண்மையானவை! 2009 வைகாசியில் முல்லைத்தீவில் அணுகுண்டு போடாமல்

தமிழர்களைத் தனித்தனியாய் கொன்ற நரபலிக்காலம்.

மனதைவிட்டு அகலாது மறக்கமுடியாது துடித்து துடித்து அல்லவா இறந்தார்கள்.

தண்ணி தண்ணி என்று அக்கம்பக்கமாகக் கிடந்து அனுங்கியவாறு

தவித்து தவித்து உயிர்விட்டார்கள் அங்கங்களைத்தமது கையிலே எடுத்துப்பார்த்துவிட்டு

ஓடுமளவிற்கு ஓடிவிழுந்தல்லவா இரத்தப்பெருக்கால் இறந்தார்கள்.

முடியாது கிடந்தவர்கள் மேல் வெடிபொருட்கள் விழுந்து வெடித்தல்லா சிதைந்தார்கள்.

குடும்பத்துடன் அழிந்தார்கள் கணவனையும் பிள்ளைகளையும்

இழந்தாள் பயித்தியமானா பரிதாபங்கள் எத்தனை நடந்தவற்றை விரிக்கவுமா முடியும் இழிவான நிலையை இடக்கர் அடக்கர் முறையால் விடுகின்றோம். இது தமிழ் மொழியின் நாகரீகம்.

தமிழ்மொழியில் கூடவார்த்தையில்லை அவலத்தின் அளவிற்க்கு

உலகில் எண்கள் இல்லை வானமும் மண்ணுங்கூட அளவில் தோற்றது

அந்தளவு உயிர்ப்பலி சித்திரவதை பெண்வதை இந்தளவு வேறெங்கும் நடதிருக்கு என்ற ஐயமே!

நடந்திருக்க வாய்ப்பேயில்லை ஏனெனில் இத்தகைய மிருகங்களை வென்ற வெறியர் இல்வுலகில் மட்டுமல்ல எவ்வுலகிலுமில்லை.

நடந்த கதை உடைகளைக்களைந்து நடக்கவைத்தார்கள் சிரித்து மகிழ்ந்து

மனதில்வைத்து நலன்புரிமுகாமில் விசாரணைக்களைத்து அணைத்துவிசாரித்து

காமஅவலங்கள்செய்தனர் அம்மா பிள்ளைக்குச் சொல் முடியாது பிள்ளை

அம்மாவுக்குச்சொல்லமுடியாது அழுவதின் அர்த்தம் புரிந்து அவரவரும் அழுதனர்.

கடல்வழியாகத்தப்பித்தவர்க்கு மனிதாபிமானமுள்ள வைத்தியர்கள்

மறைவாக மாத்திரைகள் கொடுத்தனர் மானங்காத்தனர் இதுயாழ்முகாங்களில்

நடந்த கதைகள் பிடிபட்டுச்சென்றவர் சென்றவர்தான் காணாமல்போனார்.

உயிரோடு இருப்பவர்கள் எல்லாம் இழந்தனர் இறந்தவர்கள் உயிரையும் இழந்தனர்

இந்த இருநிலையினர்தான் இறுதிப்போரின் எச்சங்களாயின மறக்கலாமா?

 

மீண்டு வந்தவர்களை காட்டு விலங்கிற்கு கம்பிவேலி போட்டதுபோல் அடைத்துவைத்து

கூடாரங்களை தட்டாந்தரையில் போட்டு குழந்தைகள் முதியவர் முடியாதவர்கள் கூட

தரையில் சூட்டில் தவித்தனர் சிறுநீர்கடுபில் கழிக்கவும் இடமொ மறைவோ இன்றிஅவதி

மக்களை வதைப்பதை நோக்காகக் கொண்டதிட்டம் வசதிதிட்டங்கள் ஏதுமின்றி

மக்களை ஓரிடத்தில் அடைத்ததையன்றி அவசரத்தில் செய்த கொடுமை கோடியாகும்

பசிக்கு உணவில்லை நோய்கு மருந்தில்லை குடிக்க நீரில்லை வெயிலில் நிழலில்லை

குளிருக்கு போர்க்கத்துணியில்லை மாற்றஉடையில்லை மாதவிலக்குப்பெண்களோ பேர்அவதிப்பட்டார்கள்

கைக்குழந்தைக்குப் பாலில்லை தாய்க்கோ உணவில்லை.நுளம்பு ஈத் தொல்லைக்கோ அளவில்லை

இறந்திருக்கலாம் இங்கேன்வந்தோம் என்றே எண்ணினர் இதற்கு பெயரோநலன்புரிநிலையங்கள்

குளிக்கமுடியாது பக்கத்தில் பக்கத்தில் நிற்க இருக்கமுடியாது மணம் எட்டிநிற்கவோ இடமில்லை

இன்னுமொருமுகாமில் இறந்தவர் இறந்தவர்தான் மற்றவர்அங்குசெல்ல அனுமதியில்லை

கொடுங்கோல்சட்டங்கள் இளையவர்களை ஏமாற்றி பறிக்கத்திட்டங்கள் கெச்சிதமாய் நடந்தன

இதற்குள் பிடிபட்டவர் எண்ணிக்கையே அதிகம் உதவினவரும் வாருங்கள் விசாரித்துவிட்டு விடுவோம்

பின்புனர்வாழ்வுப்பயிற்சியாம் யாரும்பார்க்க முடியாதாம் எந்ததகவலும் இல்லை

இவைதான் நடந்தன கணவனும்மனைவியும் கூட கூடி வாழஇடமில்லை இனவிருத்தித்தடை

எழுதாச்ட்டமாய் நடைமுறைப்படுத்தப்பட்டது இளவயதினர் அடைக்கப்பட்டனர் அழிக்கப்பட்டனர்

வறியபெண்கள் ஏமாற்றிக் கருச்சிதைவுக்காய் கருவறுக்கப்பட்டனர் கயவரால்

கர்ப்பப்பையில்லாத சீர்கேடு சிலகாலத்தில்தானே புரியவந்தது ஆரிடம்சொல்லிஅழுவது.

 

பூநகரி பொ.முருகவேள் ஆசிரியர் சுவிசு 16.05.2012