முதல் கட்ட மாக, 111 கி.மீ., தூரத்திற்கு மோனோ ரயில் அமைக் கப்படும் எனவும், அந்த அறிக்கையில் கூறப் பட்டிருந்தது.
ஏற்கெ னவே மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலை யில், புதிதாக அமைய வுள்ள மோனோ ரயில் பாதை குறித்த ஆய்வு பணி, சென்னை பல்ல வன் போக்குவரத்து ஆய்வுக் குழுவிடம், தமிழக அரசு அளித்தது. சென்னை மாடி ரயில் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் செல்லாத வழித்தடங்களில், மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என, அதிகாரிகள் தரப் பில் கூறப்படுகிறது.
இதன்படி, வண்டலூரில் இருந்து ஆவடி வழியாக புழல் (54 கி.மீ.,), வண்ட லூரிலிருந்து கிழக்குத் தாம்பரம் வழியாக வேளச்சேரி(23 கி.மீ.,), பூந்தமல்லியில் இருந்து போரூர் வழியாக கத்திப் பாரா வரை(54 கி.மீ.,), பூந்தமல்லியிலிருந்து வளசரவாக்கம் வழியாக, வடபழனி வரை (54 கி.மீ.,) என நான்கு வழித் தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல் படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மொத்தம், 111 கி.மீ., தூரம் மோனோ ரயில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் மூலம் செயல்படுத்தப் படும் என அரசு அறிவித் துள்ளது.
இதையடுத்து, மோனோ ரயில் திட் டத்தை கட்டி, பரா மரித்து, பின்னர் ஒப்ப டைக்கும் முறையில், இத்திட்டம் செயல்படுத் தப்படும். இதற்காக, உலகளாவிய ஒப்பந்தம் கோரும் பணியில், அதி காரிகள் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.