குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சீனப் பொருளாதார வளர்ச்சியும் மேலைத்தேய எதிர்பார்ப்பும் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு.

17.01.2016-நன்கு ஆழ ஊடுருவி தனது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் சிறீலங்காவினால் இலகு வாக உதறித் தள்ளி விடமுடியாத நிலையில் சீனா தனது நிலையை எடுத்துள்ளது. – ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி*.

உலக பொருளாதார அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தம் என எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக Asian Infrastructure Investment Bank (AIIB). இன் திறப்பு விழா நிகழ்வு இன்றில் இருந்து வரும்  18ஆம் நாள் வரை பீகிங் நகரில்  நடைபெறுகிறது.

மேலைத்தேய தலைமையில் உலக ஒழுங்கை தீர்மானிக்கும் நிர்ணயங்களை அல்லது அறிவுறுத்தல்களை, தேசங்கள்  மத்தியிலும் , தேசியங்கள் மத்தியிலும், அரச சார்பற்ற நிறுவனங்கள் மத்தியிலும் கூட நடைமுறைப்படுத்தும் பிரதான அமைப்புகளான உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் போன்றவற்றுக்கு சவாலாக இந்த சீன நாட்டு வங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசெம்பர் 25ஆம் நாள், 57 அங்கத்தவ நாடுகளின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தவங்கி தனது முதல் நடவடிக்கைகளை வைபவரீதியாக அடுத்தவாரம் சீன தலைநகர் பீகிங்கில் தொடங்க உள்ளது.

சீனாவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வு, உலக அரசுகளாலும்,அரசசார்பற்ற நிறுவனங்களாலும் மிகவும் கவனமாக நோக்கப்படுகிறது.

தாராள பொருளாதார உலகுடன் கூட்டுசேராத அல்லது ஒத்துப்போகாத நாடுகளை பொருளாதாரத் தடை போட்டு பணிய வைக்கும் மேலைதேய நாடுகளுக்கு தமது இராசதந்திர சக்தி நீர்த்துப்போக வைக்கக் கூடிய நிலையை ஒட்டி கலக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

பழமைவாய்ந்த பட்டுப்பாதை பொருளாதார நகர்வுகளை புதிய வடிவில் கடல் வழியாக “சமுத்திரப்  பட்டுப்பாதை” என்றும் தரைவழியாக “ஒரு சூழல் ஒரு பாதை”எனவும் சீன கொள்கை வகுப்பாளர்களின் கூட்டு வகுத்து செயற்படுத்துகிறது.

பாரிய பொருளாதார இராசதந்திர முன்னெடுப்புகளை கொண்ட இந்த அரசியல் நகர்வுக்கு துணையாக சீனாவின் AIIB வங்கி திறக்கும் நிகழ்வு அமைந்துள்ளது.

இந்த வங்கி அமைப்பு உலகை கோட்பாட்டு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், மாற்றும் வல்லமை கொண்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சீனா உலகின் பெரிய கைத்தொழில் முன்னேற்றம் கண்ட ஏழு நாடுகளின் கூட்டுக்குள் சேர்க்கப்படவில்லை. ஆனால் இன்று சீனப் பொருளாதாரம் பெரிய ஏழு சைகத்தொழில் நாடுகளின் கூட்டில் அங்கம் வகிக்கும் நாடுகளிலும் பலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தனது “ஒரு சூழல் ஒரு பாதை“ திட்டத்தில் குறிப்பாக மத்திய ஆசிய நாடுகளையும், தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் கடந்து தரைவழியாக ஐரோப்பா வரை விஸ்தரிக்கும் திட்டத்தின் மூலம் சுமார் அறுபது நாடுகளை கூட்டு சேர்த்து , தனது நேச அணியொன்றை உருவாக்குவதன் மூலம் நீண்ட கால மூலப்பொருள் வழங்கல் கட்டுமானத்தை உறுதி செய்து கொள்வதற்கு சீனா முனைகிறது.

