குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தமிழனுக்கு தரணியெங்கும் தண்ணிதான் இடர்தருமோ !

குமரிக்கண்டம்  ஆண்ட  தமிழனுக்கும்  தண்ணிதான் பிரச்சனை.

புலம்பெயர்ந்த தமிழனும் அழிவதும் தண்ணியால் தான் தரணியிலே!

குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததமிழன் அழிந்ததும்  ஆழிப்பேரலைத் தண்ணியாலே

அவன் கண்ட அறிவியல் ஏடுகள் அழிந்ததும் தண்ணியாலே!!

 

தமிழகத்தமிழனும் தவிப்பதும் தண்ணியாலே  தானே!

குடிக்கத்தண்ணீர் இல்லை! பமதுபானத் தண்ணியாலும் அழிகின்றானே!

யாழ்ப்பாணத்தமிழனின்  நிலத்தடிநீரில்  எண்ணைக்கசிவாம் கதிகலங்கி நிற்கின்றானே!!!

 

வன்னியிலே  வாய்க்காலில் தண்ணியில்லை  வாயில் விடவும்  தண்ணியில்லை!

வியிற்றுப்பிழைப்பிற்கு  பயிர் செய்யவும் வழியில்லை வறுமை வாழ்க்கை!!

போர்தந்த பண்தில்  பளிங்கு பதித்த  வீடுகள் ஆனால் குடிக்கத்தண்ணியில்லை.

மின்சாரக்கம்பங்கள் மின்சாரக்கடத்திகள் பொருத்தியும் மக்கள் வாழ  முடியா மண்ணாக வன்னி.

தண்ணி இல்லை தண்ணி இல்லை என்றே எங்கும்  தவிப்பு.

 

புலம்பெயர்ந்த  தமிழனின்  வாழ்க்கையும்

மதுபானத்  தண்ணியில் அழியுதே!!

உலகமெலாம் தமிழனுக்கு தண்ணிதான் பிரச்சனையோ!

பூநகரி பொ.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து-05.05.2016