குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது சரியானதுதானா?

24.04.201-என்னுடைய மகள் அவளது குழந்தைக்கு பிறந்தது முதல் சர்க்கரையே சேர்க்காமல் உணவு தந்து பழக்கி விட்டாள். அதுதான் ஆரோக்கியம் என்கிறாள். சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது சரியானதுதானா?

ஊட்டச்சத்து நிபுணர் சயினி சுரேந்திரன்-வெள்ளை வெளேரென சர்க்கரையாக நாம் பயன்படுத்துகிற அந்த இனிப்புப் பொருள் அவசியமே இல்லை. தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்புகள் போன்றவை கிளைகோ யெனாக மாற்றப்பட்டு, கல்லீரலில் சேமிக்கப்படும். உடலுக்கு சக்தி தேவைப்படுகிற போது, இந்தச் சேமிப்பிலிருந்து தனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளும்.

குழந்தைக்கு சர்க்கரை உணவே கொடுக்காதது பற்றிக் கவலையே வேண்டாம். ஒரு விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு காய்கறிகள், பழங்கள், பருப்புகள், தானியங்கள், பால் பொருட்கள், புரத உணவுகள் என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கொடுக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்பட்டாலே குழந்தையின் ஊட்டச்சத்து  தேவைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுவிடும்.