சீனாவின் இந்த மாற்றமும், வளர்ச்சியும் உலக ஏகாதிபத்திய போட்டியில் தளம்பல் நிலையை உருவாக்க வல்லது.

உலக தலைமைத்துவத்தைப் பேணுவதில் மிகவும் பிரயத்தனம் கொண்டிருக்கும் ஐக்கிய அமெரிக்கா,  தனது தலைமைத்துவத்தை நிலை நிறுத்த இராணுவ பல நிலையை உச்சத்தில் வைத்திருப்பதன் மூலம் இராசதந்திர பொருளாதார நகர்வுகளை நிறைவேற்றுவது பொதுவான பண்பாக இருந்து வந்தது.

ஆனால் கடந்த ஆண்டுகளில் ஈராக்கியப் படைஎடுப்பு,  ஆப்கானிஸ்தானிய நடவடிக்கைகள் ஆகியன மூலம் தனது பொருளாதார வளநிலையில் தளர்வு கண்டிருந்தது.  மேலும் பாரிய இராணுவ நடவடிக்கைகளை தொடர்வது ஏற்றதல்ல என்ற ஆலோசனைகளின் பெயரில், நேரடி யுத்தத்தில் ஈடுபட்டு பொருளாதார சீரழிவை உருவாக்கும் தன்மையை அமெரிக்கா தவிர்த்து வந்தது.

அதேவேளை அமெரிக்க தலைமையை சவாலாக நோக்கும் சீன, ரஷ்ய வல்லரசுகளின் எழுச்சி தவிர்க்க முடியாததாக இருப்பதாக அமெரிக்க அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும்அண்மைய காலங்களில் அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தல் மிக மும்முரமாக சூடுபிடித்து வரும் நிலையில், சீன ,ரஷ்ய நாடுகள் மிகத்துரிதமாக  மையநிலைக்கு வந்துள்ளன. அத்துடன் குறிப்பாக சீனா பாரிய அளவில் உலகை கட்டியாளும் நோக்கு கொண்ட வியூகம் வகுத்துள்ளதாக கருதப்படுகிறது.

தற்போது செயற்பாட்டில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி,  உலக வங்கி என்பன நிர்வாக வழிமுறைகளில் சிக்கல்கள் பலவற்றை கொண்டதாக இருக்கிறது என்பது சீன ஆய்வாளர்களின் பார்வையாக உள்ளது. அத்துடன் வறுமையை நீக்கும் கடன்களாகவும் நாடுகளின் உள்நாட்டு பொருளாதார கொள்கைகளில் தலையீடு செய்யும் தன்மையை கொண்ட கடன்களாகவுமே இவ்வங்கிகள் உள்ளன என்பது இன்னுமோர் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆனால் சீனாவின் AIIB நாடுகளுக்கு தேவையான வீதிகள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி தொழிற்சாலைகள் என கட்டமைப்பு மையங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருப்பதால் போக்குவரத்தில் இலகுநிலை ஏற்படுகிறது.  சமூகத்தில் வசதி நிலை ஏற்படுகிறது. இதனால் உள்நாட்டு வர்த்தகத்தில் சுழற்ச்சி ஏற்பட்டு வளர்ச்சி தானாக இடம் பெறும் என சீன ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது திட்டவாக்கங்களை கொண்டிருக்கும் அதேவேளை சீனாவிலிருந்து பின் புறமாக ஐரோப்பா வரை, தனது முக்கியமான “ ஒருசூழல் ஒரு பாதை“ போக்கவரத்து திட்டத்தை வகுத்துள்ள சீனா,  ஏற்கனவே தனது திட்டங்களுக்கு ஏதுவாக , புவியியல் முலோபாய நோக்கோடு அமெரிக்க நேச நாடுகளான துருக்கி, கசக்கிசுதான் ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திட்டு விட்டது.

அத்துடன் பாதுகாப்பான கடல் போக்குவரத்தை உறுதி செய்யும் திட்டங்களும் தீர்மானங்களும் அவற்றிற்கு ஏற்றாற் போலான உடன் படிக்கைகளும் தயாராகி உள்ளன.

