தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை குழந்தையிடம் காட்டுவது அல்லது குழந்தைகளின் உறுப்புகளை காட்ட சொல்வது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது மற்றும் தொடச் செய்வது, குழந்தைகள் ஆடையில்லாமல் இருக்கும்போது மறைந்திருந்து பார்ப்பது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது, ஆபாச படங்களை காண்பிப்பது மற்றும் அது பற்றிய விளக்கங்களை தருவது, சீக்ரெட் கேம் (ரகசிய கேம்) விளையாடலாம் என அழைப்பது, பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து அதீத அன்புடன் இருப்பது போல நடிப்பது, குழந்தையின் பெற்றோரிடம், 'நீங்கள் செல்லுங்கள்.. நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன்' என அதீத உரிமையை எடுத்துக் கொள்வது, மற்ற குழந்தைகள் போல விளையாட விடாமல் தனிமைபடுத்துவது, இருவருக்குமான விசயங்களை நெருக்கமானவ ரிடம் சொல்ல அனுமதிக்காமல் சூழ்ச்சி செய்வது, பிள்ளைகளை நண்பர்களுடன் பழகவிடாது தடுக்க குழந்தைகளை குற்றவாளிகள் என பட்டம் கட்டி பெற்றோரிடம், 'நான் உங்கள் குழந்தையை திருத்துகிறேன்...' என்று நடிப்பது, அறைக்குள் அத்துமீறி நுழைவது போன்ற செயல்கள் ஒரு மனிதரிடம் தென்பட்டால், அவர் குற்றவாளி என அடையாளம் காணுங்கள்.