குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

03.02.2016-பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.பிரதமர் மோடியின் அசையாச் சொத்தின் மதிப்பு கடந்த 13 ஆண்டுகளில் சுமார் 25 மடங்கு அதிகரித்ததையடுத்து மோடியின் சொத்து ரூ.1.41 கோடி என்று பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 18, 2014-ல் அறிவிக்கப்பட்ட ரொக்கக் கையிருப்புத் தொகையான ரூ.38,700 என்பது ரூ.4,700 ஆகக் குறைந்துள்ளது.மோடியின் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 1,26,12,288 என்பதிலிருந்து ரூ.1,41,14,893 ஆக மார்ச் 2015-ல் இருந்தது.மோடியிடம் மோட்டார் வாகனங்கள், விமானம், படகு, கப்பல் என்று எதுவும் இல்லை.அவர் தனது வங்கிக் கணக்குகளை இன்னும் குயராத்தில்தான் வைத்துள்ளார். டெல்லியில் மோடிக்கு வங்கிக் கணக்கு இல்லை.

கடன்களும் அவர் பெயரில் இல்லாத நிலையில், 4 தங்க மோதிரங்கள் மட்டும் அவரது சொத்துகளில் உள்ளது. இதன் எடை 45 கிராம். இதன் மதிப்பு ரூ.1.19 லட்சம்.

எல்&டி இன்ஃப்ரா பத்திரங்கள் (வரி சேமிப்பு) ரூ.20,000, தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் வகையில் ரூ.5.45 இலட்சம், ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கள் மதிப்பு ரூ.1.99 லட்சம் ஆகியவை சேர்ந்து பிரதமர் மோடியின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.41.15 லட்சம் என கூறப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.