சீனா தனது திட்ட ஆரம்ப வேலைகள் குறித்து தீவிரமான தீர்மானங்களை மிகவும் தீர்க்க தரிசனத்துடன் முன்னோக்கி நகர்த்தியும் வருகிறது. மேலைத்தேய மக்கட்தொடர்பு நிறுவனங்கள் சீனாவின் வளர்ச்சி குறித்த எச்சரிக்கை அறிவுறுத்தல்களில் முழு மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

இவை தவிர்ந்த அமெரிக்க நேச நாடுகளான இந்தியா, யப்பான் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை கையாள்வதற்கம் உரிய தனித்துவமான இராசதந்திர பொறிமுறைகள் வகுக்கப்பட்டு விட்டன. இவை ஒவ்வொன்றையும் குறித்த கொள்கை ஆய்வுகளை இனி வரும் கட்டுரைகளில் ஆராய்வது மூலம் தற்கால உலக அரசியலை ஒரு தனித்துவமான பார்வையூடாக காணலாம்.

இராணுவ ஆக்கிரமிப்புகள் இன்றி இராசதந்திர அலுவலர்களின் விதிமுறை அழுத்தங்கள் இன்றி, அனைத்துலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து நாடுகளின் அயல் நாட்டு முரண்பாட்டு யுத்தங்களிலும் உள்நாட்டு வேறுபாடுகளிலும் தலையிடாது, சமாதானமான முறையில் தனது வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயற்படும் சீனாவின் இந்த எழுச்சி, சமாதான எழுச்சியாக கருதப்படுகிறது.

சீனாவின் சமாதான எழுச்சிக்கு அத்திவாரமாய் இருக்கும் பொருளாதார திட்டங்களையும் , அதேவேளை  சீனா எந்தவகையில் பின் தங்கக் கூடும் என்ற மேலைத்தேய நோக்குகளையும் பார்க்கலாம்.

சீனத் தரப்பு தலைவர்களிடமோ அல்லது ஆய்வாளர்களிடமோ அனைத்துலக தலைமைத்துவத்தை எட்டுவது குறித்த எந்தவித குறிப்புகளும் வெளிப்படையாக கூறப்படுவதில்லை.

ஆனால் சீனாவின் பல்வேறு தேசிய சமுதாயங்கள் மத்தியிலும் இருக்கக் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான தேவை குறித்த குறிப்புகளே, பொதுவாக பேசப்படுகிறது.

உதாரணமாக தரைவழியான பட்டுப் பாதை விஸ்தரிப்பு குறித்த கருத்துகளில்: “சீனாவின் உள்ளுர் மாநிலங்களின் பொருளாதாரம், கரையோர மாநிலங்கள் போல்லாது பின்தங்கி போய் உள்ளது.  அத்துடன் மேற்கு சீனாவை சூழ உள்ள அரசுகளின் பொருளாதார வளர்ச்சியிலும் எமக்கு கரிசனை உள்ளது. இந்த வகையில் புதிய சந்தைப்படுத்தலையும் உற்பத்தியையும் உருவாக்குவதன் மூலம் வர்த்தக முயற்சிகளை செதுக்கி எடுப்பதே எமது நோக்கம்.  மேற்கு சீனப் பகுதிக்கும் கரையோர சீனப் பகுதிக்கும் இடையில் ஒரு பொருளாதார சுளர்ச்சியை ஏற்படுத்துவதே இதன் அடிப்படை” என்கிறார் China Institutes of Contemporary International Relations இன் பேராசிரியர்  Hu Shisheng.

நேபாள செய்தியாளர் ஒருவருக்கு செவ்வி அளிக்கையில் , சீனாவின் 2009 ஆம் ஆண்டு சீனாவில் இடம் பெற்ற நிதி நெருக்கடியை தொடர்ந்து பொருளாதார சுழற்சி சுமூக நிலைக்க வரவில்லை, சீனாவில் தொழிலாளர் செலவும் நிலத்தின் பெறுமானமும் அதிகரித்து போய் உள்ளது. அத்துடன் சூழல் மாசடைதல் குறித்த சட்டங்களால் அபிவிருத்தியும் தடைகளை கண்டு வருகிறது.

இதனால் உற்பத்தி நிறுவனங்கள் கரையோரங்களில் இருந்து இடம் பெயர்ந்து விட்டன. இந்த நிலையை கட்டுக்குள் கொண்டு வர புதிய பொருளாதாரத்தை அறுவடை செய்ய வேண்டிய நிலையில் சீனா உள்ளது. எமது பின் நிலத்தில் எமது பொருளாதாரத்தை சீர்செய்யும் அதேவேளை, அயல் நாடுகளையும் அபிவிருத்தியால் பயன் பெற வைப்பதே எமது திட்டம் என்று குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர்  Hu Shisheng.

இத்தகைய “இருதரப்பு வெற்றி” பொருளாதார ஊக்குவிப்பை வலியுறுத்தும் சீனா, அடுத்த முப்பது ஆண்டுகாலத்திற்கு உள்நாட்டு பொருளாதார உறுதித்தன்மையை எதிர்பார்க்கிறது.

இந்த நோக்கில் சர்வதேசம் முழுவதுமாக தனது பொருளாதார இராசதந்திர மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது ஆரம்பிக்கப்படும் AIIB கூட இந்த பொருளாதார சழற்ச்சியின் ஒரு பகுதியாகவே காட்ட சீனா முனைகிறது.

மேலைத்தேய முதலாளித்துவ கோட்பாடுகளை மையமாக கொண்ட நாடுகளோ, சீன பொருளாதார ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலமே தமது தலைமைத்துவத்தை பேணலாம் என்ற பார்வையை கொண்டுள்ளன.

தற்போது அமைதி எழுச்சியில் இருக்கும் சீனா, பொருளாதார வளச்சியின் உச்சமாக ஆயுத தளவாட உற்பத்தியிலும், ஏற்கனவே கொண்ட ஆட்பல நிலையையும் கருத்தில் கொண்டு பார்த்தால், பூகோள அதிகாரத்தை சீனா கையிலெடுக்கும் நிலை மிக விரைவில் வரலாம் என்ற பார்வையை அவை கொண்டுள்ளன.

அதேவேளை சீனாவின் வளர்ச்சியை ஏற்கனவே இடம்பெற்ற சோவியத் அனுபவத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் மேலைத்தேய ஆய்வாளர்கள், புதிய உத்திகள், எண்ணங்கள்,  கருத்துகள், உபயோகப்பொருட்கள் ஆகியவற்றின் வரவினால் சீனா மேலைத்தேய தலைமைத்துவத்திற்குகீழ்ப்படிந்தே ஆக வேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளனர்.

தமது தரப்பு நியாயத்திற்கு ஆதரவாக முதலாளித்துவ பொருளாதார கோட்பாட்டாளர் Joseph A Schumpeter என்பவரின் வாதத்தை முன்வைக்கின்றனர்.Joseph_Schumpeter_ekonomialaria

Joseph A Schumpeter அவர்களின் கருத்துப்படி “புதிய மாண்புடைய  எண்ணங்கள், கருத்துகள், உற்பத்தி பொருட்களை முதலாளித்துவமே இலாபநோக்கத்தை கருத்தில் கொண்டு முதலிட்டு தயாரிக்க வல்லது. ஸ்திர பொருளாதாரத்தில் நாட்டம் கொண்டவர்களால் இந்த நடவடிக்கையில் இறங்க முடியாது” என்பதாகும்.

மேலைதேய ஆய்வாளர்களின் பார்வையில் புதிய மாண்புடைய கலாசாரத்தை சீனா உருவாக்க முடியாது. ஏனெனில் அது மேலைத்தேயம் சம்பந்தப்பட்டது, மேலைத்தேய கலாச்சாரம் மேலைத்தேயத்தினாலேயே உருவாக்கப்பட வேண்டியது.

இதற்கு அவர்கள் கூறும் ஒர் உதாரணம் சீன வங்கிகளும் அவற்றின் வளர்ச்சிகளுமாகும். மேலை நாடுகளில் வங்கிகள் இன்று தமது செயற்பாடுகளை கையடக்கத் தொலைபேசிகளுடாக பணப்பரிவர்த்தனை செய்யும் நிலையை எட்டி உள்ளன. பழைய வங்கிக் கட்டடங்கள் சிறிது சிறிதாக குறைந்து போய் வருகின்றன.

தொடர்ந்து கணினி மென்பொருள் வங்கிகளின் ஆதிக்கம் கூட இன்னும் சில ஆண்டுகளில் இல்லாது போய்விடலாம். சீனா போன்ற நாடுகளில் அவற்றின் சனத்தொகை பரம்பல், குடி த்தொகை கணக்கீடு, குடிமக்களையும் அவர்களது தனிப்பட்ட விபரங்களை சேகரித்து சட்ட ஒழுங்கின் கீழ் கொண்டு வருவது என்பது ஒர் இமாலய வேலைத்திட்டமாகும்.

சீனாவில் இன்னமும், 70 வீதம் வரையான பின்தங்கிய கிராமப் பகுதிகள் உள்ளன. நாட்டில் வளர்ச்சி அடைந்த கரையோரப் பகுதிக்கும் உள்நாட்டிற்கும் இடையில் சமூக ஏற்றத்தாழ்வுகள் பல உள்ளன.  இதன் மூலம் ஏற்பட கூடிய இடைவெளி மேலைத்தேய வளர்ச்சியுடன் சீன பொருளாதாரம் இட்டு நிரப்ப முடியாத கட்டத்தை இன்னும் சில ஆண்டுகளில் அடையும்.

அதாவது மேலைத்தேய நாடுகளின் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம்  தொழில்நுட்ப ரீதியான புதிய கண்டுபிடிப்புகள், அவற்றின்பாலான சமூக பொருளாதார வளர்ச்சி  என்பன சீனாவை ஈடு செய்ய முடியாத நிலைக்கு கொண்டு செல்லும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

அது ஒருபுற மிருக்க,எதுஎவ்வாறு இருப்பினும் சீன பொருளாதார வளர்ச்சி மிகவும் நுணுக்கமாக கட்டிஅமைக்கப்பட்டு வரும் ஓர் பாரிய உலக அதிகார பதிலீடு ஆகும். இந்த பதிலீட்டு சக்தி தனது ஆதிக்கத்தை மிகவும் வலிய முறையில் கட்டமைத்து வருவதையும் பொதுவாக ஆய்வாளர்களால் உணரப்பட்டுள்ளது.

இதனூடாக மேலைத்தேய வளர்ச்சியை தன்னகத்தே கொள்ளடக்கும் சக்தி சீனாவுக்கு  உண்டு என்பதும் சீன சார்பு ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

பொருளாதார அரசியல் விரிவாக்கத்தின் மறு பகுதியான கடல் வழி பட்டுப்பாதையில் தென்சீன கடற்பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த வருடத்தில் தென்சீன கடற்பரப்பு மேலும் அதிகரித்த சர்ச்சைக்குரிய பிரதேசமாக மாறும் என்பது எதிர்வுகூறலாக உள்ளது.

தென்கிழக்காசியாவில் வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையேயான கடற்பகுதி சர்வதேச கடற்சட்ட விதிமுறைகள் குறித்த இழுபறிநிலை ஓர் முக்கிய அங்கமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சீனாவிலிருந்து மேற்கு நோக்கிய கடல்வழிப் பயணத்தில் தென்கிழக்காசிய நாடுகளிற்கு அப்பால், மிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சீனா கருத்தில் கொள்வது சிறீலங்காவையாகும்.

தற்போதைய இராசதந்திர உறவுகளில் திறமையாக வல்லரசுகளை கையாளும் நாடுகளில் ஒன்றாக சிறீலங்கா உள்ளது. தனது உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும், அந்த யுத்தத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களை அதன் சர்வதேச வரை முறைகளிற்கு அப்பால் வல்லரசுகளின் துணை கொண்டு உள்நாட்டு விசாரணைக்கான ஒப்புதலை பெற்று கொண்ட விடயம் இதற்கு ஓர் சான்றாகும்.

கடந்த வருட ஆகஸ்ட் நடுப்பகுதியில் மைத்திரிபால சிறீசேனவின் புதிய கூட்டு அரசாங்கம்  அமைந்த நிலையில், வோசிங்டன் போஸ்ட் பத்திரிகையில் “சிறீலங்காவின் புதிய அரசாங்கம் சீனாவை முறித்து கொண்டு வெளிவருமா?” என்ற கேள்வியுடன்  கட்டுரையொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதில் சீனா எவ்வாறு சிறீலங்காவில் பொருளாதார கட்டுமான துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது குறித்த புள்ளி விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எந்த அரசு மாறினாலும் சீனாவின் பிடியிலிருந்து சிறீலங்கா விடுபட முடியாத நிலையை, மேற்கு நாடுகள் நன்கு அறிந்துள்ளதை அந்த கட்டுரை எடுத்து காட்டியது.

அதேவேளை மனிதஉரிமை மீறல் விவகாரத்தில்  சிறீலங்காவினால் ஏற்றுக் கொள்ளக் கூடிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை பெற்று கொடுத்துள்ளதும், அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி தோமஸ் சானன் தனது வருகையின் போது புதிய சிறீலங்கா அரசை இருதரப்பு பங்குதாரர் உடன்படிக்கைக்கு அழைத்திருப்பதும், அதிபர் ஒபாமா அவர்கள் தனது பதவிக்காலம் முடியும் முன்னர் கிழக்கு நாடுகளுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தில், சிறீலங்காவும் பர்மாவும் முக்கிய இடம் பிடிப்பதாக அறிவித்திருப்பதும், சற்று அதிகமாகவே  இந்தியாவுக்கும் அப்பால் சிறீலங்காவுக்கு அமெரிக்கா உற்சாக மூட்டுவதாகவே கருதப்படுகிறது.

சிறீலங்காவை பொறுத்தவரை, தனது அமைதியும் பொறுமையும் மிக்க அணுகுமுறை மூலம் வெற்றி கொள்ள வேண்டியதைசீனா நன்கு உணர்ந்து செயற்படுகிறது. பிராந்தியப் பாதுகாப்பும்நிலையான தன்மையும் குறித்து வலியுறுத்தும் சீனா, இருதரப்பு வெற்றி பொருளாதார உடன்படிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

நன்கு ஆழ ஊடுருவி தனது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் சிறீலங்காவினால் இலகுவாக உதறித் தள்ளி விடமுடியாத நிலையில் சீனா தனது நிலையை எடுத்துள்ளது என கருதப்படுகிறது.

அண்மைய காலங்களில் உலகின் மாற்றங்களுக்கெல்லாம் மிக முக்கிய காரணியாக சீன நடவடிக்கைகள் இருந்து வருகிறது. தமிழ் மக்கள் மீதான இராணுவ நடவடிக்கையின் போது மேலை நாடுகள் தமது நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டு வருவதற்கு,  உலக வங்கியின் கடன் உதவி , ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொருளாதார திட்டமிடல்கள் ஆகியன  சிறீலங்காவை  கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தன.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட விரும்பாத சீன வெளியுறவுக் கொள்கையும் இலாப நோக்கம் கொண்ட கடன் வழங்கல்களும் சிறீலங்கா போன்ற நாடுகளை தாம் விரும்பியது போல் செயற்பட மேலும் வசதி செய்து தருவதாக அமைந்து விடுமா என்பது ஒரு கேள்வியாகும்.

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.